சிட்னியை மதுரையாக மாற்றிய செல்லூர் ராஜூ? கூகுள் மேப்ல ஓரே கூத்து.! சொன்னது வேற தானா?

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்து கூறியது யாருக்கு பொருந்துமோ இல்லை பொருந்தாதோ என்று தெரியவில்லை. ஆனால் இந்த விசியத்தில் விஞ்ஞானி அமைச்சர் என்று பெயர் எடுத்த செல்

|

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்து கூறியது யாருக்கு பொருந்துமோ இல்லை பொருந்தாதோ என்று தெரியவில்லை. ஆனால் இந்த விசியத்தில் விஞ்ஞானி அமைச்சர் என்று பெயர் எடுத்த செல்லூர் ராஜூக்கு கண்டிப்பாக பொருந்துகின்றது.

சிட்னியை மதுரையாக  மாற்றிய  செல்லூர் ராஜூ?  கூகுள் மேப்ல ஓரே கூத்து.!

இதுதான் தற்போதைய டிரெண்டிங்கான விசியமே. செல்லூர் ராஜூ மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஏதாவது நினைத்து செயல்படுவார். ஆனால் அதன் விளைவு வேறாக மாறிவிடும். இதற்கு பிறகு மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் நாறுநாறாக கிளிக்கப்பட்டு, அந்த விசியத்தில் அவர் பண்ணுவாங்குது உறுதி என்று தற்போது நடந்த விசியத்தில் இருந்தே தெரிகின்றது.

தற்போது என்ன நடந்தது, முன்பு என்ன நடந்தது என்று ஒரு சிலருக்கு தெரிந்து இருக்கலாம். தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள் அதற்கு ஏற்ப நடந்துள்ளது இந்த சம்பவம்.

அமெரிக்கா குளம்:

அமெரிக்கா குளம்:

அமெரிக்காவில் விஞ்ஞானிகள் பெரிய குளத்தில் நீர் ஆவியாகாமல் இருக்க, பிளாஸ்டிக் பந்துகளை மிதக்கவிட்டு நீர் ஆவியாவதை தடுத்தனர். இதற்கு பெரிய தொகை செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை மற்ற நாடுகளும் பின்பற்ற துவங்கினர். ஆனால், தமிழகத்தில் இதற்கு மாற்றாக திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ களத்தில் இறங்கினார்.

நீர் ஆவியாகமால் தடுக்கப்பட்டால், மக்களிடம் நல்ல பெயரும் கிடைக்கும் என்று கணக்கு போட்டு களத்தில் குதித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. திட்டத்தை செயல்படுத்த மதுரை வைகை அணையை தேர்வு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரப்பர் பந்துகளுக்கு பதிலாக தெர்மாகோல் தேர்வு செய்யப்பட்டது.

வைகை அணை:

வைகை அணை:

அமைச்சர் சொல்லூர் ராஜூ நேரடியாக வந்து, வைகை அணையில் இறங்கி செல்லோ டேப்பால் ஓட்டி வைக்கப்பட்ட தெர்மா கோல்களை அணையில் விட்டார். பிறகு அவைகள் பரிசல்களிலும் சென்று அணையில் மதிக்க விடப்பட்டன. ஆனால் விட்ட சிறிது நிமிடங்களிலேயே அடிக்கும் காற்றும் தாக்கு பிடிக்காமல் கரை ஒதுங்கின தெர்மா கோல்கள். இதை அனைத்து மீடியாக்களும் செய்தியாக வெளியிட்டு கிளித்து தொங்க விட்டன.

விஞ்ஞானி அமைச்சர்:

விஞ்ஞானி அமைச்சர்:

சமூக வளைதமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமைச்சர் சொல்லூர் ராஜூவை கார்ட்டூனாக போட்டு கிளித்து தொங்க விட்டனர். மேலும் அதில் விஞ்ஞான (னி) அமைச்சர் என்றும் கிண்டல் அடித்து ஊடகங்களில் செய்தியும் வந்தன. பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் நிருபர்கள் கேள்வி கேட்பதால் கடுப்பாகி இருந்தார்.

விரைவில் மதுரை சிட்னியாக  மாறும்:

விரைவில் மதுரை சிட்னியாக மாறும்:

மதுரையை விரைவில் சிட்னி நகரை போல விளங்க போகிறது என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி நடந்த அதிமுக கூட்டத்தில் பேசினார். இதற்கு பொது மக்கள் ஒருசிலர் வைகை அணையில் தெர்மாகோல் திட்டமே போதும் டா சாமி என்று கிண்டல் இட்டும் அப்போது பேசியிருந்தனர்.

செல்லூர் ராஜூக்கு எதிராக செயல்படும் விதி:

செல்லூர் ராஜூக்கு எதிராக செயல்படும் விதி:

நியூட்டனின் எதிர் வினைபோல செல்லூர் ராஜூ விசியத்தில் தற்போது செயல்பட துவங்கியுள்ளது. விரைவில் மதுரை சிட்னி மாதிரி விளங்கும் என்று பேசினார். ஆனால் தற்போது கூகுள் மேப்பிள் சிட்டி பஸ் நிலையம் என்று சர்ச் செய்தால், மதுரை தான் வருகின்றது. இந்த விசியத்திலும் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவை வைத்தான் மீடியாக்களில் தீனியாகியுள்ளார்.

சிட்னி மதுரையான கதை:

சிட்னி மதுரையான கதை:

இந்நிலையில், யாரோ ஒருவர் மதுரை சிம்மக்கல் பஸ் நிறுத்தை சிட்டி பஸ்நிலையம் (sydney bus depot) என கூகுள் மேப்பில் சேமித்து வைத்துள்ளனர். இதனால் நம் செல்போன்களில் உளஙள் இடத்தை தேர்வு செய்து, மற்றொரு பாக்ஸில் Sydney Bus Depot என கொடுத்து டைரக்ஷன் அல்லது ஸ்டார் கொடுத்து மொபைல் போனில் தேடினாரல் நேராக மதுரை சிம்மனுக்கு போய் சேரும் வழியை காட்டுகின்றது.

செல்லூர் ராஜூ பேச்சுக்கு பல்பு:

செல்லூர் ராஜூ பேச்சுக்கு பல்பு:

அமைச்சர் செல்லூர் ராஜூ எதையாவது பெரிய நோக்கத்துடன் செய்தால், அது கடைசியில் புஸ்வானம் போல் ஆகி விடுகின்றது. முதலிலில் இயற்கை செல்லூர் ராஜூவை பலி வாங்கியது. சிட்னி விசியத்தில் கூகுள் மேப்பில் எந்த செல்லூர் ராஜூ இப்படி செய்தார் என்று தெரியவில்லை. தற்போது மதுரை-சிட்னி விசியத்திலும் பல்பு கிடைத்துள்ளது அமைச்சர் ராஜூவுக்கு என்பதில் சந்தேமில்லை.

Best Mobiles in India

English summary
sydney bus depot in google map in your mobile you will get direction to madurai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X