கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா?

|

நீங்கள் போக்குவரத்தின் நடுவில் சிக்கிக்கொண்டிருக்கும்போதோ அல்லது இதுவரை சென்றிராத நகரத்திற்கு சென்றிருக்கும்போது எப்போதாவது திடீரென டாய்லட் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுளதா?

கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா?

அவ்வாறு ஏற்பட்டிருந்தால் பொது கழிப்பறையை தேடி அலைந்திருப்பீர்கள் தானே! இந்த மாதிரி நேரத்தில் பொது கழிப்பறையைக் கண்டுபிடிக்க சில வழிகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம்.ஒன்று ஒரு உணவகம் அல்லது ஒரு மாலுக்குள் நுழைந்து டாய்லட் எங்கே இருக்கின்றது என்பதை தேடியிருக்கலாம். அதன்பின்னர் உங்கள் வேலை ஒருவழியாக முடிவடைந்திருக்கும்.

யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை

யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை

ஆனால் இனிமேல் நீங்கள் தெரியாத ஊருக்கு சென்றால் டாய்லெட்டை தேடி அலைய வேண்டாம், யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்கு கூகுள் மேப் உதவி செய்யும். ஆனால் கூகிள் மேப்ஸ் தற்போது இந்த விவரங்களை உங்களுக்கு தருகிறது. 'தூய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது பொது கழிப்பறைகளை தேடித்தரும் பணியை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகளின் இருப்பிடங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'லூ ரிவியூ' என்ற பிரச்சாரத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவில் கூகிள் மேப்ஸில் பொது கழிப்பறைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். அங்கு செல்வதற்கான வழிகாட்டியும் கூகுள் மேப்ஸில் இருக்கும்

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து ஆற்றிய உரையில் இந்த அம்சத்தை அவர் குறிப்பிட்டார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். மேலும் கழிப்பறை லொக்கேட்டர் என்ற அம்சம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான ஒரு நல்ல அம்சம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

 45,000 க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகள்

45,000 க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகள்

இந்தியாவில் 1700 நகரங்களில் 45,000 க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகள் கூகிள் வரைபடங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் நகர்ப்புற மக்களில் 53% க்கும் அதிகமானவர்களை பொது கழிப்பறையை கண்டுபிடிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பயன்பாடு இன்னும் கிராமப்புற பகுதிகளுக்கு வரவில்லை

 கூகிள் மேப்ஸ் வழங்கும்

கூகிள் மேப்ஸ் வழங்கும்

இந்த புதிய வசதி கூகிள் மேப்ஸ் வழங்கும் மற்ற அம்சங்களைப் போன்றதுதான். ஒரு பயனாளி பெட்ரோல் நிரப்பும் இடங்கள், உணவகங்கள், மால்களைத் தேடுவது போல் நேரடியாக "கழிப்பறை" என்று கூகுள் மேப்ஸில் தேடினால் போதுமானது. உடனே அந்த பயனாளிக்கு அருகில் இருக்கும் பொது கழிப்பறைகளின் இடங்களை கூகுள் காண்பிக்கும், பயனாளியே எந்த கழிப்பறையை பயன்படுத்தலாம் என்பதை முடிவு முடிவு செய்யலாம்.

 திறந்தவெளி கழிப்பறையை தடுக்க

திறந்தவெளி கழிப்பறையை தடுக்க

திறந்தவெளி கழிப்பறையை தடுக்க அரசுகள் முயற்சித்து வரும் நிலையில் இந்த அம்சம் நம் நாட்டிற்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் மேலும் கூறியபோது, '2019 அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் நாடு திறந்த வெளி கழிப்பறை தடுக்கப்படும் என்றும், 2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 60% இந்திய குடும்பங்களில் குறைந்தது ஒரு மொபைல் போன் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அதே நேரத்தில் 36.4% வீடுகளில் மட்டுமே கழிப்பறை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அனைவரும் வீட்டில் சொந்தமாக கழிப்பறை இல்லை

அனைவரும் வீட்டில் சொந்தமாக கழிப்பறை இல்லை

தற்போது மொபைல் போன் உள்ளவர்கள் அனைவரும் வீட்டில் சொந்தமாக கழிப்பறை இல்லை என்றாலும் பொது கழிப்பறைகளையாவது பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது

Best Mobiles in India

English summary
Locate Public Toilets On Google Maps: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X