மீண்டும் வருமா டிக்டாக்? இந்திய அரசுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேசி வருவதாக தகவல்.!

|

டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்தியா சீனா எல்லை பகுதியான லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. அந்த சமயம் இந்தியாவில் டிக்டாக், பப்ஜி, யூசிபிரவுசர் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு சீன பொருட்களை தவிர்க்கும் படியான உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க அரசு முணைப்போடு செயல்படத் தொடங்கியது.

 இந்திய அரசு வெளியிட்ட தகவல் என்னவென்றால்

மேலும் இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட தகவல் என்னவென்றால், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. எனவே இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மக்கள் பெரும்பாலான

இந்தியாவில் பல்வேறு மக்கள் பெரும்பாலான நேரத்தை டிக்டாக் செயலியில் செலவிட்டு வந்தனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக டிக்டாக் செயலியில் லைக் வரவில்லை என சிலர் விபரீத முடிவுகளை எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. அந்த அளவிற்கு டிக்டாக்கின்ரசிகர்களாக அதன் பயனர்கள் இருந்தனர்.

வெறும் ரூ.7000க்கு புதிய 5ஜி போன்.. ரியல்மி வெளியிட்ட அட்டகாச தகவல்.. வெயிட் பண்ண முடியலையேப்பா..வெறும் ரூ.7000க்கு புதிய 5ஜி போன்.. ரியல்மி வெளியிட்ட அட்டகாச தகவல்.. வெயிட் பண்ண முடியலையேப்பா..

ல் டிக்டாக் டெவலப்பரான பைட்டேன்ஸ்

இந்நிலையில் டிக்டாக் டெவலப்பரான பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் நோக்கில் இந்திய அரசுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mi TV Webcam விலை இவ்வளவு தானா? எந்த ஆண்ட்ராய்டு டிவியாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.. சூப்பர்ல..!Mi TV Webcam விலை இவ்வளவு தானா? எந்த ஆண்ட்ராய்டு டிவியாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.. சூப்பர்ல..!

நிச்சயம் டிக்டாக்

மேலும் இதை தி பிரிண்ட் நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது, அதாவது நிச்சயம் டிக்டாக் செயலிக்கான தடை நீக்கப்படும் என்று பைட்டேன்ஸ் எதிர்பார்ப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபோனுக்கே டஃப் கொடுக்கும் போலயே இந்த அல்காடெல் 1 (2021).. ஆரம்ப விலையே வெறும் ரூ.5,227 தான்..ஜியோபோனுக்கே டஃப் கொடுக்கும் போலயே இந்த அல்காடெல் 1 (2021).. ஆரம்ப விலையே வெறும் ரூ.5,227 தான்..

 சமூக ஊடகங்கள், ஓடி

வெளிவந்த தகவலின்படி, சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள், டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சமூக ஊடக நெறிமுறைகளை பின்பற்ற டிக்டாக் தயார் எனவும் இந்திய அரசுடனான பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

டிக்டாக்கின் இடத்தை நிரப்ப பல

ஆனாலும் டிக்டாக்கின் இடத்தை நிரப்ப பல முன்னணி நிறுவனங்களும் செயலிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதில் பேஸ்புக் டிக்டாக் இடத்தை பிடித்துவிட வேண்டும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

ஏர்டெல் சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது.. அதுக்கு பதில் 'இந்த' திட்டமா?ஏர்டெல் சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது.. அதுக்கு பதில் 'இந்த' திட்டமா?

இன்ஸ்டாவில் இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் அறிமுகம்

நம் அனைவருக்கும் தெரிந்த இன்ஸ்டாவில் இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. டிக்டாக் தடைக்கு பிறகு இந்தியாவில் இன்ஸ்டா ரீல்ஸ் பெரும் வரவேற்பை பெறும் என அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆடியோவுடன் கூடிய 15 வினாடி வீடியோ இன்ஸ்டா ரீல்ஸில் உருவாக்க முடியும். டிக்டாக்குக்கு பதிலாக பலர் இன்ஸ்டா ரீல்ஸை ஏற்றுக் கொண்டனர் என்றாலும் முழுமையாக டிக்டாக் இடத்தை பூர்த்தி
செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
TikTok reports that talks with the Indian government to lift the ban: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X