LPG சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வருகிறது என்று தெரியவில்லையா? அப்போ இதை செய்யுங்கள்..

|

நீங்கள் மாதம் தவறாமல் வாங்கும் கேஸ் சிலிண்டருக்கு அரசிடமிருந்து எவ்வளவு மானியம் கிடைக்கிறது என்று தெரியவில்லையா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். அரசிடமிருந்து நீங்கள் வாங்கும் சமையல் சிலிண்டர்களுக்கான மானியம் எவ்வளவு என்பதை, நீங்கள் ஆன்லைன் மூலம் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் வாடிக்கையாளரா நீங்கள்?

இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் வாடிக்கையாளரா நீங்கள்?

நீங்கள் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் என்று எந்த கேஸ் சிலிண்டர் வாங்குபவராக இருந்தாலும் இந்த செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம்.

அரசிடமிருந்து நீங்கள் வாங்கும் கேஸ் சிலிண்டரின் மானியம், உங்களின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

மானியத் தொகை சரியாக வருகிறதா?

மானியத் தொகை சரியாக வருகிறதா?

மாதம் தவறாமல் முன்பதிவு செய்யும் சிலிண்டர்களுக்கு மானியத் தொகை சரியாக வருகிறதா? வங்கிக் கணக்கில் சரியாக டெபாசிட் செய்யப்படுகிறதா? போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு நிச்சயம் இருக்கும். இந்த சந்தேகத்தை எளிதாக தீர்த்துக்கொள்ள ஆன்லைன் மூலம் நீங்கள் சில நிமிடங்கள் செலவழித்தால் போதுமானது. உடனே தகவலை தெரிந்துகொள்ளலாம்.

எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி? இனி Login செய்யாமலே இருப்புத் தொகை, பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம்எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி? இனி Login செய்யாமலே இருப்புத் தொகை, பாஸ் புத்தகத்தை சரிபார்க்கலாம்

வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆகும் சிலிண்டர் மானியம்

வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆகும் சிலிண்டர் மானியம்

முதலில் நீங்கள் பதிவு செய்த சிலிண்டரை வாங்கும் போது, அதற்கான முழு கட்டணத்தையும் செலுத்தி தான் வாங்க வேண்டும். பின்னர் உங்களுக்கான மானியத் தொகை உங்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். இது மாதம் தவறாமல் அரசிடமிருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை நீங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம்.

கள்ளச் சந்தையில் இனி அரசு சிலிண்டருக்கு இடமில்லை

கள்ளச் சந்தையில் இனி அரசு சிலிண்டருக்கு இடமில்லை

இந்த சிலிண்டர் மானிய திட்டம் குறிப்பாகக் கள்ளச் சந்தையில் அரசின் மானிய விலை கேஸ் சிலிண்டர் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கேஸ் சிலிண்டர் பயனர் ஒரு வருடத்திற்கு வெறும் 12 சிலிண்டர்களை மட்டுமே அரசின் மானிய விலையில் வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், வீடுகளில் சமையல் எரிவாயுவை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் 5 சிறிய தவறுகள்.! இனி செய்ய வேண்டாம்ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் 5 சிறிய தவறுகள்.! இனி செய்ய வேண்டாம்

மானியம் சரியாக வருவதை ஆன்லைனில் எப்படி சோதித்து பார்ப்பது?

மானியம் சரியாக வருவதை ஆன்லைனில் எப்படி சோதித்து பார்ப்பது?

சரி, இப்பொழுது எப்படி உங்கள் சிலிண்டருக்கான மானியம் சரியாக வந்து சேருகிறது என்பதை ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். முதலில் நீங்கள் Mylpg.in என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த வலைத்தளத்தின் வழி தான் நீங்கள் உங்களின் மானிய விபரங்களைச் சரி பார்க்க முடியும். இந்த பக்கத்தில் உள்நுழைந்ததும், நீங்கள் இண்டேன் அல்லது பாரத் கேஸ் அல்லது ஹெச்.பி. கேஸ் வாடிக்கையாளரா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

 கஸ்டமர் ஐடி, மொபைல் எண் அவசியம்

கஸ்டமர் ஐடி, மொபைல் எண் அவசியம்

அடுத்த பக்கத்தில் மெனுவுக்குச் சென்று Give your feedback online என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், மொபைல் எண் என வினியோகஸ்தர் தகவல்களைப் பதிவிட வேண்டும். பின்னர் Feedback Type என்பதைக் கிளிக் செய்து, Complaint விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next' என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது, உங்கள் வங்கி விவரங்கள் புதிய பக்கத்தில் காண்பிக்கப்படும்.

Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

உங்களின் 17 டிஜிட் எல்பிஜி ஐடி தெரியாதா? அப்போ இதை செய்யுங்கள்

உங்களின் 17 டிஜிட் எல்பிஜி ஐடி தெரியாதா? அப்போ இதை செய்யுங்கள்

இதில் உள்ள தகவல்களை வைத்து, உங்கள் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வந்ததா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு, உங்களின் 17 டிஜிட் எல்பிஜி ஐடி தெரியாவிட்டால் ‘click here to know your LPG ID என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். பின்னர், உங்களின் மொபைல் எண், எல்பிஜி வாடிக்கையாளர் ஐடி, மாநிலம், விநியோகர் பெயர் போன்ற விவரங்களை உள்ளிடுங்கள்.

சப்சிடி ட்ரான்ஸ்பர் விபரம்

சப்சிடி ட்ரான்ஸ்பர் விபரம்

உங்களது எல்பிஜி ஐடி உங்களுக்குத் தெரிய கீழ கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டைப் டைப் செய்து process கிளிக் செய்யுங்கள். பின்னர் see cylinder booking history or subsidy transfer details என்ற விருப்பத்தை கிளிக் செய்து உங்களின் மானிய தொகை விபரங்களை அறிந்துகொள்ளலாம். இந்த தகவல் தெரியாதவர்களுக்கு இந்த செய்தியைத் தெரியப்படுத்துங்கள், அவர்களுக்கும் பயனுள்ளதாய் அமையட்டும்.

Best Mobiles in India

English summary
How To Check LPG Gas Subsidy Credit Status Of Your Bank Account Through Online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X