கூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்

|

கூகிள் மேப்ஸ் என்பது மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் மேப் பயன்பாடுகளில் ஒன்றாகும். இருசக்கர வாகத்தில் செல்பவர்களுக்கும், ஆட்டோ, டேக்ஸி என பல்வேறு வகையான வாகன ஓட்டிகளுக்கும் கூகிள் மேப் பெரிதளவு உதவியாகு உள்ளது. அதேபோல் ஒரு இடத்திற்கு செல்ல திட்டமிடுவதற்கு முன்னாள், அந்த இடத்திற்கு செல்லும் வழி மற்றும் நேரத்தையும் கூகிள் மேப்பின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். அதேபோல் பொதுவாக வெளி மாநிலமோ அல்லது வெளிநாடோ செல்பவர்களில் பெரும்பாலானோர் கண்டிப்பாக கூகிள் மேப்பை நம்பியே செல்வார்கள்.

வெளிநாடு செல்பவர்களுக்கு கைக்கொடுக்கும் கூகிள்...

வெளிநாடு செல்பவர்களுக்கு கைக்கொடுக்கும் கூகிள்...

வெளிநாடு செல்பவர்கள் கூகிள் மேப்பை பயன்படுத்தி இடத்தையும், சேருவதற்கானா நேரத்தையும் அறிந்து கொள்வார்கள். ஆனால் அந்த இடத்தின் பெயரை மற்றவர்களிடமோ அல்லது டேக்ஸி டிரைவர்களிடம் சரியாக உச்சரித்து கூறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் விதமாக, கூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

உச்சரிப்பை பெரும் வழிமுறைகள்

உச்சரிப்பை பெரும் வழிமுறைகள்

இடத்தின் பெயருக்கு அடுத்ததாக உள்ள ஸ்பீக்கர் ஐகானைக் கிளிக் செய்த உடன், நிர்ணயித்த இடத்தின் பெயரை சரியாக உச்சரித்துக் கூறும். இதன்மூலம் செல்லும் இடத்தை டேக்ஸி டிரைவரிடமோ அல்லது உள்ளூர் வாசிகளிடமோ சரியாக உச்சரித்து வழி கேட்க முடியும். தொலைபேசி எந்த மொழி பேசுபவர்களின் இடத்தில் உள்ளது என்பதை இந்த அம்சம் தாமாகவே உணர்ந்து அந்த இடத்தில் பேசுபவர்களுக்கு ஏற்ப உச்சரிப்பை சரியாக கூறும். தற்போது தொலைபேசி ஆங்கில மொழி பேசும் அமெரிக்காவில் இருந்தால் பாப்-அப் என்ற அம்சம் காண்பிக்காது. அதே ஜப்பான், கொரியா, சீனா போன்ற இடத்திற்கு செல்லும்போது பாப்-அப் அம்சம் காண்பிக்கும் அதை கிளிக் செய்தவுடன், சரியாக உச்சரிப்பை கூறும்.

பிற வார்த்தைகளையும் அறிந்துக் கொள்ளலாம்...

பிற வார்த்தைகளையும் அறிந்துக் கொள்ளலாம்...

அதேபோல் மேலே உள்ள Gif மூலம் கூகிள் மொழிப்பெயர்ப்புக்குள் நேரடியாக நுழைய முடியும். அதில் அந்த பகுதியில் பேசுபவர்களின் சொல்களை மொழிப்பெயர்க்கவும், அதேபோல் நமக்கு தேவையான வார்த்தை நமது மொழியிலேயே டைப் செய்தாலும் அது மொழிப்பெயர்ப்பு செய்து அந்த பகுதிக்கேற்றார் போல் வார்த்தையை மாற்றி கொடுக்கும். இதன்மூலம் செல்லும் இடங்களில் ஏற்படும் சிரமங்கள் பாதியளவு குறையும், எடுத்துக்காட்டாக யாருக்காவது நன்றி கூற வேண்டும் என்றால் நமது மொழியில் டைப் செய்தால், அது நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மொழியை மாற்றி உச்சரிப்பையும் சரியாக கூறும்.

முதற்கட்டமாக 50 மொழிகளில் அறிமுகம்

முதற்கட்டமாக 50 மொழிகளில் அறிமுகம்

இந்த அம்சமானது நவம்பர் மாதத்திற்குள் ஆண்ட்ராய்டு மற்றும் ios மாடல் மொபைல்களில் வெளிவர உள்ளது. மேலும் தொடங்கும்போது முதற்கட்டமாக 50 மொழிகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google Maps Can Now Speak the names of places

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X