Home
Social media

கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!

கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 6ம் கட்ட ஆராய்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்தேறியுள்ளது. தற்பொழுது இந்த ஆராய்ச்சியில் பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இன்னும் பல மர்ம முடிச்சுகள் இந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள்

2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள்

மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் தான் கீழடி கிராமம் அமைத்திருக்கிறது. இங்கு தான் தற்பொழுது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள கீழடி

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள கீழடி

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் தற்பொழுது இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு உடல்களும் அடுத்தகட்ட ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களும் குழந்தைகளின் உடல்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 95 செமீ நீளம் கொண்ட மனித உடல் படிமங்கள்

95 செமீ நீளம் கொண்ட மனித உடல் படிமங்கள்

கீழடியில் இதற்கு முன்பும் சில எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் பெரியவர்களின் உடல் படிமங்கள். இந்த பகுதியில் இதுவரை மொத்தமாக மூன்று மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒரு உடல் 95 செமீ நீளம் கொண்டது, மற்றொரு உடல் 75 செமீ நீளம் கொண்டது என்பது கூடுதல் தகவல்.

குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியம்

குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியம்

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உடல்களை வைத்து தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. தற்பொழுது இன்னும் கூடுதலாக இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய தலை

பெரிய தலை

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் படிமங்களில், தலைகள் மட்டும் இயல்பை விட பெரிதாக இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகள் எப்பொழுதும் போல சாதாரணமாக இருக்கிறது. இந்த குழந்தைகளின் தலை பகுதி மட்டும் ஏன் பெரியதாக இருக்கிறது என்பதற்கான சரியான காரணம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காரணம் இது தானா? சந்தேகத்தில் ஆராய்ச்சியாளர்கள்

காரணம் இது தானா? சந்தேகத்தில் ஆராய்ச்சியாளர்கள்

இருப்பினும் அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களின் தகவலின்படி, பெரும்பாலும் நீண்ட காலம் புதைக்கப்பட்ட படிமங்களில் இப்படியான சில மாற்றங்கள் காணப்படும் என்று சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எத்தனை ஆண்டு பழமையானது?

எத்தனை ஆண்டு பழமையானது?

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் வயது மற்றும் பாலினம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது எத்தனை ஆண்டு பழமையானது என்பது இன்னும் சில ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றின் நிலையை வைத்துப் பார்க்கையில் இவை நிச்சயமாக கிமு 6ம் நூற்றாண்டிற்கு முந்தைய உடலாக தான் இருக்கக்கூடும் என்று சந்தேகித்துள்ளார்.

இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் படிமங்கள்

இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் படிமங்கள்

கீழடி ஆராய்ச்சியில் தற்பொழுது இந்த இரண்டு குழந்தைகளின் உடல்கள் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்குப் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய கீழடி சமூகம்

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய கீழடி சமூகம்

கார்பன் ஆராய்ச்சியில், கீழடி படிமங்கள் சுமார் 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சரியாகச் சொன்னால், இவை கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 600 வருடங்களுக்கும் முந்தையது என்பது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
The Mystery Of Unraveling Discovery Of Children's Skeletons With Big Heads Found In Keezhadi : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X