அச்சுறுத்தும் சைபர் குற்றங்கள்

Posted By: Staff
அச்சுறுத்தும் சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள் தற்போது உலக அளவில் ஒரு பெரிய பிரிச்சினையாக இருந்து வருகிறது. இந்த சைபர் குற்றங்கள் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களை சைபர் குற்றவாளிகள் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பகா இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களான சன்டிகார், மொகாலி, புவனேஸ்வர், சூரத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்கள் சைபர் குற்றங்களுக்கு பெருமாளவில் இலக்காகி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் ப்ராட் பேண்ட் இணையதள சேவை மற்றும் இணையதள பாதுகாப்பு குறித்த மக்களின் அறியாமை போன்றவற்றை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் தங்களது குற்றங்களை நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோர்ட்டன் அறிவித்த தகவலின்படி கடந்த ஆண்டு மட்டும் 42 மில்லியன் மக்கள் இந்த சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை சைபர் குற்றங்களின் காரணமாக இந்திய அரசு இழந்திருப்பதாக நோர்ட்டன் கூறுகிறது.

எனவே சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகியவை பற்றி எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot