நுழையவே முடியாத 'தடை' செய்யப்பட்ட பகுதிகள்..!

|

ஆசைப்படுவதற்கு பணம் தேவையில்லை. நடக்கிறதோ இல்லையோ.. நம்மால் முடிந்த வரை உலகை சுற்றி பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு பணம் தேவையில்லை. பாலைவனம், பனி பிரதேசம், தீவு, என எதையும் விட்டு வைக்க கூடாது என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதின் ஓரத்தில் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.

அப்படியான பெரும்பாலான ஆசைக்கு பணம் தான் அடித்தள பிரச்சனையாய் இருக்கும், ஆனால் உலகின் சில மிகவும் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல எவ்வளவு பணம் இருந்தாலும் செல்லுபடி ஆகாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா ? அதாவது சில தடை செய்யப்பட்ட இடங்களை உங்களால் கூகுள் மேப்பில் மட்டுமே தான் காண முடியும்.

01. ஏரியா 51 :

01. ஏரியா 51 :

இதை அமெரிக்காவின் மாபெரும் கான்ஸ்பிரஸி கோட்பாடு (Conspiracy Theory) என்றும் கூறலாம்.

ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டு :

ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டு :

அமெரிக்காவின் இந்த ஏரியா 51-ல் (Area 51) சுமார் 80 மைல் பரப்பளவில் ராணுவ தளம் இருக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த பகுதியில் ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டு சார்ந்த ஆய்வுகள் நடக்கின்றன என்பது சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களின் நம்பிக்கை ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

02. ஸவல்பர்ட் க்ளோபல் சீட் வால்ட் :

02. ஸவல்பர்ட் க்ளோபல் சீட் வால்ட் :

வியசாயமும் உலகமும் ஒருநாள் அழியும் என்ற நம்பிக்கையில் உருவான இடம் இது (Svalbard Global Seed Vault) என்று கூட சொல்லலாம்.

 வங்கி :

வங்கி :

இங்கு தான் உலகம் முழுவதிலும் உள்ள மரபணு வங்கிகளில் இருந்து அனுப்பப்பட்ட 250 மில்லியன் பயிர் விதைகள் சேமிக்கப்பட்டுள்ளன.

கடைசி :

கடைசி :

நியமிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் அல்லது தாவர வளர்ப்பாளர்கள் தவிர்த்து இங்கே யாருக்கும் அனுமதி கிடையாது. மீறி நீங்கள் நுழைகிறீர்கள் என்றால் உலகின் கடைசி மனிதரில் ஒருவராகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்.

03. மேஸ்கோறயே :

03. மேஸ்கோறயே :

மேஸ்கோறயே (Mezhgorye) என்பது ரஷ்யாவில் உள்ள ஒரு மூடப்பட்ட நகரம் ஆகும்.

ரஷ்ய பொக்கிஷங்கள் :

ரஷ்ய பொக்கிஷங்கள் :

இங்கு ரஷ்ய பொக்கிஷங்கள், அல்லது அணு ஆயுத திட்டம், அல்லது மாபெரும் நிலக்கரி கிடங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதே தவிர உண்மையில் தடை செய்யப்பட்ட இந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.

 04. நார்த் சென்டினல் :

04. நார்த் சென்டினல் :

வங்காள விரிகுடாவின் அந்தமான் தீவு பகுதிகளில் இருக்கும் ஒரு தீவு தான் இந்த நார்த் சென்டினல் (North Sentinel).

கடைசி காட்டுவாசி மக்கள் :

கடைசி காட்டுவாசி மக்கள் :

இந்த தீவில் வாழும் மக்கள்கள் தான் நவீன நாகரீகத்தை கிட்டத்தட்ட தொடாமல் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் கடைசி காட்டுவாசி மக்கள் என்று கருதப்படுகின்றனர்

பயங்கரமான மனிதர்கள் :

பயங்கரமான மனிதர்கள் :

இந்த தீவிக்குள் நுழைந்து தொடர்பு மேற்கொள்ள முயன்ற போது அம்புகளாலும் கற்களாலும் தாக்கியுள்ளனர். இந்த தீவு உலகின் மிகவும் பயங்கரமான மனிதர்கள் வாழும் இடங்களில் ஒன்று என்றும் நம்பப்படுகிறது.

