செயற்கை (இரண்டாவது) நிலவை உருவாக்க சீனா திட்டம், ஆடிப்போன நாசா!

சீனா, அப்படி எதை சாத்தியமாக்க போகிறது? பெரிதாக ஒன்றுமில்லை - விரைவில் ஒரு இரண்டாம் (செயற்கையான) சந்திரனை உருவாக்க உள்ளதாம்.

|

சீனர்கள் மூளைக்காரர்கள் தான், அதற்காக இபப்டியா? சமீபத்தில் சீனாவின் விண்வெளி திட்டம் ஒன்றை பற்றிய தகவல் வெளியானது. அந்த திட்டத்தை பற்றி அறிந்தால் பல்வேறு விண்வெளி சாதனைகளை புரிந்த இஸ்ரோ மற்றும் நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமல்ல, நமது தெரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு வானத்தை பார்த்து சோதிடம் சொல்லும் சோதிடக்காரர் கூட ஆடிப்போய் விடுவார்.

செயற்கை (இரண்டாவது) நிலவை உருவாக்க சீனா திட்டம், ஆடிப்போன நாசா!

சீனா, அப்படி எதை சாத்தியமாக்க போகிறது? பெரிதாக ஒன்றுமில்லை - விரைவில் ஒரு இரண்டாம் (செயற்கையான) சந்திரனை உருவாக்க உள்ளதாம்.

அதிகாரப்பூர்வமான தகவலா அல்லது புரளியா?

அதிகாரப்பூர்வமான தகவலா அல்லது புரளியா?

ஆம், இது முற்றிலும் உண்மையான தகவல் தான். சீன நகரமான செங்டு மீதான சந்திர வானம் ஆனது விரைவில் இரண்டாம் சந்திரனை பெற உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர அதிகாரிகளின் கருத்துப்படி, வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் மேற் குறிப்பிட்டுள்ள இடத்தில் செயற்கை சந்திரன் ஒன்று உருவாக்கப்படும். இந்த தகவலை சீன செய்தித்தாள் ஆன பீப்பிள்ஸ் டெய்லி ஆன்லைனும் (PDO) உறுதி படுத்தியுள்ளது.

நிலவிற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?

நிலவிற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?

உருவாக்கம் பெறும் இந்த செயற்கை நிலவானது பூமியின் தற்போதைய சுற்றுப்பாதையில் இணைக்கப்பெற்றுள்ள சந்திரனின் ஒளியுடன் இணைக்கப்பட உள்ளது என்றும், இது பூமி கிரகத்தின் இயற்கையான செயற்கைக்கோளை காட்டிலும் எட்டு மடங்கு அதிக பிரகாசத்தை வெளிக்கிடும் என்றும், செங்டு ஏரோஸ்பேஸ் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் கோ. லிமிடெட் (CASC) நிறுவனத்தின் தலைவர் - வூ சன்ஃபெங் கூறியுள்ளார்.

சீனாவின் நோக்கம் தான் என்ன?

சீனாவின் நோக்கம் தான் என்ன?

உண்மையில், உருவாக்கம் பெறும் செயற்கை நிலவின் மூலமாக தெரு விளக்குகள் தேவைகள் குறையும் என்றும், அதன் வழியாக நகருக்குசெலவு செய்யப்படும் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் சீனா எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான தகவலின் படி, உருவாக்கம் பெறும் செயற்கை நிலவில் இருந்து வெளிப்படும் வெளிச்சமானது, சுமார் 50 மைல் (80 கிலோமீட்டர்) வரை வீசுமாம்.

விண்வெளியில் இருந்து பார்த்தால் தெரியுமா?

விண்வெளியில் இருந்து பார்த்தால் தெரியுமா?

