Home
Scitech

நிகோலா டெஸ்லாவின் 7 கண்டுபிடிப்புகள் என்ன ஆனது தெரியுமா?

நிகோலா டெஸ்லா என்பவர் உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர், ஆனால் அவருடைய இந்த 7 கண்டுபிடிப்புகள் ஒருபோதும் கவனிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா வரலாற்றின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்பதும், அவரது கண்டுபிடிப்புகள் பல தலைமுறைகளின் கற்பனைகளைக் எழுப்பிவிட்டதால் அவருக்குப் பின்னால் பல கண்டுபிடிப்பாளர்கள் அவரால் தோன்றியதால் அவர் இன்னும் உலகில் அழியாமல் வாழ்ந்து வருகிறார்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை

உலகின் 27 நாடுகளில் 270 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்திருப்பவர் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 112 காப்புரிமைகளை வைத்திருக்கும் பெருமைக்குரியவர். டெஸ்லா மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளராக வரலாற்றில் இடம் பிடித்தாலும், அவருடைய ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை. இந்த நிலையில் அவருடைய மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் 7ஐ தற்போது பார்ப்போம்

1. வயர்லெஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன்:

1. வயர்லெஸ் எனர்ஜி டிரான்ஸ்மிஷன்:

டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் முற்றிலும் மின்சாரத்துடன் தொடர்புடையது என்பதால், அவர் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகள் காப்புரிமைகள் பெறு மின்துறையில் உள்ளது. மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம். உலகின் பெரும்பகுதியை மின்சக்தியுடன் இணைக்கப் பயன்படும் ஏசி என்னும் மாற்று மின்னோட்டத்தை அவர்தான் கண்டுபிடித்தார்.

டெஸ்லாவும் ஒரு கோபுரத்தை உருவாக்க முயன்றார் என்பது பலருக்குத் தெரியாது. இது லாங் என்ற தீவின் வடக்குக் கரையில் ஜே.பி. மோர்கன் என்பவரின் நிடியில், டெஸ்லா ஒரு மின் கோபுரத்தை கட்டியெழுப்ப முயன்றார். இதன் மூலம் அவர் நியூயார்க் நகரத்திற்கு மின்சாரத்தை எடுத்து செல்லலாம் என நம்பினார்.


ஆனால் மோர்கன் திடீரென நிதியை நிறுத்திவிட்டதால் டெஸ்லா தனது திட்டத்தை 1906 ஆம் ஆண்டு கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முயற்சி 1917 ஆம் ஆண்டு வெற்றிகரமாகியது

2. வயர்லெஸ் எலக்ட்ரிகல் டவர்கள்:

2. வயர்லெஸ் எலக்ட்ரிகல் டவர்கள்:

உங்கள் தொலைபேசி அல்லது டேப்லெட்டின் வயர்லெஸ் சார்ஜிங் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​நாம் அனைவரும் இந்த கண்டுபிடிப்பு புரட்சிகரமானது என்று நினைத்தோம். ஆனால் இந்த யோசனையை டெஸ்லா கடந்த 1919ஆம் ஆண்டிலேயே சிறிய அளவில் யோசித்தார். ஒரு சூப்பர்சோனிக் வான்வழிக்கான நிலத்திலிருந்து 40,000 அடி உயரத்தில் மின்சாரத்தை வேகமாக கடத்த முடியும் என்றும் குறிப்பாக நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 4 மணி நேரத்திற்குள் மின்சாரத்தை கடத்த முடியும் என நம்பினார்.

  3. ரிமோட் கண்ட்ரோல் கப்பல்கள்

3. ரிமோட் கண்ட்ரோல் கப்பல்கள்

டெஸ்லா மின்சார கண்டுபிடிப்புகளுக்கு மட்டும் பிரபலமானவர் இல்லை. அவர் இன்னொரு முக்கிய பகுதி இராணுவ தொழில்நுட்பத்திற்கும் உதவினார். ஆல்ஃபிரட் நோபல் என்பவரை போல் டெஸ்லாவும் போரைத் தடுப்பதற்கான சிறந்த வழியை ஏற்படுத்தினார். போர் அர்த்தமற்றது என்றும், அதனால் பேரழிவு ஏற்படும் என்று நம்பினார், யாரும் மீண்டும் போருக்குச் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதை மனதில் கொண்டு, டெஸ்லா கண்டுபிடித்த ரிமோட் கண்ட்ரோல் கப்பலில் அமைந்துள்ள ரேடியோ சிக்னல்கள் போரை தொடங்க, நிறுத்த, மற்றும் வழிநடத்த உதவியது.

