Just In
- 19 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 23 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 23 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 1 day ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Automobiles
நடிகர்கள், அரசியல்வாதிகள்னு போட்டி போட்டு வாங்குறாங்க... ரேஞ்ஜ் ரோவர் காருக்கு இப்பவே விற்பனை நிறுத்தம்!
- News
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதா பொது சிவில் சட்டம்? முஸ்லிம் தனிநபர் வாரியம் கடும் எதிர்ப்பு!
- Movies
முதல் 1000 கோடி பிளஸ் இண்டஸ்ட்ரி ஹிட்... விஜய்யின் லியோ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நாங்களும் எடுப்போம் நடவடிக்கை: நெட்ஃபிளிக்ஸ், டிக்டாக் சேவை கிடையாது- ரஷ்யாவுக்கு கிடுக்குப்பிடி!
உக்ரைன் மீது ரஷ்யா தொடுக்கும் போரை கண்டிக்கும் விதமாக ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறும் ஊடக நிறுவனங்களில் டிக்டாக் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இணைந்துள்ளன.

டிக்டாக் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் சேவை
டிக்டாக் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இன்க். ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை திரும்பப் பெறும் நிறுவனங்களில் இணைந்திருக்கின்றன. டிக்டாக் ரஷ்யாவில் லைவ் ஸ்ட்ரீமிங்கை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது போலி செய்தி பரப்புதல், உக்ரைன் மீதான படையெடுத்து குறித்த தகவல்களை குறைப்பது மற்றும் கட்டுப்படுத்தவதை நோக்கமாக கொண்டுள்ளது. சட்டத்தின் பாதுகாப்பு தாக்கங்களை மதிப்பாய்வு செய்யும் போது வீடியோ சேவையில் லைவ்ஸ்ட்ரீமிங் மற்றும் புதிய உள்ளடக்கத்தை இடைநிறுத்துவதைத் தவிர தங்களு வேறு வழியில்லை என நிறுவனம் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா போர்
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருவதோடு பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடக்கும் போர் தொடர்பாக ஏணைய வீடியோக்கள் வெளியாகி பரவுகின்றன. இதை குற்றம்சாட்டிய ரஷ்ய அரசு போலி செய்திகளை வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

ரஷ்ய அரசின் புதிய சட்டம்
இதையடுத்து டிக்டாக் செயலி, போர் சூழலில் வாழ்ந்து தனிமையை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் தங்கள் தளம் சிறு ஆறுதலாக இருந்தாலும் ரஷ்ய அரசின் புதிய சட்டம் மூலம் தங்கள் சேவை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது எனவும் ரஷ்யாவில் நேரடி சேவை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் பரிமாற்ற சேவை தொடரும் எனவும் டிக்டாக் தெரிவித்திருக்கிறது. அதேசமயத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக ரஷ்யாவில் சேவையை நிறுத்தி வைப்பதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்திருக்கிறது.

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு தடை
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு ரஷ்யா தடை விதித்து அறிவித்துள்ளது. ரஷ்யாவின் அறிவிப்பையடுத்து அந்நாட்டு மக்கள் உண்மை தகவலை அறிவதில் சிக்கல் நேரிடும் என பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா குற்றம்சாட்டி இருக்கிறது. பல்வேறு முக்கிய செய்தி நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளை மாஸ்கோவில் நிறுத்தி வைத்து அறித்திருக்கின்றன. இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் குறித்து வதந்தி பரப்புவோர்களுக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும்படியில் சட்டத்தில் வழிவகை செய்யப்படும் என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டு இருக்கிறார்.

தற்காலிமாக நிறுத்துவதாக நிறுவனம் அறிவிப்பு
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் போன்கள் விற்பனையை தற்காலிமாக நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரை தொடர்ந்து பல்வேறு பொது நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தி வருகிறது. மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுவத்துவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரஷ்யாவின் நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாகவும், ரஷ்யாவினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு துணை நிற்போம் எனவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நிறுவனங்கள் போட்ட கட்டுப்பாடு
அதேபோல் ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்வதற்கும் மானிடைஸ் செய்வதற்கும் மெட்டா தடை விதித்து அறிவித்திருக்கிறது. அதேபோல் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பணம் பெறுவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் ஆன கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை மெட்டா வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமின்றி ரஷ்ய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்களில் வாயிலாக கூகுள் இணையதளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான செயலிகளின் மூலமாக பெரும் வருமானத்துக்கு தடை விதித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளத குறிப்பிடத்தக்கது. நாட்டில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்திருக்கிறது அதன்படி உக்ரைனில் கூகுள் மேப்ஸ் லைவ் டிராஃபிக் டேட்டாவை கூகுள் தற்காலிமாக முடக்கி உள்ளது. குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470