LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! "இது" தெரியலான சிக்கல் வரலாம் மக்களே.!

|

பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணை போன்ற விஷயங்கள் எவ்வளவு முக்கியமான ஒன்றோ, அதேபோல், ஒவ்வொரு குடும்பத்திற்கு லீகுய்ட் பெட்ரோலியம் கேஸ் (Liquid Petroleum Gas) எனப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களும் (LPG Gas Cylinder) மிகவும் முக்கியமானது. இப்படி ஆண்டு தோறும் கட்டாயம் தேவைப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை எதிர்பார்த்திடாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வேறு வழியின்றி சிலிண்டர் வாங்கும் பொதுமக்கள்.!

வேறு வழியின்றி சிலிண்டர் வாங்கும் பொதுமக்கள்.!

ஒரு தனி குடும்பத்திற்குத் தேவையான ஒரு கேஸ் சிலிண்டரை (Gas Cylinder) இன்று நாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து வாங்க வேண்டியதுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை எப்படி விலை உயர்ந்ததோ அதேபோல், இப்போது சிலிண்டர்களின் விலையும் அதிகமாகியுள்ளது.

என்ன செய்வது, நம்முடைய அத்தியாவசியதேவைக்காக வேறு வழியின்றி ஆயிரம் ரூபாய்க்கு மேல் காசு கொடுத்து LPG சிலிண்டர்களை வாங்குகிறோம்.

இதற்கு முன் எத்தனை சிலிண்டர் புக் செய்தீர்கள்.!

இதற்கு முன் எத்தனை சிலிண்டர் புக் செய்தீர்கள்.!

இதற்கு முன் வரை, உங்களுக்குத் தேவையான சிலிண்டர்களை நீங்கள் எப்படி புக் செய்து பயன்படுத்தினீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

ஆனால், இனி எல்லோரும் ஒரே மாதிரியான முறையில், ஒரே அளவு எண்ணிக்கையில் தான் சிலிண்டர்களை புக்கிங் செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆம், இனி LPG சிலிண்டர் புக் செய்ய சில புதிய விதிமுறைகளை (LPG Cylinder New Booking Rules) நாம் பின்பற்ற வேண்டும்.

5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!5G ஸ்பீட் டெஸ்ட் மட்டும் செஞ்சுடாதீங்க.! விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.! அலெர்ட் மக்களே.!

இனி 1 வருடத்திற்கு இத்தனை சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுமா?

இனி 1 வருடத்திற்கு இத்தனை சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுமா?

சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, பொதுமக்களுக்குத் தேவைப்படும் சிலிண்டர் எண்ணிக்கையில் புதிய எண்ணிக்கை அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய விதிமுறை அறிவிப்பை அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை படி, இனி பொதுமக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 15 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன.! இனி 1 மாதத்திற்கு இத்தனை சிலிண்டர் மட்டும் தான் வழங்கப்படுமா?

என்ன.! இனி 1 மாதத்திற்கு இத்தனை சிலிண்டர் மட்டும் தான் வழங்கப்படுமா?

இந்த எண்ணிக்கைக்கு மேல் நீங்கள் புக் செய்ய முயன்றாலும் இனி இந்த புதிய சிஸ்டம் உங்களுக்கான கூடுதல் சிலிண்டர்களை புக் செய்ய அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தெளிவாக சொல்லப் போனால் ஒரு மாதத்திற்கு இனி உங்களால் 2 சிலிண்டர்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.

அதற்கு மேல் ஒரே மாதத்தில் கூடுதல் சிலிண்டர்கள் எதுவும் உங்களால் புக் செய்ய முடியாது என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்.

இனி எல்லாமே

இனி எல்லாமே "லிமிட்"க்குள்ள தான் இருக்கனும்.!

இதற்கு முன் வரை, சிலிண்டர் புக்கிங் செய்ய மாத எண்ணிக்கை கணக்கு அல்லது வருட எண்ணிக்கை கணக்கு என்று எதுவுமே இல்லாமல் இருந்தது.

ஆனால், வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் என்ற கணக்கில் பொதுமக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, புதிய விதிமுறைகளின் படி, இனி ஆண்டிற்கு 15 சிலிண்டர்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

புதிய விதியின் படி சிலிண்டர் மானியம் எப்போது கிடைக்கும்?

புதிய விதியின் படி சிலிண்டர் மானியம் எப்போது கிடைக்கும்?

அதேபோல், உங்களுடைய சிலிண்டர் மானியம் 12 ஆம் தேதி தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பொதுமக்கள், இந்த விதிமுறையைப் பின்பற்றித் தான் சிலிண்டர்களை வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் Indane அல்லது HP என்று எந்த விநியோகஸ்தர்களிடம் இருந்து கேஸ் சிலிண்டர் வாங்கினாலும், இனி இது தான் அனைவருக்குமான பொது விதி என்பது கவனிக்கத்தக்கது.

இனி பொதுமக்கள் சரியாக பிளான் செய்து சிலிண்டர்களை புக் செய்தால், தேவையில்லாத சிக்கலை தவிர்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஒரு தனி சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் ஒரு தனி சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாத நிலவரத்தின் படி, டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.1053 ஆகவும், பெங்களூரில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1050 ஆகவும் இருக்கிறது.

அதேபோல், மும்பை பகுதிகளில் ஒரு தனி சிலிண்டரின் விலை ரூ.1052.5 ஆக இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரமான சிங்கார சென்னையில் LPG கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.5 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்வது எப்படி?

மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் புக்கிங் செய்வது எப்படி?

சரி, நீங்கள் ஒரு Indane எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் என்றால், இனி நீங்கள் சிலிண்டர் புக்கிங் செய்வது மிகவும் சுலபமானது.

ஆம், வெறும் மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம், உங்களால் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியும்.

உங்கள் LPG கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் இனி உங்கள் சிலிண்டர் புக் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Check This New LPG Gas Cylinder Booking Rules and Price Before Booking in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X