ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி போனை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு.. கேம் விளையாடினாள் மட்டும் போதும்..

|

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி என்பது இடைப்பட்ட விலை அடைப்பில் வெளிவரும் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஆக்ஸிஜன் ஓஎஸ்ஸின் நன்மையுடன் பிரீமியம் ஒன்பிளஸ் சாதனங்களின் அதே முதன்மை தர பயனர் அனுபவத்தை பாக்கெட் பிரண்ட்லி விலை புள்ளியில் கொண்டுவந்துள்ளது. ஒன்பிளஸ் விரைவில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

முன்பைவிட, இதில் இன்னும் சிறந்த வன்பொருள் மற்றும் சில பிரத்தியேக அம்சங்களுடன் நோர்ட் 2 5ஜி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. புதிய நோர்ட் ஸ்மார்ட்போனின் மூலம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வகையில் என்ன புதிய மாற்றங்களை ஒன்ப்ளஸ் நிறுவனம் மீண்டும் அமைக்க உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி போனை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு.. என்ன செய்யணும்

மாஸ்டர் ஆஃப் AI பிராசஸிங் உடன் டைமன்சிட்டி மீடியாடெக் 1200 சிப்செட்
ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போன் அதன் விலை பிரிவில் மிகவும் மேம்பட்ட மொபைல் சிப்செட்டைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் முதன்மையான மீடியாடெக் டைமன்சிட்டி 1200- AI சிப்ஸ் மூலம் இயங்குகிறது. 6nm உற்பத்தி செயல்முறையில் வடிவமைக்கப்பட்ட, ஹெவி-டூட்டி ஆக்டா-கோர் CPU ஆனது 3GHz கடிகார அதிர்வெண்ணில் இயங்கும் சக்திவாய்ந்த ஆர்ம் கார்டெக்ஸ்-ஏ 78 கோர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இந்த சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சிப்செட்டில் ஒரு சுயாதீனமான AI பிராசஸர் APU 3.0 மற்றும் AI ஐ எளிதாக்க மீடியாடெக்கின் ஹைப்பர் என்ஜின் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்திசாலித்தனமான சிப்செட் ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனத்தால் சிக்கலான படக் கணினி மற்றும் உயர்-தீவிர பணி செயலாக்கத்தை நோர்ட் 2 5ஜி இல் செயல்படுத்துவதற்காக மாற்றப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான AI- தொடர்பான பணிகளைச் செய்யும்போது கூட, தடுமாற்றம் அற்ற அனுபவத்திற்காக சிப்செட்டின் AI- அடிப்படையிலான அம்சங்களை மேம்படுத்த இரு நிறுவனங்களும் நெருக்கமாக பணியாற்றியுள்ளன.

இதன் விளைவாக, மீடியாடெக்கின் சமீபத்திய AI முதன்மை சிப்செட்டின் திறன்களை முழுமையாக ஆராயும் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக நோர்ட் 2 5 ஜி இருக்கும் என்று ஒன்பிளஸ் கூறியுள்ளது. இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் நெருக்கமான கூட்டாண்மை வரவிருக்கும் சாதனத்தின் முதல்-வகையான ஏஐ அடிப்படையிலான அம்சங்களை உறுதி செய்யும். சாதனத்தின் டிஸ்பிளே, கேமரா மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் போது அன்றாட பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய AI- அடிப்படையிலான அம்சங்களுடன் புதிய ஒன்பிளஸ் Nord 2 வெளிவரும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரையில், இதில் AI ரெசல்யூஷன் பூஸ்ட் மற்றும் AI கலர் பூஸ்ட் ஆகிய இரண்டு பிரத்தியேக அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. பெயர் குறிப்பிடுவதுபோல், இரண்டு அம்சங்களும் டிஸ்பிளே உள்ளடக்கத்தில் உள்ள தெளிவுத் திறனையும், திரையில் உள்ள உள்ளடக்கத்தின் வண்ணங்களையும் மேம்படுத்த அடிப்படை சிப்செட்டின் அதிநவீன இயந்திர கற்றல் திறன்களைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேயில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் போதும், கேம் விளையாடும் போதும் ஒப்பிடமுடியாத பார்வை அனுபவத்தை இது அளிக்கிறது.

ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் இரண்டும் டைமன்சிட்டி 1200 சிப்செட் இன் AI வலிமையை இத்தகைய அம்சங்களை எளிதாக்குவதற்கு நெறிப்படுத்தியிருப்பதால், ஒன்பிளஸ் நோர்ட் 2 மட்டுமே இத்தகைய மேம்பாடுகளை வழங்க கூடிய சாதனமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ரெனோ 6 ப்ரோ டைமன்சிட்டி 1200 சிப்செட்டில் வேலை செய்கிறது, ஆனாலும் கூட அதன் AI திறன்கள் டிஸ்பிளேவுடன் நீட்டிக்கப்படவில்லை, அவை பெரும்பாலும் கேமரா செயல்பாட்டுடன் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அதாவது, நோர்ட் 2 இன் டிஸ்பிளே அனுபவம் Asphalt 9 மற்றும் Battlegrounds Mobile India போன்ற உயர் திறன் கொண்ட கேம்களை விளையாடும்போது ஒப்பிடமுடியாத காட்சி அனுபவத்தை இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் வழங்கக்கூடும். ஸ்மார்ட்போனின் சொந்த வீடியோ பிளேயர் மற்றும் பிரபலமான OTT இயங்குதளங்களில் வீடியோக்களைப் பார்க்கும்போதும் கூட, இந்த புதிய சாதனத்தின் AI தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே மிகச் சிறந்த காட்சி அனுபவத்தைப் பயனர்களுக்கு வலனாக்குகிறது என்பதில் சந்தேகமில்லை.

அதிநவீன AI- ஆதரவு கொண்ட கேமரா அனுபவம்
ஒன்பிளஸ் நோர்ட் 2 அறிவார்ந்த கேமரா அம்சங்களை வழங்குவதன் மூலம் சில குறிப்பிடத்தக்க கேமரா மேம்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. இந்த அம்சங்களில் AI புகைப்பட மேம்பாடு, AI வீடியோ மேம்பாடு மற்றும் நைட்ஸ்கேப் அல்ட்ரா போன்றவை அடங்கும். இந்த அம்சங்கள் எல்லாம், டைமன்சிட்டி 1200 சிப்செட்டில் இயங்கும் சாதனங்களில் காணப்படுகிறது. ஆனால், ஒன்பிளஸ் நோர்ட் 2 இல் விஷயமே சற்று வித்தியாசமானது. காரணம் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் புகைப்பட செயலாக்க வேகம் மற்றும் கைபேசியின் பட உறுதிப்படுத்தல் திறன்களை மேம்படுத்தச் சக்திகளுடன் இணைந்துள்ளன.

இது தவிர, AI- இயக்கப்பட்ட சிப்செட் கேமரா, ஆடியோ, கேமிங் மற்றும் வரவிருக்கும் நோர்ட் போனின் பேட்டரி செயல்திறன் ஆகியவற்றில் பல மேம்பாடுகளை எளிதாக்கியுள்ளது என்பதே நம்பமுடியாத உண்மையாக இருக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி போனை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு.. என்ன செய்யணும்

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி போனின் AR அறிமுக நிகழ்வு

மற்ற நிறுவனங்களைப் போல் இல்லாமல் ஒன்பிளஸ் இம்முறை, ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி போனின் அறிமுக நிகழ்வை AR அனுபவத்தில் நடத்தவுள்ளது. இதேபோல், பல விஷயங்களைத் தனித்துவமாக்கியுள்ளது. இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கை அறையின் வசதியிலிருந்து வெளியீட்டு அற்புதமான விளையாட்டுகளில் பங்கேற்று, புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனையும் வெல்ல நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.

அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பிராண்ட் நோர்ட் 2 5 ஜி ஏஆர் அனுபவத்தின் ஒரு பகுதியாக ஃபாஸ்ட் அண்ட் ஸ்மூத் சவால்களை அறிமுகப்படுத்துகிறது. பெரிய பரிசளிப்பில் பங்கேற்க சில அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தவிர, பங்கேற்பாளர்களுக்கு வேறு பல வெகுமதிகளும் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒன்பிளஸ் ஏஆர் போட்டியில் பங்கேற்க முக்கியமான தேதிகள் மற்றும் தேவையான விவரங்கள் என்ன என்பதைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். 'லக்' உங்கள் வசம் இருக்க எங்களின் வாழ்த்துக்கள்.

AR சேலஞ் # 1 ஜூலை 12 - ஜூலை 30
முதல் ஏ.ஆர் சவால் 90 ஹெர்ட்ஸ் 'பின்பால்' கேம் விளையாட்டை வழங்கும், இதில் பங்கேற்பாளர்கள் ஃபாஸ்ட் அண்ட் ஸ்மூத் லேன் வழியாக செல்ல வேண்டும் மற்றும் சவாலை முடிக்க நியமிக்கப்பட்ட நேரத்தில் 90 ஹெர்ட்ஸ் மதிப்பெண்ணை அடைய வேண்டும்.

AR சேலஞ் # 2 ஜூலை 22 - ஜூலை 30
இரண்டாவது AR சவாலை 'ஒன் டே பவர் சேலஞ்' என்று அழைக்கப்படுகிறது, அங்கு சவாலை முடிக்க நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 30 தொலைப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இதில் எப்படிப் பங்கேற்பது?
ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஏஆர் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்பது மிகவும் எளிது. nord-ar.oneplus.com/nord-2-5g என்ற வலைப்பக்கத்தைப் பார்வையிட்டு, உங்கள் சாதனத்தின் கேமரா, இயக்கம் மற்றும் ஒரியண்டேஷன் சென்சார்களைப் பயன்படுத்த வலைத்தளத்திற்கு அனுமதி வழங்கவும். இம்மாதிரியான முதல் வகை வெளியீட்டு நிகழ்வு மற்றும் அற்புதமான விளையாட்டுகளைக் காணத் தயாராகுங்கள். ஒவ்வொரு AR சவாலும் மிகவும் எளிமையானது என்றாலும், எல்லோரும் அதைச் சரியாகச் செய்ய மாட்டார்கள். இருப்பினும், நீங்கள் விரும்பும் படி பல முறை விளையாட்டை விளையாட முடியும் என்பதால் நீங்கள் இறுதி பட்டியலில் இடம் பெற வாய்ப்புள்ளது.

ஒன்ப்ளஸ் ஒவ்வொரு நாளும் சில அற்புதமான பரிசுக்கு புதிய வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும், மேலும் இறுதி வெற்றியாளருக்குப் பெரிய பரிசு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இறுதி வெற்றியாளருக்கு ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனம் வழங்கப்படும். அருமையான விஷயத்தை கேட்டுள்ளீர்கள், இன்னும் ஏன் தாமதம் உடனே ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஏஆர் சவால்களில் பங்கேற்க தயாராகுங்கள் .

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி எப்போது?
ஜூலை 22 ஆம் தேதி புதிய நோர்ட் சாதனம் உலகிற்கு வெளிப்படும் என்பதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. வெளியீட்டு நிகழ்வு இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் படி மாலை 07:30 மணி முதல் தொடங்கும். ஒன்பிளஸ் நோர்ட் 2 விவரக்குறிப்புகளைப் பொருத்தவரை, ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் டிஸ்ப்ளேவை மிக மென்மையான 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர்ட் 2 பெரும்பாலும் 50MP கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், மேலும் இது 4,500mAh பேட்டரியை ஆதரிக்கும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 5G with Flagship MediaTek Dimensity 1200 CPU At Helm : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X