LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

|

எல்பிஜி சிலிண்டர்களுக்கு அரசாங்கம் மீண்டும் மானியத்தை வழங்கத் தொடங்கலாம் என்று பலர் நம்புகிறார்கள். எல்பிஜி நேரடி மானியத்தைக் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், திரவ எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கு மத்திய அரசு மீண்டும் மானியம் வழங்கத் தொடங்கும் எனச் சாமானியர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி வழங்கும் மானிய திட்ட துவங்கப்பட்டால், குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மத்திய அரசு வழங்கும் எல்பிஜி சிலிண்டரின் விலை என்ன?

மத்திய அரசு வழங்கும் எல்பிஜி சிலிண்டரின் விலை என்ன?

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ. 5 மற்றும் ரூ. 10 குறைத்தது. எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியத்தை அரசாங்கம் மீண்டும் தொடங்கலாம் என்று பலர் நம்புவதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ​​எல்பிஜி சிலிண்டரின் விலை இந்தியாவில் 1000 ரூபாயைத் தொட உள்ளது. அரசாங்கத்தின் உள் மதிப்பீட்டின்படி, நுகர்வோர், சிலிண்டருக்கு, 1000 ரூபாய் வரை செலுத்தத் தயாராக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு வழிகளில் சிலிண்டர்களை விற்க அரசுத் திட்டமா?

இரண்டு வழிகளில் சிலிண்டர்களை விற்க அரசுத் திட்டமா?

இருப்பினும், சமீபத்திய அறிக்கையின்படி, மத்திய அரசு இரண்டு வழிகளில் சிலிண்டர்களை விற்கத் திட்டமிட்டுள்ளது. மானியம் இல்லாமல் எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதை அரசாங்கம் தொடரலாம் என்பது ஒரு வழியாகும். இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு அரசாங்கம் மானியங்களை வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழிகளில் அரசாங்கம் எதைச் செய்யும் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.

தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..

LPG சிலிண்ட்ருக்கான மானியங்களுக்கு யார் எல்லாம் தகுதியுடையவர்கள்?

LPG சிலிண்ட்ருக்கான மானியங்களுக்கு யார் எல்லாம் தகுதியுடையவர்கள்?

தற்போது வரை, எல்பிஜி மானியம் தொடர்பான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வெளியான சில தகவலின் படி, ஒரு LPG சிலிண்டர் வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் போது மட்டும், அரசாங்கத்தின் மானியத்தைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு மேல் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்காது என்று தெரிவிக்கிறது.

உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?

உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?

மேலும், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் எல்பிஜி கொள்முதல் மீது மானியம் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டம் தொடங்கப்படாதவர்களுக்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முதன்மைத் திட்டம் மே 1 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தியதற்குக் காரணம் என்ன?

சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தியதற்குக் காரணம் என்ன?

கோவிட்-19 தொற்றுநோயால் எரிபொருள் விலைகள் சரிந்த நேரத்தில், 2020 மே முதல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களில் வாடிக்கையாளர்களுக்கு நேரடி மானியங்களை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது. அந்த நேரத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் சர்வதேச விலைகள் கடுமையாகச் சரிந்தது. இருப்பினும் அரசாங்கம் மறைமுகமாக மானியங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. உதாரணமாக, 2021 நிதியாண்டில் மானியங்களுக்கான அரசாங்கத்தின் செலவு ரூ.3,559 ஆக இருந்தது, இதே 2020 நிதியாண்டில், இந்த செலவு ரூ.24,468 கோடியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் வங்கி, LPG சிலிண்டர் மற்றும் ரயில் விதிகளில் மாற்றங்களா?

நவம்பர் 1 ஆம் தேதி முதல் வங்கி, LPG சிலிண்டர் மற்றும் ரயில் விதிகளில் மாற்றங்களா?

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் நிலையில், பணவீக்கம் மக்களின் பாக்கெட்டை கொள்ளையடித்துள்ளதால், வங்கிகளும் உங்கள் பாக்கெட்டை தளர்த்த சில ஆயத்தங்களை இப்போது மேற்கொண்டுள்ளது. ஆம், நவம்பர் 1 ஆம் தேதி முதல், இனி நீங்கள் வங்கியில் இருந்து பணம் எடுத்தாலோ அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தாலோ அதற்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் டெபாசிட் செய்ய கட்டணம்.. சிலிண்டர் பதிவு மற்றும் ரயில் நேரங்களின் திடீர் மாற்றம்.. என்ன சார் இதெல்லாம்?பணம் டெபாசிட் செய்ய கட்டணம்.. சிலிண்டர் பதிவு மற்றும் ரயில் நேரங்களின் திடீர் மாற்றம்.. என்ன சார் இதெல்லாம்?

 LPG சிலிண்டர் புக்கிங் மற்றும் ரயில் நேரங்களில் மாற்றமா?

LPG சிலிண்டர் புக்கிங் மற்றும் ரயில் நேரங்களில் மாற்றமா?

இதுமட்டுமில்லை, LPG சிலிண்டர் புக்கிங் செய்வதில் முக்கிய மாற்றம் மற்றும் ரயில்களின் நேரங்களில் மாற்றம் என்று பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள். தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன், ஆன்லைன் பேங்கிங், அறிவியல் போன்ற பல முக்கிய தகவல்களுக்கு எங்கள் கிஸ்பாட் பக்கத்தை பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Government Working On New Cooking Gas Subsidy Policy And Check Who Could Get The Benefit : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X