வீட்டுக்கு LPG சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் உறுதி! வேற லெவல்.. உடனே இதை ஓபன் பண்ணுங்க
ரீசார்ஜ் செய்தால் கேஷ்பேக், மின்சாரக் கட்டணம் செலுத்தினால் கேஷ்பேக், சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் என பல சேவைகளுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் கேஷ்பேக் வழங்கத் தயாராக இருந்தாலும் நாம் அதை கண்டு கொள்வதில்லை. இனி இந்த பிழையை செய்ய வேண்டாம். பேடிஎம் நிறுவனம் தங்களது பயன்பாடுகள் மூலம் LPG சிலிண்டர்களை புக் செய்பவர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இதுகுறித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

சிலிண்டர் புக்கிங்
UPI, Paytm Wallet மற்றும் அவற்றின் விருப்பமான ஆன்லைன் கட்டண தேர்வை பயன்படுத்தி எல்பிஜி சிலிண்டர்களை புக் செய்தால் பேடிஎம் கேஷ் பேக் வழங்குகிறது. பேடிஎம் பயன்பாடானது Bharatgas, Indane மற்றும் HP கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. பேடிஎம் பயனர்கள் கேஷ்பேக் பெற பேடிஎம் வாலட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல் சிலிண்டர் புக் செய்த பிறகு அதை கண்காணிக்கவும் இந்த ஆப் அனுமதிக்கிறது. அதாவது டிராக் செய்யலாம்.

கேஷ்பேக் தொகை எவ்வளவு?
Bharatgas, Indane மற்றும் HP Gas பயனர்கள் தங்களது LPG சிலிண்டர் முன்பதிவை பேடிஎம் மூலம் மேற்கொண்டால் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், சிலிண்டர் புக்கிங்கிற்கு ரூ.15 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் பேடிஎம் வாலட் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூடுதலாக பயனர்கள் முன்பதிவை கண்காணிக்கவும் பயன்பாடு அனுமதிக்கிறது.

கூப்பன் கோட் பயன்படுத்துவது அவசியம்
Paytm நிறுவனம் செவ்வாய் கிழமை அன்று எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் அனைத்து புதிய பயனர்களுக்கும் சிறந்த கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. புதிய பயனர்கள் "FIRSTGAS" என்ற குறியீட்டை பயன்படுத்தி ரூ.15 கேஷ்பேக்கை பெறலாம். அதேபோல் பயனர்கள் "WALLET50GAS" என்ற குறியீட்டை பயன்படுத்தி சிலிண்டர் முன்பதிவு செய்தால் ரூ.50 வரை கேஷ்பேக் பெறலாம்.

17 இலக்க எல்பிஜி ஐடி
ஒருமுறை பதிவு செய்யப்பட்டுவிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து நீங்கள் எளிய முறையில் கேஷ்பேக் செய்து கொள்ளலாம். அதேபோல் அமேசான், பிளிப்கார்ட்டில் டெலிவரி செய்துவிட்டு அதை கண்காணிப்பது போல் இந்த ஆப் இன் மூலம் சிலிண்டர் டெலிவரி சேவையையும் கண்காணிக்கலாம்.
அதேபோல் புதிய முன்பதிவை மேற்கொள்வதற்கு 17 இலக்க எல்பிஜி ஐடியை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. பேடிஎம் மூலம் உங்கள் LPG எரிவாயு சிலிண்டரை எப்படி முன்பதிவு செய்வது என பார்க்கலாம்.

Paytm இல் சிலிண்டர் புக் செய்வது எப்படி?
Paytm பயன்பாட்டை ஓபன் செய்து சிலிண்டரை புக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
ஸ்டெப் 1: பேடிஎம் செயலியை ஓபன் செய்து ரீசார்ஜ்கள் மற்றும் பில் பேமெண்ட்ஸ் பிரிவின் கீழ் உள்ள "கேஸ் சிலிண்டர் புக்கிங்" என்ற பிரிவுக்குள் செல்லவும்.
ஸ்டெப் 2: தற்போது உங்களது LPG சிலிண்டர் சேவை எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது 17 இலக்க எல்பிஜி ஐடு அல்லது நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்.

ஸ்டெப் 3: பின் பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் முன்பதிவை தொடரலாம். Paytm Wallet, Paytm UPI, டெபிட் கார்ட்கள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற பல விருப்ப முறைகளில் உங்கள் கட்டணத்தை செலுத்தலாம்.
ஸ்டெப் 4: தொடர்ந்து இதன்மூலம் உங்கள் முன்பதிவு உறுதிசெய்யப்படும். உங்கள் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அதிகபட்சம் அடுத்த 2-3 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

டெலிவரியை கண்காணிக்கலாம்
அமேசான், பிளிப்கார்ட்டில் பொருட்கள் ஆர்டர் செய்து அதன் டெலிவரி நிலையை கண்காணிப்பது போல் தற்போது பேடிஎம் இல் சிலிண்டர் ஆர்டர் செய்யும்பட்சத்தில் அதன் டெலிவரி நிலையையும் கண்காணிக்கலாம்.


Click it and Unblock the Notifications