Home
News

இந்தியாவிற்குள் மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக் ஆப்ஸ்.. ஆனால் 'இந்த' பெயரில் தான் அறிமுகமாகும்..

இந்தியா சீன மொபைல் ஆப்ஸ்களை நாட்டில் தடை செய்த பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்பு PUBG மொபைல் கேம் இந்த ஆண்டு பேட்டில் கிரௌண்ட் மொபைல் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு இந்தியாவின் ஒப்புதலுடன் நாட்டில் களமிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான, பிரபலமான ஷார்ட் வீடியோ பயன்பாடான டிக்டாக் பயன்பாடும் விரைவில் இந்தியாவில் திரும்பக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

'டிக்டாக்' என்ற பெயரை மாற்றம் செய்கிறதா பைட்டான்ஸ்?

'டிக்டாக்' என்ற பெயரை மாற்றம் செய்கிறதா பைட்டான்ஸ்?

சமீபத்தில் வெளியான தகவலின் படி, இது முன்பு அழைக்கப்பட்ட 'டிக்டாக்' என்ற பெயரையும் மாற்றம் செய்து இந்தியாவிற்குள் களமிறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. டிக்டாக் பயன்பாட்டின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் நீண்ட காலமாகத் தனது பயன்பாட்டை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இப்போது அதற்கான வாய்ப்பை நிறுவனம் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டது போல் தெரிகிறது.

TickTack எனும் பெயருக்கு மாறப்போகிறதா TikTok?

TickTack எனும் பெயருக்கு மாறப்போகிறதா TikTok?

இந்திய அரசாங்கம் அறிமுகம் செய்த புதிய காப்புரிமையை பைட் டான்ஸ் பின்பற்றுவதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, முன்பு இந்தியாவில் பயன்படுத்திய பெயரை TickTack எனும் பெயருக்கு மாற்றம் செய்யப்போவதாகக் காப்புரிமை விண்ணப்பத்திற்கு நிறுவனம் விண்ணப்பித்து உள்ளது. இதன்படி டிக்டாக் பயன்பாடு இந்தியாவில் விரைவில் TickTack என்ற பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது தகவல் தொழில்நுட்ப விதிகளை டிக்டாக் பின்பற்றும்

புது தகவல் தொழில்நுட்ப விதிகளை டிக்டாக் பின்பற்றும்

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட நேரத்தில் இருந்தே பைட் டான்ஸ் நிறுவனம் தனது பயன்பாட்டை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய முயற்சி செய்து வந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இப்போது, இந்தியாவில் அமல்படுத்தப்பட புது தகவல் தொழில்நுட்ப விதிகளை பைட் டான்ஸ் ஏற்றுச் செயல்படுவதாக ஒப்புக் கொண்டதுடன், இதற்கென ஒரு குறைதீர்க்கும் அதிகாரியையும் நிறுவனம் நியமித்துள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் TickTack ஆப்ஸ்

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் TickTack ஆப்ஸ்

புதிய பெயருடன் புதிய பொலிவுடன் பைட் டான்ஸின் புதிய TickTack பயன்பாடு இந்தியாவில் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், நமக்குக் கிடைத்த தகவலின் படி, மிக விரைவில் நிறுவனம் தனது புதிய TickTack ஆப்ஸை களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
TikTok May Return To India As TickTock : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X