Google map-ஐ நம்பி குப்புற விழுந்துட்டேன் குமாரு: கழிவுநீர் வாய்க்காலில் காரை இறக்கிய நபர்.!
கூகுள் மேப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் பல்வேறு புதிய அம்சங்களை வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

கூகுள் மேப்
அதேபோல் ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கூகுள் மேப்ஸ் செயலியைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே திருக்கோவிலூரில் கூகுள் மேப்-ஐ பார்த்தவாறு பயணம் செய்ததால், கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் என்ற மடத்திற்கு வந்துள்ளார். பின்பு அங்கு இருந்து கூகுள் மேப் உதவியுடன் கீழையுர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்குச் செல்ல கூகுள் மேப்-ஐ பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறுகிய சாலை
குறிப்பாக கோவிலில் இருந்து நேராகச் சென்று வலப்புறம் உள்ள பாலத்தில் திரும்பிச் செல்லும்படி கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத ஸ்ரீராம் மெயின் ரோட்டில் செல்லுவதற்குப் பதிலாக தென்பெண்ணை ஆற்றுக்குச் செல்லும் குறுகிய சாலையில் கூகுள் மேப்-ஐ பயன்படுத்தி சென்றுள்ளார்.

அந்த சமயம் எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி விட்டது. குறிப்பாக இந்த சம்பவத்தில் காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசத்தால் தப்பினர்.

முன்பின் தெரியாத இடங்களுக்குச் செல்லும் போது?
அதன்பின்பு கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், கிரேன் உதவியோடு மீட்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பின் தெரியாத இடங்களுக்குச் செல்லும் போது இந்த கூகுள் மேப் உதவி செய்கிறது தான். ஆனாலும் இதை நம்பி மட்டுமே அனைத்து இடங்களுக்கும் போகக் கூடாது.

அதாவது நீங்கள் முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது அங்கு இருக்கும் மக்களிடம் நீங்கள் போக வேண்டிய சரியான இடத்தை கேட்பது மிகவும் நல்லது. குறிப்பாக சில இடங்களில் கூகுள் மேப்-ஐ விட மக்கள் தெளிவான வழியை சொல்லுவார்கள்.

ஸ்ட்ரீட் வியூ
அதேபோல் கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்தும் அனைவரும் ஸ்ட்ரீட் வியூ என்ற அம்சத்தைப் பற்றி தெரியும். அதாவது இந்த அம்சத்தின் மூலம் நகரங்களின் நிஜ புகைப்படங்களை எளிமையாகப் பார்க்க முடியும். தற்போது சில நகரங்களில் மட்டுமே இந்த அம்சம் செயல்படுகிறது. விரைவில் இந்த அம்சம் அனைத்து இடங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
photo courtesy: pipanews.com


Click it and Unblock the Notifications