சந்திராயன்-2 ஏவுவதை பார்க்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்.!

கடந்த 2008ம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் நிலவில் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. சந்திராயன்-1 விண்கலம் நிலவை சுற்றி மட்டுமே வந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், சந்திராயன்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளையும் சந்திராயன்-1 விண்கலம் பூமிக்கு தகவல் அனுப்பியது.

சந்திராயன்-2 ஏவுவதை பார்க்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்.!

கடந்த 2008ம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் நிலவில் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. சந்திராயன்-1 விண்கலம் நிலவை சுற்றி மட்டுமே வந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும் தங்களின் விண்கலத்தை நிலவில் இறங்கியுள்ளன. இருந்தாலும் இந்தியாவின் சந்திராயன் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

நிலவில் தரை இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் சந்திரயான் 2 விண்கலம், வருகிற 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணி அளவில் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்நிலையில், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை நேரில் கண்டுகளிப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு நள்ளிரவு தொடங்குகிறது.

சந்திராயன்-2:

சந்திராயன்-2:

சந்திராயன்-2 திட்டத்தில் நிலவில் செயற்கைகோளை இறங்கி ஆய்வு செய் இஸ்ரோ திட்டமிட்டது. முதல்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக சந்திராயன் விண்கலம்-2 ஏவுதல் அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களுக்கு பிறகு தற்போது வரும் 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகின்றது.

மீண்டும் ஒத்திவைப்பு:

மீண்டும் ஒத்திவைப்பு:

சந்திராயன்-2 விண்கலம் அக்டோபருக்கு பதிலாக டிசம்பர் மாத்தில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1ஹெச் செயற்கைகோள் ஏவப்பட்ட போது, வெப்பத் தகடுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டில் இருந்து செயற்கைகோளை பிரித்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாத நிலை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.

ஜிசாட் 6 செயற்கை கோள் இணைப்பு துண்டிப்பு:

ஜிசாட் 6 செயற்கை கோள் இணைப்பு துண்டிப்பு:

இஸ்ரோ சார்பில் ஏவப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோள் விண்ணிற்கு ஏவப்பட்டது. தரைக்கப்பட்டு மையத்தில் இருந்து அதன் தொலைத்தொடர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக்கோளை நிலை நிறுத்துவதிலும், தகவல்களை பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டது.

ஆன்லைன் முன்பதிவு:

ஆன்லைன் முன்பதிவு:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதி அன்று சந்திரயான் 2 நிலவில் தரை இறங்கி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும். இந்த நிலையில், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை அங்குள்ள கேலரியில் இருந்த படி நேரில் பார்ப்பதற்கான முன்பதிவு நள்ளிரவு தொடங்குகிறது.

இதற்கான இணையதள முகவரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இணையதள முகவரியானது பெரும்பாலும் சத்தீஷ் தவான் விண்வெளி மையம் உடையதாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Online Booking To See The Launch Of Chandrayaan 2 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X