Just In
- 5 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 6 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 6 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 7 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பணம் டெபாசிட் செய்ய கட்டணம்.. சிலிண்டர் பதிவு மற்றும் ரயில் நேரங்களின் திடீர் மாற்றம்.. என்ன சார் இதெல்லாம்?
பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் நிலையில், பணவீக்கம் மக்களின் பாக்கெட்டை கொள்ளையடித்துள்ளதால், வங்கிகளும் உங்கள் பாக்கெட்டை தளர்த்த சில ஆயத்தங்களை இப்போது மேற்கொண்டுள்ளது. ஆம், நவம்பர் 1 ஆம் தேதி முதல், இனி நீங்கள் வங்கியில் இருந்து பணம் எடுத்தாலோ அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தாலோ அதற்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லை இன்னும் நிறைய இருக்கிறது, பதிவை தொடர்ந்து படியுங்கள்.

வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இனி கட்டணமா?
சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, இனி உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் பணம் டெபாசிட் செய்யவேண்டும் என்றால் கூட, அதற்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் மக்களே. இது ஒரு புறம் இருக்க, இதனுடன், உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய இன்னும் பல விஷயங்களில் நடைமுறையில் இருந்த விதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு அதிகம் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு மற்றும் ரயில் நேரங்களிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக இந்த விதிமுறை மாற்றங்களை நீங்கள் விரும்பமாட்டீர்கள்
குறிப்பாக வங்கி சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிமுறை மாற்றங்களை நிச்சயமாக நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், ரயில்வேயின் நேர அட்டவணையும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாற உள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஏற்படும் விதிகளின் மாற்றங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது, இல்லையென்றால் இது உங்கள் பாக்கெட்டிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால் இவற்றை முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம்.

எதற்காக இந்த திடீர் கட்டணம்? எப்போதெல்லாம் இந்த கட்டணம் வசூலிக்கப்படும்?
நீங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தால், இப்போது பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஆம், உங்கள் சேமிப்புக் கணக்கில் இனி நீங்கள் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். இது ஒரு மாதத்தில் மூன்று முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும் போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூன்று முறைக்கு மேல் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு முறையும் அதற்கு நீங்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இனி பணம் டெபாசிட் செய்தால் எவவ்ளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரியுமா?
இந்தியாவில் பேங்க் ஆப் பரோடா முதலில் இந்த விதியை அமல்படுத்தியுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் நீங்கள் கடன் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும். இந்தத் தொகை ரூ. 150 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக வங்கிச் சேவைக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிக் கட்டணத்தை வசூலிக்கப் போவதாக பாங்க் ஆஃப் பரோடா தெளிவுபடுத்தியுள்ளது. சேமிப்புக் கணக்கில் மூன்று முறை பணத்தை இலவசமாக டெபாசிட் செய்யலாம் என்றும் வங்கி கூறியுள்ளது.

ஒவ்வொரு கூடுதல் டெபாசிட் மற்றும் வித்டிரா முறைக்கான கட்டணம் இவ்வளவா?
நான்காவது முறையாக பணத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு முறையும் ரூ.40 கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டன. நீங்களும் ஜன்தன் கணக்கைத் தொடங்கியிருந்தால், வங்கியின் புதிய விதிகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் எதுவும் இங்கு நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.

வரம்பை விட அதிகமாக பணம் எடுத்தாலும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
ஆம், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுத்தால், அதற்கும் இனி நீங்கள் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வங்கி விதிமுறைகளை தெரிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படுவது உங்கள் பாக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கும், இல்லையெனில் ஒவ்வொரு கூடுதல் டெபாசிட்டுக்கும் நீங்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்திட நேர்ந்திடும். இதுமட்டுமின்றி, நீங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும் முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய மற்றும் டெலிவரி பெற இனி 'இது' கட்டாயம் தேவையா?
எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய மற்றும் டெலிவெரி பெற இனி OTP கட்டாயம் தேவை. காஸ் சிலிண்டரை வீட்டிற்கு விநியோகம் செய்யும் செயல்முறையும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி காஸ் முன்பதிவு செய்யும் போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். OTP இல்லாமல் நீங்கள் எந்த வகையிலும் LPG சிலிண்டரை இனி முன்பதிவு செய்ய முடியாது. இது மட்டுமின்றி, உங்கள் டெலிவரி நபரிடம் டெலிவரி OTP-யை சொன்னால் தான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். வணிக சிலிண்டர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்களின் நேர அட்டவணையில் புதிய மாற்றம்
நவம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ரயில்களின் டைம் டேபிளை மாற்றும் செய்ய திட்டம் இருந்தது, ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அதன் தேதி ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. புதிய கால அட்டவணை நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ரயில் நேரங்களை பற்றி அறிந்துகொண்டு அதற்கேற்ப உங்களின் பயணங்களை திட்டமிடுங்கள்.

13 ஆயிரம் பயணிகளின் ரயில் மற்றும் 7 ஆயிரம் சரக்கு ரயில்களின் நேரங்கள் மாற்றம்
இதன் மூலம், நாட்டில் செயல்பாட்டில் உள்ள சுமார் 13 ஆயிரம் பயணிகளின் ரயில்கள் மற்றும் 7 ஆயிரம் சரக்கு ரயில்களின் நேர அட்டவணை இப்போது மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் இயங்கும் சுமார் இரண்டரை டஜன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரமும் இந்த புதிய விதிமுறை படி மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ரயில் நேரங்களின் தெளிவான தகவலை பெற IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள். இந்த திடீர் மாற்றங்கள் பற்றிய உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470