உஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா?

|

இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது. இதனால் நிலைகுழைந்த இளைஞர் இருசக்கர வாகனத்தோடு குளத்துக்குள் விழுந்தார்.

22 வயது இளைஞர்

22 வயது இளைஞர்

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தவானந்தி கிராமத்தை சேர்ந்தவர் சரத், 22 வயதான இவர் நேற்றைய முன்தினம் தனது கிராமத்தில் இருந்து குப்பேகட்டே பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது

பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது

குப்பேட்டே கிராமத்தை நோக்கி சரத் பயணதித்துக் கொண்டிருந்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் திடீரென வெடித்து சிதறியது. இதனால் நிலைகுலைந்து போன சரத் இருசக்கர வாகனத்தோடு அருகில் இருந்த குளத்துக்குள் விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தின் சரத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத், தொடையில் பலத்த காயத்துடன் உயிர்பிழைத்தார். பின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சீன தயாரிப்பு மொபைல்

சீன தயாரிப்பு மொபைல்

சரத் பயன்படுத்திய சீன தயாரிப்பு மொபைல் என்பதும் அதை அவர் பெங்களூருவில் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. மொபைல் அதிக சூடாகி வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ATM பரிவர்த்தனை தோல்வியுற்றதா? பணம் வரவில்லையா? எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது?

தொடரும் செல்போன் வெடிப்ப செய்திகள்

தொடரும் செல்போன் வெடிப்ப செய்திகள்

அதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம்.

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்ன.,

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்ன.,

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால், செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும்

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும்

எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

குறைந்த விலை பேட்டரி

குறைந்த விலை பேட்டரி

குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தடுக்கவும் மேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mobile Exploded in the Pant Pocket During Bike Ride in Karnataka

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X