LPG சிலிண்டரை கம்மி விலையில் வாங்க வேண்டுமா? அப்போ இந்த முறைப்படி புக்கிங் செய்யுங்க.!

|

மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது எரிவாயு. LPG கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) இல்லாத ஒரு வீட்டை இன்றைய காலத்தில் பார்க்கவே முடியாது. ஆனால், அதிகரித்துவரும் அதன் விலைவாசி காரணமாக மக்கள் மாற்று வழியைத் தேட ஆரம்பித்துள்ளனர். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரில் சென்று பதிவு செய்வது குறைந்து வருகிறது.

ஆன்லைன் கேஸ் சிலிண்டர் புக்கிங் ஏன் சிறப்பானது?

ஆன்லைன் கேஸ் சிலிண்டர் புக்கிங் ஏன் சிறப்பானது?

ஆன்லைன் கேஸ் சிலிண்டர் புக்கிங் (ONline Gas Cylinder Booking) தளங்கள் அலைச்சலைக் குறைப்பதுடன் சேர்த்துக் குறைந்த விலையில் சிலிண்டரை விநியோகமும் செய்கின்றனர்.

இன்றைய சூழலில் பல ஆன்லைன் பேமண்ட் (Online Payment) தளங்கள் உங்கள் மாதாந்திர செலவுகளை நிர்வாகம் செய்ய மிகவும் உதவிகரமாக இருக்கின்றன.

உங்கள் போன் பில், DTH பில், மின் கட்டணம் போன்றவற்றை அதன் மூலமே சுலபமாகச் செலுத்த முடிகிறது.

சிலிண்டரின் MRP விலையை குறைக்க முடியுமா? நிஜமாவா.!

சிலிண்டரின் MRP விலையை குறைக்க முடியுமா? நிஜமாவா.!

அதே போல் உங்கள் எரிவாயு தீரும் தறுவாயில் இருக்கும்போது ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

இதன் மூலம் பதிவு செய்யும் போது சில சமயங்களில் MRP-யை விட மலிவான விலைக்கு வாங்கி பயனடைய முடிகிறது என்பதே உண்மை.

இந்த சேவையைப் பயன்படுத்தி பாரத் கேஸ், HP கேஸ், இன்டேன் கேஸ் ஆகியவற்றை மட்டும் தான் தற்போது பதிவு செய்ய முடியும்.

இப்போது சிலிண்டர் வாங்க, எந்த - எந்த ஆன்லைன் தளங்கள் இந்த வசதியை வழங்குகிறார்கள் என்று பார்க்கலாம்.

இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32" இன்ச் Smart TV வாங்கலாம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்.!

பேடிஎம் (Paytm)

பேடிஎம் (Paytm)

Paytm என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான ஒரு ஆன்லைன் பேமண்ட் தளமாகும்.

போன் மூலம் கட்டணம் செலுத்தலாம் என்பதை மக்களுக்கு அறிமுகம் செய்ததில் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.

இதை பயன்படுத்தி பாரத் கேஸ், HP கேஸ், இன்டேன் கேஸ் ஆகிய மூன்றிலும் குறைந்த விலைக்கு சிலிண்டர்களை வாங்கிக்கொள்ளலாம்.

சிலிண்டர் விலை மீது 100% தள்ளுபடியை கூட பெற முடியுமா?

சிலிண்டர் விலை மீது 100% தள்ளுபடியை கூட பெற முடியுமா?

ஒவ்வொருமுறை பதிவு செய்யும்போதும் ரூ. 50 முதல் 100 வரை தள்ளுபடி பெறலாம்.

குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே ஆஃப்பர் வரும் என்பதால் சரியான நேரத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் பயனடைய முடியும்.

ஒரு சில சமயங்களில் இந்த பேடிஎம் பயன்படுத்தி 100% தள்ளுபடியை கூட (ஒரே ஒரு முறை மட்டும்) பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

போன்பே (PhonePe) மூலம் சிலிண்டர் புக்கிங் செய்தால் என்ன நன்மை கிடைக்கும்?

போன்பே (PhonePe) மூலம் சிலிண்டர் புக்கிங் செய்தால் என்ன நன்மை கிடைக்கும்?

பேடிஎம் போலவே போன்பேயும் ஒரு பிரபலமான ஆன்லைன் பேமண்ட் தளம்தான். சமீபத்தில் பிரபலமடைந்தாலும் தற்போது தவிர்க்க முடியாத ஒரு பேமண்ட் தளமாக தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது.

PhonePe பயன்படுத்தி புக்கிங் செய்வது மட்டுமின்றி அதற்கான பணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

சிலிண்டர் மீது கிடைக்கும் கேஷ் பேக் நன்மைகள்.!

சிலிண்டர் மீது கிடைக்கும் கேஷ் பேக் நன்மைகள்.!

பாரத் கேஸ், HP கேஸ், இன்டேன் கேஸ் ஆகியவற்றின் சிலிண்டர்களை இதனைப் பயன்படுத்திப் பதிவு செய்து தள்ளுபடி, கேஸ்பாக் (Cash back) ஆகியவற்றை பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு போன்பே தளத்திற்கு சென்று பார்வையிடவும். இந்த ஆப்ஸ் மூலம் பதிவு செய்து கட்டணம் செலுத்தும் போது மட்டுமே இந்த கேஷ் பேக் சலுகை கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூகுள் பே (Google pay) மூலம் கேஸ் சிலிண்டர் புக்கிங்.!

கூகுள் பே (Google pay) மூலம் கேஸ் சிலிண்டர் புக்கிங்.!

தற்போது கூகுள் பே மக்களுக்கு இன்றியமையாத ஒரு பேமண்ட் தளமாகிவிட்டது. இதன் வரவிற்குப் பிறகு கையில் யாரும் பணம் வைத்துக்கொள்வதே இல்லை என்று தான் கூறவேண்டும்.

அந்த அளவிற்கு கூகுள் பே மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன தான் பேடிஎம், போன்பே ஆகியவை இதற்கு முன்னரே வந்துவிட்டாலும் கூட பெரும்பாலான மக்கள் UPI பயன்படுத்தி பணம் செலுத்த ஆரம்பித்தது கூகுள் பே வந்த பிறகு தான்.

ரூ.5000 முதல் Android போன் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் மாடல்கள் இதுவே.!ரூ.5000 முதல் Android போன் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் மாடல்கள் இதுவே.!

இப்படி செய்தால் ஒரு பெருந் தொகையை மிச்சம் பிடிக்க முடியும்.!

இப்படி செய்தால் ஒரு பெருந் தொகையை மிச்சம் பிடிக்க முடியும்.!

பணப்பரிவர்த்தனைகள் மட்டுமின்றி கேஸ் சிலிண்டர் பதிவு செய்யவும் இதனைப் பயன்படுத்த முடியும்.

பாரத் கேஸ், HP கேஸ், இன்டேன் கேஸ் ஆகியவற்றின் சிலின்ண்டர்களை இதை பயன்படுத்திப் பதிவு செய்யலாம்.

கூகுள்பே மூலம் புக்கிங் செய்வதன் மூலம் கேஸ்பாக் (Cash back) அல்லது கூப்பன்களை பெறமுடியும்.

இந்த முறையில் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்தால், அசல் விலையில் இருந்து கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும். இதை தொடர்ச்சியாகச் செய்தால், வருடத்தில் ஒரு பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Top 3 Online Websites To Book LPG Gas Cylinders At Low Cost With Extra Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X