புதிய கண்டுபிடிப்பு: பயோனிக் கண்.! பார்வை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.!

|

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இனி பார்வையற்றவர்களும் தங்களை சுற்றி உள்ளவர்களை காண பயோனிக் கண்ணை கண்டறிந்து மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

சொல்ல வேண்டும் என்றால்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலகிலேயே முதன்முறையாக மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பயோனிக் கண் என்ற மருத்துவ அறுவை சிகிச்சையை

கண்டறிந்துள்ளனர்.

 சிகிச்சை மூலம் பிறவிலேயே

அதாவது இந்த அறுவை சிகிச்சை மூலம் பிறவிலேயே கண் தெரியாதவர்களுக்கும் கண் பார்வை கிடைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவு

நீண்ட காலமாக நடத்திய

வெளிவந்த தகவலின்படி மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள், நீண்ட காலமாக நடத்திய ஆய்வின் முடிவாகவே தற்போது பயோனிக்

கண் மூலம் பார்வையற்றோர் இனி இந்த உலகை காண முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

ள்ளவற்றில் இருந்து வரும்

இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்வோர், தங்களது தலையில் பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட கருவி ஒன்றை பார்வையற்றோர் அணிந்து கொள்ள வேண்டும் அதில் கேமரா மற்றும் wireless transmitter இருக்கும் எனவும், அவர்களின் மூளையிலும் 9 மி.மீ tiles தொகுப்பு பொருத்தப்பட்டிருக்கும் எனவும்,அதன் மூலம் எதிரில் உள்ளவற்றில் இருந்து வரும் சிக்னல் கொண்டு இந்த கருவி செயல்பட்டு சுற்றி உள்ள பொருட்கள் அவர்களது கண்களுக்கு தெரியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.

கண் செயற்றை உறுப்பு

மேலும் இந்த பயோனிக் கண் செயற்றை உறுப்பு போன்றே செயல்பட்டு அவர்களுக்கு பார்வையை கொடுக்கும் எனவும்,இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், குறைவான பக்க விளைவுகளே ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா?

 இந்த கருவிகளை அதிகளவில் தயாரிக்க

மேலும் இந்த கருவிகளை அதிகளவில் தயாரிக்க நிதியுதவியை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மெல்போர்னில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அதன் முதல் மனித மருத்துவ பரிசோதனைக்காக அதை இப்போது அடுத்த

கட்டத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் தயாராகி வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
World's First Bionic Eye That Can Make Blind People To See 100 Percentage: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X