மனிதனால் தயாரிக்கப்படும் இந்த சந்திரன் ஆனது சீனாவின் செங்டு நகரத்தை மட்டும் ஒளிபெற செய்யுமாம். இருந்தாலும் கூட உலகம் முழுவதும் உள்ள மற்ற வெளி நாடுகளிலில் இருந்து (விண்வெளி பகுதியில் இருந்து) சீனாவை பார்க்கும் போது இந்த ஒளிரும் பந்து காட்சிப்படும் என்று ஆசியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. உயரம், அளவு மற்றும் உண்மையான பிரகாசம் போன்ற காரணங்களால், பூமியில் எங்கு இருந்து பார்த்தாலும் காணப்படும் உண்மையான நிலவின் அம்சங்களை இதிலும் எதிர்பார்க்கலாம்.

சந்தேகம் என்கிறது இன்னொரு தகவல்!

சந்தேகம் என்கிறது இன்னொரு தகவல்!

ஒருபக்கம் சீனாவின் இந்த அட்டகாசமான திட்டத்தை பற்றி உலக நாடுகள் வியந்து பேசி கொண்டு இருக்க, மறுபக்கம், செங்டு நகரத்தின் அல்லது சீனாவின் மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவை இந்த திட்டம் பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம் நிலவுகிறது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.

இது ஒன்றும் முதல் முறை அல்ல!

சந்திரனை வெல்ல ஒரு நாடு முயற்சிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த 1993 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையின் படி, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் அமைப்பை 1990 களில் ரஷ்யா கட்டமைத்து வெளியிட்டது. அது ஒரு "ஸ்பேஸ் கண்ணாடி" ஆகும் மற்றும் அது "மூன்று முதல் ஐந்து முழு நிலவுகளுக்கு சமமான" வெளிச்சத்தை உருவாக்கும் திறனை கொண்டிருந்தது மற்றும் சுமார் 3 மைல் (5 கிலோமீட்டர்) விட்டம் என்கிற அளவில் பரந்து கிடந்து உள்ளது. தி கார்டியன் பத்திரிகையின் கூற்றுப்படி, 1999 இல் மீண்டும் ஒரு விண்வெளிக் கண்ணாடியை உருவாக்க ரஷ்யா முயற்சி செய்து தோல்வி அடைந்து உள்ளது.

ரஷ்யாவால் முடியாததை சீனா சாதிக்குமா?

ரஷ்யாவால் முடியாததை சீனா சாதிக்குமா?

சீனாவின் இந்த செயற்கை நிலவு ஆனது, இரவில் தீவிரமாக செயல்படும் விலங்குகளின் வாழ்வியலை பாதிக்கும் என்கிறார் சீனாவின் ஹர்பின் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆஃப் ஒபிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் காங் வெய்மின். செங்டு வான்வெளியில் அமையவுள்ள செயற்கை நிலவின் அளவு மற்றும் ஒளிரும் தொழில்நுட்பம் பற்றிய துல்லியமான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே உகந்த செயற்கை செயற்கைக் கோளின் பிரகாசம் உண்மையில் உள்ளூர் வனவிலங்கு நடைமுறைகளை தடுக்க போதுமானதாக இருக்கும் எனில் அது நிச்சயமாக எதிர்ப்புகளை சந்திக்கும்.

கற்பனையாகவே நீடிக்குமா? காலம் தான் பதில் சொல்லும்!

கற்பனையாகவே நீடிக்குமா? காலம் தான் பதில் சொல்லும்!

எல்லாவற்றிற்கும் மேலாக, விண்வெளிக்குள் செலுத்தப் படும் ஒரு "செயற்கைக்கோள்" என்று வந்து விட்டால் அது பூமிக்குரிய சுற்றுப்பாதையில் மட்டுமே தொடங்கப்பட வேண்டும். ஆனால், இது வரையிலாக, குறிப்பிட்ட செயற்கை நிலவின் சுற்றுப்பாதை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆக இது சாத்தியமாகுமா அல்லது கற்பனையாகவே நீடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
China May Soon Have a Second Artificial Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X