'ஸ்மார்ட்போன்'கள் - ஏமாறாமல் இருப்பது எப்படி..?

By Meganathan

'ஏமாறுபவர்கள் இருக்கும் ஏமாற்றுபவர்களும் இருக்க தான் செய்வர்', 'ஏமாறுவது, ஏமாற்றுவது எல்லாமே இயற்கை' என்று சினிமா வசனங்கள் இருந்தாலும் உண்மையில் ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி தெரியும்.

 

நவீன உலகில் யாரையும் நம்ப கூடாது என்பதை நினைவூட்டும் கொள்ளை சம்பவங்கள் தினந்தோரும் அரங்கேறி வரும் நிலையில் 'தமிழ் கிஸ்பாட் வாசகர்கள்' ஏமாறாமல் இருக்கவே இந்த தொகுப்பு.

உலகில் உணவு, உடை, நீர் என அனைத்திலும் போலி என்ற விஷயம் கலந்து விட்ட நிலையில் தொழில்நுட்ப சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களை கண்டறிவது எப்படி என்பதை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்..

விற்பனையாளர்

விற்பனையாளர்

புதிய மொபைல் போன்களை நன்கு பிரபலமான கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். முன்பின் தெரியாத கடைகளில் போலி ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனை செய்யப்படலாம்.

ஐஎம்ஈஐ

ஐஎம்ஈஐ

இந்தியாவில் வெளியாகும் அனைத்து போன்களிலும் பிரத்யேக அடையாள எண் எனப்படும் ஐஎம்ஈஐ எண் அச்சடிக்கப்பட்டிருக்கும், இந்த எண் போனின் அட்டைப்பெட்டி மற்றும் போனின் பின்புறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த எண் இல்லாத போன்கள் கட்டாயம் வாங்கவே கூடாது.

திரை

திரை

போலி போன்களின் திரையை எளிதாக கண்டறிய முடியும், அவைகளின் தரம் மற்றும் பயன்படுத்தும் போதே அவை போலி என்பதை கண்டறிந்து விட முடியும்.

தரம்
 

தரம்

பெரும்பாலும் போலி போன்களின் வடிவமைப்பு கச்சிதமாக இருக்காது. இதனால் அவைகளை எளிதாக கண்டறிய முடியும்.

ஆடியோ

ஆடியோ

போலி போன்களின் ஆடியோ தரம் இரைச்சலாக இருக்கும். இதனால் புதிய கருவிகளை வாங்கும் போது அதில் ஆடியோக்களை இயக்கி சோதிக்கலாம்.

செயல்திறன்

செயல்திறன்

போலி போன்களின் இயங்கும்திறனை சோதிக்க அவைகளில் இருக்கும் செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கி பாரக்கலாம். இவ்வாறு செய்யும் போது அவை நிச்சியம் ஹேங் ஆகும்.

மெமரி

மெமரி

விலை குறைவான மற்றும் போலி மொபைல் கருவிகளில் 1 அல்லது 2 ஜிபி மெமரியும் மட்டுமே வழங்கப்படும். இதனால் மெமரியை நன்கு சோதிக்க வேண்டும்.

 கேமரா

கேமரா

போலி போனில் 20 எம்பி கேமரா வழங்கப்பட்டிருந்தாலும் அதன் தரம் 2 எம்பி கேமரா போன்று தான் இருக்கும், முடிந்த வரை கேமரா தரத்தை கொண்டே போலி போன்களை கண்டறிய முடியும்.

பேட்டரி

பேட்டரி

போலி போன்களின் பேட்டரி பெரும்பாலும் சீன நிறுவனங்களின் பேட்டரி தான் வழங்கப்பட்டிருக்கும். அவைகளை வைத்தும் போலி படைப்புகளை கண்டறிய முடியும்.

Most Read Articles
 
Read more about:
English summary
Following are some easy and simple steps tat will guide you How to identify fake smartphones. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X