நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
முதல் இந்தியன் நிலவில் தரையிறங்கும் வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து நிலவு நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் என்று இஸ்ரோ (ISRO) தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார். இந்த படையெடுப்பு சந்திராயன் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்டில், இந்திய விண்வெளி ஏஜென்சியின் சந்திரயான்-3 மிஷன் (Chandrayaan-3 mission), நிலவின் தென் துருவத்தில் உள்ள மேற்பரப்பில் மெதுவாக சாஃப்ட் லெண்டிங் முறைப்படி தரையிறங்கி இஸ்ரோ புதிய சாதனை படைத்தது. நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா புகழ்பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, இஸ்ரோ இப்போது சந்திராயன்-4 (Chandrayaan-4) திட்டத்தில் மும்முரமாக வேலை செய்து வருகிறது.

மொத்தம் எத்தனை சந்திராயன் திட்டங்களை இஸ்ரோ திட்டமிட்டுள்ளது?
அகமதாபாத்தில் நடைபெற்ற, ஆஸ்ட்ரோனாட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக சோம்நாத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. இதில், இஸ்ரோ இப்போது சந்திராயன்-4 திட்டத்தில் வேலை செய்து வருகிறது, எதிர்காலத்தில் இன்னும் எத்தனை சந்திராயன் திட்டங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், கடந்த சந்திராயன்-3 பணி நாம் எதிர்பார்த்ததை போலவே சிறப்பாக வெற்றிபெற்றது. சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து, நிலவு பற்றி நாம் இதுவரை அறிந்திடாத சில முக்கிய தகவல்களை கைப்பற்றியுள்ளோம். அதை வைத்து, எதிர்காலத்தில் என்ன மாதிரியான செயல்பாடுகளை இஸ்ரோ மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகிறது. சந்திராயன்-4 திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
சந்திராயன்-4 திட்டத்தை தொடர்ந்து எத்தனை சந்திராயன் விண்கலங்கள் நிலவு நோக்கி பாயும் என்று கேட்டால், இஸ்ரோ ஒரு குறிப்பிட்ட எண்ணில் நிலவு ஆராய்ச்சியை கட்டுப்படுத்த நினைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நிலவில் முதல் இந்தியன் தரையிறங்கி கால் பதிக்கும் வரை, சந்திராயன் திட்டம் தொடர்ந்து மீண்டும்-மீண்டும் நிலவு நோக்கி படையெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

ககன்யான் திட்டம் (Gaganyaan Mission) என்ன நிலையில் உள்ளது?
ஆம், சோம்நாத் தெரிவித்த தகவலின் படி, சந்திரனில் இந்தியர் தரை இறங்கும் வரை, சந்திரயான் தொடரை தொடர விரும்புவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன், நிலவுக்கு சென்று திரும்புவது, நிலவில் மனிதர்களை பத்திரமாக தரையிறக்குவது போன்ற பல தொழில்நுட்பங்களில் இஸ்ரோ தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான பணியை இஸ்ரோ இப்போதிலிருந்தே துவங்கி முயற்சித்து வருகிறது என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸீரோ தலைவர் சோம்நாத் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அடுத்தபடியாக, இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம் (Gaganyaan Mission) பற்றியும் சில கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அது பற்றி சோமநாத் கூறுகையில், இந்த ஆண்டு இஸ்ரோ ஆள் இல்லாத சோதனை பணி, சோதனை வாகனம் பறக்கும் பணி மற்றும் ஏர் டிராப் சோதனை ஆகியவற்றை மேற்கொள்ளும் என்றார். வரும் ஏப்ரல் 24, 2024 இல், ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ நடத்தவுளள்து என்றும் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு, மேலும் இரண்டு ஆள் இல்லாத சோதனை பணிகளும், அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் என்று தலைவர் கூறியுள்ளார். ககன்யான் திட்டம், 3 நாள் பணிக்காக 400 கிமீ சுற்றுப்பாதையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்பி, அவர்களை இந்திய கடல் நீரில் தரையிறக்கி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு-வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








