கீழடியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வக வடிவ பகடை, பாசிமணிகள்: யானை தந்தத்தால் உருவாக்கப்பட்டதாம்!

|

சிவகங்கை மாவட்டம் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வில் நான்கு பாசி மணிகள், யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் முன்னதாகவே நடந்த ஏழு கட்ட அகழாய்வுகள் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பிப்ரவரி 11 ஆம் தேதி 8 ஆம் கட்ட அகழாய்வு பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை

யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை

இந்த நிலையில் நேற்று ஒரு குழியல் 2 அடி தோண்டிய நிலையில் 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 2 பச்சை நிறத்திலும் 2 ஊதா நிறத்திலும் இருந்தன. மேலும் யானை தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டது. இந்த அகழாய்வில் அதிகளவில் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மதுரை அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் ஏழாவது கட்டத்தில் பாண்டிய மன்னனின் சின்னமான 'மீன்' உருவம் சின்னத்துடன் நன்கு வெட்டப்பட்ட உறைக்கிணறு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறைக்கிணறு கிடைத்த இடம் சங்க காலத்தைச் சேர்ந்தது என்பதற்கான மற்றொரு சான்றாக இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வலிமையான பாண்டிய மன்னனின் மீன் சின்னம்

வலிமையான பாண்டிய மன்னனின் மீன் சின்னம்

மதுரை கொடியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் மீன் சின்னம், வலிமையான பாண்டிய மன்னனின் அரசால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இது ஒரு வடிவமைப்பைப் போலத் தோற்றமளிக்கும் ஒரு வளைய உறைக் கிணற்றில் பக்குவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை காலை டிவிட்டரில் இந்த உறைகிணறின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் முறைகள்

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் முறைகள்

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் முறைகள் சங்ககாலத்தில் இருந்தே எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது என்பதை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய முன்னோரின் வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காட்டி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அலங்கரிக்கப்பட்ட மீன் சின்னம் கீழடி அகழ்வாராய்ச்சியில் முதன்முறையாக வளையக் கிணறு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், பல உறைக்கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவற்றில் இது போன்ற கலை நுணுக்கம் எதுவும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சுவாரசியமான கீழடி இன்னும் பல தகவலை நமக்குத் தொடர்ந்து வழங்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தென்னரசு கீழடியில் உள்ள இடத்தை ஆய்வு செய்த பிறகுத் தனது டுவீட்டை பதிவு செய்தார். கீழடி அகழ்வாராய்ச்சியின் ஏழாவது கட்டம் அகழாய்வு கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.

சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள்

சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள்

இந்த ஆராய்ச்சியின் போது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழால் பயன்படுத்தப்பட்ட நீர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிரூபிக்கும் மற்றொரு குடியிருப்பு தளமான கீழடி மற்றும் அகரத்தில் இதுவரை ஒரு டஜன் வளையக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதாவது உறைக்கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடியில் நான்காவது கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களின் கார்பன் டேட்டிங் இன்னும் சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தியது.

2,600 ஆண்டுகள் பழமையானவை

2,600 ஆண்டுகள் பழமையானவை

கார்பன் டேட்டிங் கணிப்பின்படி, இந்த கண்டுபிடுகள் எல்லாம் குறைந்தது 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பதை ஆராய்ச்சியின் முடிவுகள் கண்டறிந்தது. இது நாம் முன்னர் கணித்திருந்த சங்க சகாப்தத்தை சுமார் 300 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பது அனைவரையும் பிரமிக்க வைத்தது. "தேவையான டச் அப் மற்றும் சுத்தம் செய்த பிறகு, மீன் சின்னத்தை வளையத்தில் நன்கு வெட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். கீழடியில் ஒரு வளையக் கிணற்றில் மீன் சின்னத்தைக் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Keezhadi Excavation 8th phase archaelogy researches found Rectangualar Ivory Dice

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X