05. வாட்டிகன் சீக்ரெட் ஆர்சிவ்ஸ் :

05. வாட்டிகன் சீக்ரெட் ஆர்சிவ்ஸ் :

வாட்டிகன் சீக்ரெட் ஆர்சிவ்ஸ் (Vatican Secret Archives) அதாவது போப் சொத்துக்கள் இருக்கும் இடம்.

முன் அனுமதி :

முன் அனுமதி :

இது சாதாரண நூலகம் இல்லை. மிகவும் புனிதமானவர்கள் மட்டுமே நுழைய முடியும். இங்கு இருக்கும் புத்தகத்தை படிக்க விரும்பினால் கூட முன் அனுமதி பெற வேண்டும்.

06. லஸ்கஸ் கேவ்ஸ் :

06. லஸ்கஸ் கேவ்ஸ் :

உலகின் ஆதிகால குகை ஓவியங்களை உள்ளடக்கிய குகை தான் இந்த லஸ்கஸ் கேவ்ஸ் (Lascaux Caves).

17,500 ஆண்டுகள் :

17,500 ஆண்டுகள் :

இங்கு இருக்கும் ஓவியங்கள் சுமார் 17,500 ஆண்டுகள் பழமை வாய்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றை மிகத்துல்லியமாக பாதுகாக்க வேண்டி இந்த இடம் தடை செய்யப்பட்ட ஒரு இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

07. ரூம் 39 :

07. ரூம் 39 :

வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜொங்கின் (Kim jong) அறை தான் ரூம் 39 ஆகும்.!

சிரமம் :

சிரமம் :

வடகொரியாவிற்குள் நுழைவதே சிரமம் என்ற நிலையில் கிம் ஜொங்கின் அறைக்குள் நுழைவத்தை நினைத்துக்கூட பார்க்க இயலாது.

அரசியல் ஆதரவு :

அரசியல் ஆதரவு :

அறை 39 ஆனது அரசியல் ஆதரவு வாங்க மற்றும் வடகொரியா அணு ஆயுத திட்டம் செயல்படுத்த போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது.

08. சர்ச் ஆஃப் அவர் லேடி மேரி ஆஃப் சியோன் :

08. சர்ச் ஆஃப் அவர் லேடி மேரி ஆஃப் சியோன் :

எத்தியோப்பியாவில் உள்ள இந்த தேவாலயத்தில் (Church of Our Lady Mary of Zion) நுழைவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத ஒன்று என்பது தான் நிதர்சனம்.

பேழை :

பேழை :

இங்கு தான் மிகவும் புனிதமான விவிலிய பொருட்கள் ஆன உடன்படிக்கையின் பேழை (Ark of the Covenant) இருக்கிறது.

09. ஸ்நேக் ஐலாண்ட் :

09. ஸ்நேக் ஐலாண்ட் :

உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் கொடூரமான தீவு தான் இந்த ஸ்னேக் ஐலாண்ட் (Snake Island, São Paulo) எனப்படும் பாம்புகள் தீவு..!

 4000 பாம்புகள் :

4000 பாம்புகள் :

110 ஏக்கர் அளவில் உள்ள இந்த தீவில் மொத்தம் 4000 பாம்புகள் வாழ்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது ஒவ்வொரு ஆறு சதுர கெஜத்திற்கும் ஒரு பாம்பு.

விஷப்பாம்பின் நிலம் :

விஷப்பாம்பின் நிலம் :

மேலும் இங்கு வாழும் பாம்புகள் சாதாரண வகை பாம்புகள் இல்லை, கோல்டன் லான்ஸ்ஹெட் (golden lancehead) போன்ற கொடுமையான விஷப்பாம்பின் நிலம் தான்

இந்த தீவு.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

2015-ஆம் ஆண்டில் நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 10 புரளிகள்..!

ஜனவரி 2016 தலைச்சிறந்த ஸ்மார்ட்போன்கள்..!

'மேலும்' ஒரு ரகசியத்தை வெளியிட்டது - விக்கிலீக்ஸ்..!

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 செல்பீ டிப்ஸ்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
10 Places Around The World That You Can Only Visit Through Google Maps. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more