பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

|

மதுரை அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் ஏழாவது கட்டத்தில் பாண்டிய மன்னனின் சின்னமான 'மீன்' உருவம் சின்னத்துடன் நன்கு வெட்டப்பட்ட உறைக்கிணறு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறைக்கிணறு கிடைத்த இடம் சங்க காலத்தைச் சேர்ந்தது என்பதற்கான மற்றொரு சான்றாக இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட முதல் உறைகிணறு

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட முதல் உறைகிணறு

மதுரை கொடியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் மீன் சின்னம், வலிமையான பாண்டிய மன்னனின் அரசால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இது ஒரு வடிவமைப்பைப் போலத் தோற்றமளிக்கும் ஒரு வளைய உறைக் கிணற்றில் பக்குவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை காலை டிவிட்டரில் இந்த உறைகிணறின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள்

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள்

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் முறைகள் சங்ககாலத்தில் இருந்தே எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது என்பதை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய முன்னோரின் வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காட்டி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அலங்கரிக்கப்பட்ட மீன் சின்னம் கீழடி அகழ்வாராய்ச்சியில் முதன்முறையாக வளையக் கிணறு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமான கீழடியின் 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி

சுவாரசியமான கீழடியின் 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி

இதற்கு முன்னர், பல உறைக்கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவற்றில் இது போன்ற கலை நுணுக்கம் எதுவும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சுவாரசியமான கீழடி இன்னும் பல தகவலை நமக்குத் தொடர்ந்து வழங்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தென்னரசு கீழடியில் உள்ள இடத்தை ஆய்வு செய்த பிறகுத் தனது ட்வீடை பதிவு செய்துள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சியின் ஏழாவது கட்டம் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.

கார்பன் டேட்டிங் ஆராய்ச்சி வெளிப்படுத்திய உண்மை என்ன தெரியுமா?

கார்பன் டேட்டிங் ஆராய்ச்சி வெளிப்படுத்திய உண்மை என்ன தெரியுமா?

இந்த ஆராய்ச்சியின் போது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழால் பயன்படுத்தப்பட்ட நீர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிரூபிக்கும் மற்றொரு குடியிருப்பு தளமான கீழடி மற்றும் அகரத்தில் இதுவரை ஒரு டஜன் வளையக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அதாவது உறைக்கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் நான்காவது கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களின் கார்பன் டேட்டிங் இன்னும் சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

2,600 ஆண்டுகள் பழமையானவையா இந்த கண்டுபிடிப்புகள்

2,600 ஆண்டுகள் பழமையானவையா இந்த கண்டுபிடிப்புகள்

கார்பன் டேட்டிங் கணிப்பின்படி, இந்த கண்டுபிடுகள் எல்லாம் குறைந்தது 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பதை ஆராய்ச்சியின் முடிவுகள் கண்டறிந்துள்ளது. இது நாம் முன்னர் கணித்திருந்த சங்க சகாப்தத்தை சுமார் 300 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. "தேவையான டச் அப் மற்றும் சுத்தம் செய்த பிறகு, மீன் சின்னத்தை வளையத்தில் நன்கு வெட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். கீழடியில் ஒரு வளையக் கிணற்றில் மீன் சின்னத்தைக் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை.

சங்க காலத்தில் கூர்மையான ஆணி பயன்படுத்தப்பட்டுள்ளதா?

மீன் சின்னத்தை வரைய அவர்கள் அந்த காலத்திலேயே கூர்மையான மற்றும் உறுதியான அச்சாணியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது, "என்று தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அலங்கரிக்கப்பட்ட மீன் சின்னம் கீழடி ஒரு சங்க கால தளம் என்று முடிவு செய்வதற்கு மற்றொரு சான்று என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல கலைப்பொருட்கள் அந்த இடம் சங்க காலத்திற்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்களை நமக்கு வழங்கியுள்ளது.

கீழடியில் கிடைத்த எலும்புக்கூடுகள்

கீழடியில் கிடைத்த எலும்புக்கூடுகள்

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் ஏராளமான பொக்கிஷங்கள் கிடைத்தது. இதில் மனிதர்களின் எலும்புக்கூடுகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரியவர்களின் எலும்புக்கூடுகளுடன், சிறிய குழந்தைகளின் சில எலும்புக்கூடுகளும் கிடைத்து, இவை பெரிய தலையை கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இதுபோன்ற பல தகவல்களை கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆராய்ச்சிகள் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Keezhadi Excavation 7th Phase Archaeology Researches Found Sangam Age Fish Symbol On Ring Well : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X