உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!

|

ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) கமிஷனர் பிரெண்டன் கார், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டிக்டாக்கை ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றும்படி குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர் கொள்கைகளுக்கு டிக்டாக் இணங்கவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

டிக்டாக்கிற்கு நிரந்தர தடை வேண்டும்

டிக்டாக்கிற்கு நிரந்தர தடை வேண்டும்

வீடியோ பகிர்வு தளமான டிக்டாக்கிற்கு நிரந்தர தடை விதிக்கும்படி அமெரிக்க அரசு அதிகாரி கோரிக்கை விடித்துள்ளார். Federal Communications Commission (FCC) கமிஷனர் பிரெண்டன் கார் டிக்டாக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூகுள் மற்றும் ஆப்பிளுக்கு கடிதம் எழுதியுள்ளார். பைட் டான்ஸுக்கு சொந்தமான டிக்டாக், ஆப்பிள் மற்றும் கூகுளின் கொள்கைக்கு இணங்கவில்லை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு அனுப்பிய கடிதம்

ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு அனுப்பிய கடிதம்

பிரெண்டன் கார், ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவலை விரிவாக பார்க்கலாம். "டிக்டாக்கில் காணப்படும் மேலோட்டமான விஷயம் மட்டும் அதில் இல்லை. இது வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை பகிர்வதற்கான ஒரு பயன்பாடல்ல. டிக்டாக் அதிநவீன கண்காணிப்பை கருவியாக செயல்படுகிறது. இதன்மூலம் பயனர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கிய தரவுகள் சேகரிக்கப்படுகிறது".

ஏற்றுக் கொள்ள முடியாத தேசிய பாதுகாப்பு ஆபத்து

ஏற்றுக் கொள்ள முடியாத தேசிய பாதுகாப்பு ஆபத்து

டிக்டாக் சேகரிக்கும் தரவு பெய்ஜிங்கிடம் (சீனா) ஒப்படைக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்றுக் கொள்ள முடியாத தேசிய பாதுகாப்பு ஆபத்து ஏற்படுத்தப்படுகிறது என பிரெண்டன் கார் குறிப்பிட்டார். ஆப் ஸ்டோர்கள் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்யும் அமெரிக்கர்களின் தரவுகள் அனைத்தும் பெய்ஜிங்கில் உள்ள பைட்டான்ஸ் அதிகாரிகள் அணுகி வருவதாக பிரெண்டன் கார் கடிதத்தில் குறிப்பிட்டார்.

புகார்களை மேற்கோள் காட்டி கடிதம்

புகார்களை மேற்கோள் காட்டி கடிதம்

மேலும் Buzzfeed News செய்தியை அந்த கடிதத்தில் மேற்கோள் காட்டி இருக்கிறார். டிக்டாக் அதிகாரிகள் அமெரிக்கர்களின் முக்கிய தரவுகளை அணுகியதாக Buzzfeed News சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற புகார்களை மேற்கோள் காட்டி தான் இந்தியாவும் TikTok பயன்பாட்டை தடை செய்தது.

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்

டிக்டாக் பயன்பாட்டை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கும் படி கடுமையாக வலியுறுத்தி ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு பிரெண்டன் கார் கடிதம் எழுதி இருக்கிறார். அப்படி அகற்றத் தவறும் பட்சத்தில், ஜூலை 8 2022 க்குள் தனித்தனியான பதில்கள் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயங்கும் டிக்டாக்

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயங்கும் டிக்டாக்

அமெரிக்காவில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் டிக்டாக் இயங்கி வருகிறது. குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களை டிக்டாக் தன் வசம் வைத்திருக்கிறது. டிக்டாக் பயனர்களின் தரவுகள் அனைத்தும் சீனாவிலும் சீன ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு ஊர்ஜித குற்றச்சாட்டுகள் முன்வைத்து டிக்டாக் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைய முயற்சி

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைய முயற்சி

இந்தியாவில் ஏணைய வரவேற்பு பெற்ற டிக்டாக் செயலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. டிக்டாக் செயலிக்கு இணையாக பல செயலிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் எந்த செயலியும் டிக்டாக் அளவிற்கு பிரபலமடையவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதற்கு மத்தியில் டிக்டாக் வேறு ஒரு நிறுவனத்தின் கூட்டமைப்புடன் இந்தியாவில் வேறு பெயரில் களமிறங்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

தீர்மானத்தில் முடிவாக இருக்கும் அரசு

தீர்மானத்தில் முடிவாக இருக்கும் அரசு

சீனாவில் பைட் டான்ஸ் க்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதித்த பிறகு மீண்டும் அறிமுகம் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்திய அரசு விடாப்படியாக தீர்மானத்தில் முடிவாக இருக்கிறது. ஆனால் டிக்டாக் தடை செய்யப்பட்ட பல நாடுகளில் டிக்டாக் மீண்டும் அறிமுகமாகிவிட்டது. இந்த நிலையில் பைட்டான்ஸ் இந்திய நிறுவனத்திடம் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி மீண்டும் இந்தியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tiktok a Chinese Spyware: US Govt Send Letter to Apple and Google to Remove App From App Store

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X