தூசி தட்டப்படும் கோப்புகள்- டிக்டாக், வீ-சாட் தடை மறுபரிசீலனை!

|

சீன வீடியோ பயன்பாட்டை தடைசெய்ய முயற்சித்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பிடென் நிர்வாகத்தால் மறுபரிசீலனை செய்யப்பட இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்களுக்காக பல சீன பயன்பாடுகளை மதிப்பாய்வு செய்ய நிர்வாக உத்தரவுகளை செயல்படுத்தியுள்ளது.

டிக்டாக், வீ-சாட் உள்ளிட்ட பிற சீன பயன்பாடுகள்

டிக்டாக், வீ-சாட் உள்ளிட்ட பிற சீன பயன்பாடுகள்

டிக்டாக், வீ-சாட் உள்ளிட்ட பிற சீன பயன்பாடுகள் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கிறதா, சீன ராணுவத்துடனஅ இணைந்து செயல்படுகிறதா என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வர்த்தகத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையம்

நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையம்

திறந்த இயங்கக்கூடிய நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையத்தை ஊக்குவிப்பதற்கும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிக்டாக் தடை செய்வதற்கான டிரம்பின் முயற்சி

டிக்டாக் தடை செய்வதற்கான டிரம்பின் முயற்சி

முன்னதாக 2020 ஆம் ஆண்டு டிக்டாக் தடை செய்வதற்கான டிரம்பின் முயற்சிகள் நீதிமன்றங்களால் தடுக்கப்பட்டன. இதற்கிடையில் வந்த ஜனாதிபதி தேர்தலால் இந்த விவகாரம் பெரிதாகவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் டிக்டாக் மற்றும் வீ-சாட் உள்ளிட்ட ஆப்களை பொதுமக்கள் புதிதாக பதிவிறக்கம் செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை பிறப்பித்தார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுகள் திரும்பப் பெறுவதாகவும், ஆப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வர்த்தக பிரிவு மற்றும் பிரத்யேக பாதுகாப்பு குழு ஆராய உத்தரவிட்டும் அறிக்கை வெளியாகின. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த உத்தரவு அந்நாட்டு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவை அடுத்து அமெரிக்காவில் தடை

இந்தியாவை அடுத்து அமெரிக்காவில் தடை

இந்தியாவை அடுத்து அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவு குறித்து பார்க்கலாம். அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவைகள் செயலி மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற அச்சுறுத்தல் காரணமாக சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதித்துள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

டிக்டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி

டிக்டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி

அமெரிக்க உத்தரவுபடி டிக்டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட்டான்ஸ் 90 நாட்களில் அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் தடை தொடராத என்பதாகும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்காதபட்சத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டார். இதையடுத்து டிக்டாக் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்தது.

இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக காரணமாக இந்தியாவில் பல்வேறு சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏணைய பிரதான செயலிகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபரிசீலனை செய்து அமெரிக்காவில் டிக்டாக் மீண்டும் கொண்டு வரப்பட்டால் இந்தியாவிலும் அதேபோல் கொண்டுவரப்படுமா என டிக்டாக் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு தொடங்கியுள்ளது.

Source: voanews.com

Best Mobiles in India

English summary
Joe Biden Order to Review Tiktok, WeChat and Other APPs Ban

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X