4. தி தாட் கேமிரா:

4. தி தாட் கேமிரா:

டெஸ்லாவின் மிக அருமையான கண்டுபிடிப்புகளில் ஒன்று இந்த தாட் கேமிரா. கடந்த 1933 ஆம் ஆண்டில், கன்சாஸ் சிட்டி ஜர்னல்-போஸ்ட்டில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்து கூறியபோது, "1893 ஆம் ஆண்டில், சில ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஒரு திட்டவட்டமான உருவம் சிந்தனையில் உருவானது. அதாவது, ரிஃப்ளெக்ஸ் செயலால், விழித்திரையில் ஒரு தொடர்புடைய படத்தை உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்கப்பட்ட உருவத்தை இயந்திரத்தால் படிக்கலாம் என்படுதான்'

"இப்போது ஒரு எண்ணம் விழித்திரையில் ஒரு படத்தை பிரதிபலிக்கிறது என்பது உண்மையாக இருந்தால், அது வெளிச்சம் தரும் ஒரு கேள்வி அதே எண்ணம் புகைப்படங்களாக எடுத்துக்கொள்கிறது. பின்னர் அந்த படத்தை ஒரு திரையில் காண்பிக்க கிடைக்கக்கூடிய சாதாரண முறைகளைப் பயன்படுத்துதல். இதை வெற்றிகரமாக செய்ய முடிந்தால், ஒரு நபர் கற்பனை செய்த பொருட்கள் திரையில் தெளிவாக பிரதிபலிக்கும் வகையில் உருவாக்க முடியும். ​​இந்த வழியில், ஒவ்வொரு சிந்தனையும் தனி நபரின் மனதை படிக்க முடியும். அப்படியானால், நம் மனம் ஒரு திறந்த புத்தகங்கள் போல் இருக்கும்.

டெஸ்லாவின் இந்த கற்பனை அப்போது சாத்தியப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நிச்சயம் சாத்தியமாகும் என்றே கருதப்படுகிறது

5. எர்த் மிஷின்:

5. எர்த் மிஷின்:

1893 ஆம் ஆண்டில், டெஸ்லாவுக்கு நீராவி மூலம் இயங்கும் மெக்கானிக்கல் ஆஸிலேட்டருக்கு காப்புரிமை வழங்கப்பட்டது, அதன் அதிர்வு மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படலாம் என எண்ணப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியபோது, இந்த இயந்திரத்தை ஒரு சோதனைக்காக அளவீடு செய்யும் போது, ​​அது அவரது நியூயார்க் நகர ஆய்வகத்தை மிகவும் பயமுறுத்தியது. அதாவது ஒரு பூகம்பம் போல் இருந்தது.

"திடீரென்று அந்த இடத்தில் இருந்த அனைத்து கனரக இயந்திரங்களும் பறந்தன. அந்த கட்டிடத்தின் வெளியே மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டடு. போலீசாரும் ஆம்புலன்ஸும் வந்தனர். நான் என் உதவியாளர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொன்னேன். இது ஒரு பூகம்பமாக இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் போலீசாரிடம் கூறினோம். அவர்களும் அதனை நம்பினார்.

இந்த கண்டுபிடிப்பு டெஸ்லாவின் டெலிஜியோடைனமிக் ஆஸிலேட்டருக்கு அதாவது பூகம்ப இயந்திரமாக உருவாக்கும் உத்வேகத்தை அளித்தது, இது பூமியின் புவியியல் பண்புகளைக் கண்டறிய பின்னாளில் விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படலாம்

6. செயற்கை டைடல் அலைகள்:

டெஸ்லா கண்டுபிடித்த மற்றொரு விஷயம் செயற்கை டைடல் அலை. இது எதிரி கடற்படைகளுக்கு எதிரான இறுதி பாதுகாப்பு என்று நம்பப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு ஒரு எதிரி கடற்படைக்கு அருகில் பல டன் அளவிற்கு பொருட்களை வெடிக்கச் செய்யும் ஒரு கண்டுபிடிப்பு ஆகும்.

வெடிப்பால் உருவாகும் வாயு குமிழி, ஆரம்ப குண்டுவெடிப்பிலிருந்து ஒரு மைல் தொலைவில் கூட கிட்டத்தட்ட 100 அடி உயரத்தில் இருக்கும் அலை அலைகளை உருவாக்கும். கடந்த 1940கள் மற்றும் 1950களில் நீருக்கடியில் அணு குண்டு சோதனை செய்தபோது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இதனை பின்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது

7. தி டெத் ரே:

7. தி டெத் ரே:

பாதரச ஐசோடோப்புகளை ஒலியின் வேகத்தை 48 மடங்கு வேகப்படுத்துவதன் மூலம், அதன் விளைவாக வரும் கற்றை பூமியின் வளைவால் மட்டுமே வரையறுக்கப்பட்ட தூரத்தில் முழு படைகளையும் அழிக்க போதுமான ஆற்றலை உருவாக்கும் என்று டெஸ்லா நம்பினார்.

டெஸ்லாவின் இந்த யோசனையை அமெரிக்கா உள்பட பல நாட்டின் அரசுகளுக்கு டுத்துச் செல்ல முயன்றார், ஆனால் சோவியத் யூனியன் மட்டுமே இதைப் பரிசோதித்தது, டெஸ்லா எதிர்பார்த்த மாதிரியான முடிவுகளை இது வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
7 Inventions of Nikola Tesla That Were Never Built : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X