பயோமெட்ரிக் மூலம் அதிவேகத்தில் குற்றவாளிகளை பிடித்த மும்பை போலீஸ்!

|

ஸ்மார்ட்போன் தொழில்துறை வளர்ச்சியடைந்தது நிச்சயம் நன்றி கூறியே ஆக வேண்டும். கடந்த பல வருடங்களாக நீங்கள் உங்கள் தொலைபேசியில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி வந்திருக்கலாம்.

பயோமெட்ரிக் மூலம் அதிவேகத்தில் குற்றவாளிகளை பிடித்த மும்பை போலீஸ்!

ஒருவேளை நம்மில் சிலர் பேஸ் அன்லாக் ஸ்கேன் வசதியை கொண்டிருப்பார்கள். இப்போது மகாராஷ்டிரா அரசாங்கம் பாதுகாப்பு ரீதியாக அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.

பயோமெட்ரிக் அடையாள அமைப்பு

பயோமெட்ரிக் அடையாள அமைப்பு

குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக/தீர்ப்பதற்காக பயோமெட்ரிக் சரிபார்ப்பு தரவுதளத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக மாறியுள்ளது மகாராஷ்டிரா. மும்பை போலிஸ் செயல்படுத்தியுள்ள புதிய தானியங்கி பல அடுக்கு பயோமெட்ரிக் அடையாள அமைப்பு (Automated Multi-modal Biometric Identification System - AMBIS) மூலம், குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்வதுடன், அங்கு உள்ள பயோமெட்ரிக் தரவுகளை தரவுத்தளத்தில் உள்ள அறியப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஒப்பிட்டு எளிதில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய உதவுகிறது.

மும்பை போலீஸ்

மும்பை போலீஸ்

முக அங்கீகாரத்திற்காக (facial recognition) பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமில்லாமல், போலீசாரால் கைப்பற்றப்பட்ட கைரேகைகள், உள்ளங்கை அச்சுகள், மற்றும் காவலில் உள்ள சந்தேக நபர்களின் கருவிழி போன்ற தரவுகளை இந்த அமைப்பு கொண்டிருக்கும். இந்த தரவுகள் மும்பை போலீஸ் தலைமையகத்தில் உள்ள மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டாலும், மற்ற மகாராஷ்டிரா காவல் நிலையங்களிலும் உள்ளார்ந்த வலையமைப்பு மூலம் இந்த தரவுகளை அணுகலாம்.

நிகோலா டெஸ்லாவின் 7 கண்டுபிடிப்புகள் என்ன ஆனது தெரியுமா?நிகோலா டெஸ்லாவின் 7 கண்டுபிடிப்புகள் என்ன ஆனது தெரியுமா?

சிறிய AMBIS அமைப்பு

சிறிய AMBIS அமைப்பு

காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எளிதில் எடுத்துசெல்லக்கூடிய சிறிய AMBIS அமைப்பு மூலம், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் கைரேகைகளை தரவுத்தளத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது. சிசிடிவி காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் வைத்திருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த அமைப்பு காவல்துறையை அனுமதிக்கும் என்று கருதப்படுகிறது

நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள்

நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள்

மும்பை காவல்துறையின் சைபர் துறை இந்த செயல்திட்டத்தில் 2017 முதல் செயல்பட்டு வரும் நிலையில், இதற்கிடையில் இந்த முறையுடன் பழைய குற்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கி வருகிறது.1950ஆம் ஆண்டுக்கு பிந்தைய அனைத்து ஆவணங்களும், குறைந்தபட்சம் 6.5 லட்சம் ஆவணங்கள் துல்லியமாக இருக்கவேண்டும் என டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் ..

அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் ..

திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் கடந்த சில நாட்களுக்குள் ஒரு சில காவல் நிலையங்களில் இந்த அமைப்பு சோதிக்கப்பட்டது. அந்த நான்கு நாட்களுக்குள், மும்பை போலிஸ் குற்றம் நடைபெற்ற இடங்களில் காணப்படும் கைரேகைகள் மூலம் சுமார் 85 குற்றங்களை தீர்ப்பதற்கு முடிந்தது. எனவே இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவது தெளிவாக தெரிகிறது.

மாநிலத்தின் 42 மாவட்டங்களில் உள்ள 1160 காவல் நிலையங்களிலும், அதேபோல சிறைச்சாலைகள், கைரேகை பீரோக்கள் மற்றும் போலிஸ் பயிற்சி மையங்களில் இந்த அமைப்பை விரிவுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mumbai Police Is Using Biometric Data To Catch Criminals In Record Time : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X