மன உளைச்சல்: TikTok-ல் லைக் வராததால் 18 வயது இளைஞர் தற்கொலை!

|

டிக்டாக்கில் லைக் வராத காரணத்தால் நொய்டாவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்

வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்

18 வயதான ஒருவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அவர் சமூக வலைத்தளங்களில் போதுமான லைக்குகள் வராத காரணத்தால் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்

தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்

அந்த இளைஞர் தனது தந்தையுடன் வசித்து வந்ததாகவும், இருவரும் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர்

சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர்

இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இளைஞர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தனர். இதில் பெரும்பாலோனோர் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகின்றனர். அதேபோல் தங்களது வீடியோக்களை பிரதான சமூக வலைதளமாக இருக்கும் டிக்டாக்கில் பதிவிட்டு தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஷைலேஷ் தோமர் கூறுகையில்

போலீஸ் அதிகாரி ஷைலேஷ் தோமர் கூறுகையில்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஷைலேஷ் தோமர் கூறுகையில், இந்த இளைஞரும் தனது வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டு வந்துள்ளார். இருப்பினும் கடந்த சில நாட்களாக, அவரது வீடியோக்களுக்கு போதுமான லைக்குகள் கிடைக்கவில்லை என அவர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது தந்தையுடன் வருத்தம் தெரிவித்துள்ளார் என கூறினார்.

போலீஸாருக்கு வந்த அழைப்பு

போலீஸாருக்கு வந்த அழைப்பு

கடந்த வியாழக்கிழமை மாலை அந்த இளைஞனின் தந்தையிடம் இருந்து போலீஸாருக்கு அழைப்பு ஒன்று வந்தது எனவும். அதில் தன் மகன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை

தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை

அதன்பேரில் ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் அவர் டிக்டாக்கில் குறைவான லைக்குகளை பெற்றதால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என தெரியவந்துள்ளது.

அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை

அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை

அதேபோல் போலீஸ் அதிகாரி அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கடந்த சில தினங்களாக தனது வீடியோக்களுக்கு லைக்குகள் எதுவும் கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்ததாக கூறியுள்ளனர். அதேபோல் வீடியோக்களை உருவாக்குவதற்கு அவர் இரவு முழுவதும் தனது நேரத்தை அதில் செலவிட்டு வந்ததாக கூறியுள்ளனர்.

உடலை மீட்டு பிரேத பரிசோதனை

உடலை மீட்டு பிரேத பரிசோதனை

அவரது உடலை மீட்க போலீஸ் குழு கதவை உடைத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் கூறியதுபடி, கடந்த சில நாட்களாக அவரது வீடியோக்களுக்கு போதுமான லைக்குகள் கிடைக்காததால் அவர் மனச்சோர்வடைந்தது இருந்தது தெரியவந்துள்ளது.

தற்கொலைக் குறிப்பு

தற்கொலைக் குறிப்பு

அதனால்தான் அவர் தற்கொலைக் குறிப்பு எதுவும் அந்த இடத்திலிருந்து மீட்கப்படவில்லை எனவும் அந்த இளைஞர் லைக்குகளுக்காக ஏன் இவ்வளவு தீவிர நடவடிக்கை எடுத்தார் எனவும் விசாரணை நடந்து வருகிறது போலீஸ் கமிஷனர் குமார் ரன்விஜய் சிங் தெரிவித்தார்.

யாருக்கும் எதிராக அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை

யாருக்கும் எதிராக அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை

அந்த இளைஞரின் குடும்பம் நாடியாவில் உள்ள மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தது. சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காக இளைஞர்களும் சகாக்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், அதேபோ் அவரது தந்தை யாருக்கும் எதிராக அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
young suicide for not getting enough likes on TikTok

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X