வாட்ஸ்அப் மூலம் நொடியில் LPG சிலிண்டர் புக்கிங் செய்வது தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா? காரணம் இருக்கு..

|

LPG சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங் முறையை எளிமைப் படுத்துவதற்காக இந்தியச் சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்கள் பல புதிய முறைகளை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வது முதல் மொபைல் ஆப்ஸ் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்வது வரை பலவித முறைகளில் இப்போது நீங்கள் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். அதேபோல், வாட்ஸ்அப் மூலமும் உங்களால் நொடியில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும் என்று தெரியுமா?

வாட்ஸ்அப் வழியில் எளிமையாக LPG சிலிண்டர் புக்கிங்

வாட்ஸ்அப் வழியில் எளிமையாக LPG சிலிண்டர் புக்கிங்

தெரியாதவர்கள், இந்த பதிவின் மூலம் எப்படி சில நொடியில் வாட்ஸ்அப் வழியில் எளிமையாக LPG சிலிண்டர்களை புக்கிங் செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். இதுபோக, போன் மூலம் புக்கிங் செய்யும் வசதி, SMS மூலம் சிலிண்டர் புக்கிங், ஆன்லைன் புக்கிங், மொபைல் ஆப்ஸ் மூலம் புக்கிங் எனப் பல விதங்களில் இப்போது நீங்கள் உங்களின் சமையல் எரிவாயு சிலிண்டரை புக்கிங் செய்யலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஏன் வாட்ஸ்அப் சிலிண்டர் புக்கிங் பெஸ்ட்?

ஏன் வாட்ஸ்அப் சிலிண்டர் புக்கிங் பெஸ்ட்?

இப்படிப் பல முறைகளில் நீங்கள் உங்களுக்குத் தேவையான சிலிண்டரை புக்கிங் செய்துகொள்ளலாம் என்றாலும் கூட, வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்வது என்பது மிகவும் எளிமையான வழியாகக் கருதப்படுகிறது. காரணம், நீங்கள் சாட் செய்வது போல் சில நொடியில் எந்தவித பிழையும் இல்லாமல் உங்கள் சிலிண்டரை புக்கிங் செய்து, அதற்கான கட்டணத்தையும் உடனுக்குடன் செலுத்திவிடலாம். சரி இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

iPhone 12 Mini வாங்க சரியான நேரம் இது தான்.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..iPhone 12 Mini வாங்க சரியான நேரம் இது தான்.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..

இண்டேன், எச்.பி மற்றும் பாரத் சிலிண்டர் வாடிக்கையாளரா நீங்கள்?

இண்டேன், எச்.பி மற்றும் பாரத் சிலிண்டர் வாடிக்கையாளரா நீங்கள்?

நீங்கள் இந்தியன் ஆயில் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் என இந்த மூன்று நிறுவனங்களில் எந்த ஒரு நிறுவனத்தின் சிலிண்டரை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் உங்களுக்கான செயல்முறை இது தான். இதற்கான முக்கிய விதி, உங்கள் சிலிண்டர் அக்கௌன்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தான் உங்களின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

சிலிண்டர் இணைப்பில் இருக்கும் மொபைல் எண் முக்கியம்

சிலிண்டர் இணைப்பில் இருக்கும் மொபைல் எண் முக்கியம்

இப்போது, உங்களின் சிலிண்டர் இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் வாட்ஸ்அப் புக்கிங் சேவை எண்ணிற்கு நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் புதிய சிலிண்டரை நீங்கள் வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். நீங்கள் மெசேஜ் செய்த அடுத்த நொடியே உங்களுக்கான உறுதிப்படுத்தும் மெசேஜ் வந்துவிடும்.

இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: சியோமியின் 'Mi Air Charger'.. வேறலெவல் பியூச்சர் தொழில்நுட்பம்..இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: சியோமியின் 'Mi Air Charger'.. வேறலெவல் பியூச்சர் தொழில்நுட்பம்..

முக்கிய காரணம் இது தான்.. ஆட்டோமேட்டிக் கஸ்டமர் லிங்க்

முக்கிய காரணம் இது தான்.. ஆட்டோமேட்டிக் கஸ்டமர் லிங்க்

சமையல் எரிவாயு சிலிண்டர் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் என்பதனால் கஸ்டமர் ஐடி முதல் உங்களின் அனைத்து தகவலையும் சிஸ்டம் அதுவாகவே லிங்க் செய்துகொள்ளும். அடுத்தபடியாக, நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான், நீங்கள் புக்கிங் செய்யும் சிலிண்டருக்கான கட்டணத்தைச் செலுத்த லிங்க்-ஐ கிளிக் செய்து பணத்தைச் செலுத்தினால் போதுமானது.

வாட்ஸ்அப் புக்கிங்கிற்கு எப்படி கட்டணத்தை செலுத்தலாம்

வாட்ஸ்அப் புக்கிங்கிற்கு எப்படி கட்டணத்தை செலுத்தலாம்

உங்கள் சிலிண்டருக்கான கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, UPI அல்லது எந்தவொரு ஆன்லைன் வழி பணப்பரிவர்த்தனை மூலமாக நீங்கள் செய்து முடிக்கலாம். சரி, எந்த நிறுவனத்திற்கு எந்த வாட்ஸ்அப் எண்ணில் நாம் தொடர்பு கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரை புக்கிங் செய்ய வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்.

இந்த வாட்ஸ்அப் சிலிண்டர் சேவை எண்களை யூஸ் பண்ணுங்க

இந்த வாட்ஸ்அப் சிலிண்டர் சேவை எண்களை யூஸ் பண்ணுங்க

  • பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் வாட்ஸ்அப் சிலிண்டர் புக்கிங் எண்: 1800224344
  • இண்டேன் நிறுவனத்தின் வாட்ஸ்அப் சிலிண்டர் புக்கிங் எண்: 7588888824
  • எச்.பி. நிறுவனத்தின் வாட்ஸ்அப் சிலிண்டர் புக்கிங் எண்: 92222 01122

Best Mobiles in India

English summary
Booking LPG Gas Cylinders Through WhatsApp Is The Easiest and Best Method For Booking : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X