நீங்களுமா?- "இளைஞர்களை வழித்தவற செய்கிறது"- தாலிபான்கள் தடை செய்த பிரபல மொபைல் செயலிகள்!
ஆப்கானிஸ்தானில் வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் மற்றும் மொபைல் கேம் செயலியான பப்ஜி ஆகியவற்றை தாலிபான்கள் கடந்த வியாழக்கிழமை முதல் தடை செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமுதல் தாலிபான்கள் முன்னதாகவே இசை, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தனர்.

பிரபலமாக இருக்கும் தொலைபேசி பயன்பாடுகள்
பொழுதுபோக்கிற்கு என்பதில் பெரிய நாட்டங்கள் செலுத்தாத ஆப்கானியர்கள் இடையே தொலைபேசி பயன்பாடுகள் என்பது பிரபலமாக இருக்கிறது. அறிக்கையில் வெளியான அமைச்சரவை விண்ணப்பங்கள் தெரிவித்த தகவலின்படி, இளம் தலைமுறையை வழித் தவறச் செய்தன என்று குறிப்பிட்டு டிக்டாக் பப்ஜி செயலியை தடைசெய்யும்படி தொலைத் தொடர்பு அமைச்சத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"ஒழுக்கமற்ற விஷயங்களை" ஒளிபரப்புவதை நிறுத்தும் படி அறிவுறுத்தல்
செய்தி மற்றும் மத நிகழ்ச்சிகளை தவிர வேறு எதுவும் காட்டப்படவில்லை என்ற விதிகள் இருந்த போதிலும் தொலைக்காட்சி சேனல்களில் "ஒழுக்கமற்ற விஷயங்களை" ஒளிபரப்புவதை நிறுத்தும் படி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது என ஏஎன்ஐ செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து சுமார் 94% ஆப்கானியர்கள் தங்கள் வாழ்க்கையை துன்பமாக கருதும் அளவுக்கு மோசமானதாக மதிப்பிட்டிருக்கின்றனர் என பிப்ரவரி மாதம் வெளியான கல்லூர் கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன என தகவல்கள் கூறுகிறது.

ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இணைய அணுகல்
மறுபுறம் சுமார் 38 மில்லியன் மக்கள் வசிக்கும் ஆப்கானிஸ்தான் முழுவதும் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இணைய அணுகலை பெற்றிருக்கின்றனர் என சுயாதீன தரவு சேகரிப்பாளரான DataReportal-ன் புள்ளி விவரங்கள் ஜனவரி மாதம் வெளியிட்டதாக ஏஎஃப்சி செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் சுமார் நான்கு மில்லியன் சமூகவலைதள பயனர்கள் இருக்கின்றனர். இங்கு பேஸ்புக் தளம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவில் சேவைகளை நிறுத்துகிறது
மறுபுறம் உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருவதோடு பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடக்கும் போர் தொடர்பாக ஏணைய வீடியோக்கள் வெளியாகி பரவுகின்றன. இதை குற்றம்சாட்டிய ரஷ்ய அரசு போலி செய்திகளை வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

பரிமாற்ற சேவை தொடரும் என டிக்டாக் தகவல்
இதையடுத்து டிக்டாக் செயலி, போர் சூழலில் வாழ்ந்து தனிமையை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் தங்கள் தளம் சிறு ஆறுதலாக இருந்தாலும் ரஷ்ய அரசின் புதிய சட்டம் மூலம் தங்கள் சேவை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது எனவும் ரஷ்யாவில் நேரடி சேவை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் பரிமாற்ற சேவை தொடரும் எனவும் டிக்டாக் தெரிவித்திருக்கிறது. அதேசமயத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக ரஷ்யாவில் சேவையை நிறுத்தி வைப்பதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்திருக்கிறது.

தடை செய்யப்படும் டிக்டாக் செயலி
பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் மட்டும் சுமார் 39 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் வாட்ஸ்அப், முகநூலிற்கு பிறகு அதிக பதிவிறக்கங்கள் கொண்ட செயலிகாவும் டிக்டாக் இருக்கிறது. டிக்டாக் செயலியில் அநாகரீமான பதிவுகளும், ஆபாசமான வீடியோக்களும் அதிகளவு வருவதாக பாகிஸ்தான் அரசுக்கு புகார்கள் குவிந்துள்ளது. இந்த செயலியில் இணைய சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து டிக்டாக் செயலியில் இருக்கும் அநாகரீக, ஆபாச வீடியோக்களை அகற்றும்படி பாகிஸ்தான் அரசு டிக்டாக் நிறுவனத்திடம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் டிக்டாக் நிறுவனம் எந்த நடவடிக்கை எடுக்காததையடுக்கு டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்து அறிவித்துது. பாகிஸ்தான் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தொலை தொடர்புத் துறை அறிவித்தது.


Click it and Unblock the Notifications