ஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.!

ஜியோ நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் - மாதம் - ரூ.130

|

ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலண்டு வருவாய் அறிக்கைளை வெளியிட்டுள்ளது, குறிப்பாக கடந்த ஆண்டு வருமானத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் அதிகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது இந்த ஜியோ நிறுவனம், காரணம் குறைந்த விலையில் சிறந்த டேட்டா நன்மை மற்றும் கால் அழைப்புகளை வழங்குவது தான்.

ஜியோவின் டிசம்பர் 31, 2018-வரை வருமானம்: கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.!

டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இந்த காலண்டில் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது

இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 12.4 சதவிகிதம் அதிகம் ஆகும், மேலும் வருடாந்திர அடிப்படையில் 50.9 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது அந்நிறுவனம்.

ரூ.831 கோடி

ரூ.831 கோடி

குறிப்பாக மூன்றாவது காலாண்டை பொருத்த வரை ஜியோவின் நிகர லாபம் ரூ.831 கோடியாகும், இது காலண்டு வாக்கில் 22.1 சதவிகிதமும், வருடாந்தில அடிப்படையில் 65 சதவிகிதம் அதிகம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

ஜியோவின் சேவை வருவாய்

ஜியோவின் சேவை வருவாய்

மேலும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் வகையில் ஜியோவின் சேவை வருவாய் 12.4 சதிவிகிதம் அதிகரித்து ரூ.12.252 கோடி ஈட்டியிருக்கிறது. குறிப்பாக டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோவின்
மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது, முந்தைய காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 25.23-கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 வருவாய் மற்றும் பயன்பாடு:

வருவாய் மற்றும் பயன்பாடு:

ஜியோ நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் - மாதம் - ரூ.130

ஜியோ வாடிக்கையாளர்களின் மொத்த வயர்லெஸ் டேட்டா - 864கோடி

தினசரி ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் பயன்பாடு- 63,406 கோடி
நிமிடங்கள், மாதம் ஒரு வாடிக்கையாளர் 794 நிமிடங்கள்

ஜியோ பயனர்களின் வீடீயோ பயன்பாடு - மாதம் - 460கோடி மணி நேரம்

ஜியோ பயனர்களின் மாதாந்திர டேட்டா பயன்பாடு - 10.8 ஜி.பி. சராசரி

Best Mobiles in India

English summary
Reliance Jio gains Rs 831 crore profit in Q3; adds 27.9 million subscribers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X