உடனே முந்துங்கள்- LPG சிலிண்டர் புக் செய்தால் ரூ.2700 கேஷ்பேக்: இதை மட்டும் செய்தால் போதும்!

|

பேடிஎம் கடந்த ஆண்டு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பயனர்கள் தங்கள் தளத்தில் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. தற்போது பேடிஎம் மூலம் ரூ.2,700 கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முதல் எல்பிஜி சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.900 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது ரூ.2,700 கேஷ்பேக்கை வழங்குகிறது. இந்த சலுகைக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை பார்க்கலாம்.

எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு சலுகை

எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு சலுகை

எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு சலுகையானது புதிய பேடிஎம் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தற்போதுள்ள இந்த சலுகையை பயனர்கள் பெறமாட்டார்கள். இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.900 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பேடிஎம் மூலம் எளிதாக எல்பிஜி சிலிண்டரை புக் செய்யலாம்.

மொபைல் எண், எல்பிஜி ஐடி, வாடிக்கையாளர் எண்

மொபைல் எண், எல்பிஜி ஐடி, வாடிக்கையாளர் எண்

பேடிஎம் மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யும் பயனர்கள், அந்த தளத்திற்கு சென்ரு "புக் கேஸ் சிலிண்டர்" என்ற விருப்பத்திற்குள் செல்ல வேண்டும். அதில் எரிவாயு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து மொபைல் எண், எல்பிஜி ஐடி, வாடிக்கையாளர் எண் உள்ளிட்டவையை உள்ளிட வேண்டும். பின் பேடிஎம் வேலட், பேடிஎம் யூபிஐ, வங்கி கார்டுகள், நெட்பேங்கிங் போன்ற எந்தவொரு கட்டண முறையையும் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

"3பி 2700" கேஷ்பேக் சலுகை

பேடிஎம் வாலட்டில் இருப்பு இல்லாதபட்சத்தில் பிற முறைகளை பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம். புதிதாக அறிவிக்கப்பட்ட "3 பி 2700" கேஷ்பேக் சலுகை மூன்று முக்கிய எல்பிஜி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது இந்தியன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் ஆகும்.

பணம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம்

பணம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம்

முன்னதாக ஜூன் மாதத்தில் பேடிஎம் அதன் பயனர்களுக்கு "Paytm Now", "Pay After" திட்டத்தின் செயல்பாட்டை கொண்டுவந்தது. அதாவது சிலிண்டர் புக் செய்யும் போது பணம் இல்லை என்றாலும் "Pay After" திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் சிலிண்டர் புக் செய்து செய்து ஒரு மாதத்திற்கு பிறகு பணம் செலுத்தலாம்.

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. எரிவாயு சிலிண்டரை புக் செய்ய பயனர்கள் பேடிஎம் தளத்திற்கு சென்று புக் கேஸ் சிலிண்டர் என்ற பயன்பாட்டை புக் செய்ய வேண்டும். அதில் விருப்பமான சிலிண்டர் வழங்குநரை புக் செய்ய வேண்டும். பேடிஎம் போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்து பின்னர் பணம் செலுத்துவதற்கான விருப்பமும் இருக்கிறது.

பேடிஎம் செய்தித் தொடர்பாளர் தகவல்

பேடிஎம் செய்தித் தொடர்பாளர் தகவல்

இதுகுறித்து பேடிஎம் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், எங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன்பாடு கட்டணங்களை தடையின்றி முழுமையாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு என்பது இந்தியாவின் ஒவ்வொரு வீடுகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். புதிய பயனர்களை சேர்க்கவும், தங்களது பயனர்களை தொடர்ந்து அடுத்தடுத்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
You Can Get Rs.2700 Cashback For LPG Cylinder Booking: Paytm Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X