சீகேட் பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டர் மிக வேகமாக இயங்கவும், வேகமாக வேலையை முடிக்கவும் அதிகளவில் உதவி செய்கிறது.

|

ஒரு கம்ப்யூட்டருக்கு மிக முக்கியமான ஒன்று அதில் உள்ள டேட்டா ஸ்டோரேஜ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்டோரேஜ் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவு உயர்ந்து கொண்டே வருகின்றது, கிளவுட் மற்றும் லோக்கல் ஸ்டோரேஜ் பயனாளிகளுக்கு ஹார்ட் டிஸ்க் மூலம் அதிக ஸ்டோரேஜ்களை கொடுத்து வருகின்றன.

சீகேட் பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க் : விமர்சனம்.!

ஒரு கம்ப்யூட்டரில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்வது உள்பட பல விஷயங்களுக்கு லோக்கல் ஸ்டோரேஜ் அதிகம் தேவைப்படுவதால் ஸ்டோரேஜை அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்டோரேஜ் அதிகம் தரும் ஹார்ட் டிஸ்குகள் தற்போது அதிகளவில் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனையாகி வருகின்றன. இந்த விஷயத்தில் சீகேட் ஹார்ட் டிஸ்க் பல ஆண்டுகளாக சிறந்த சேவையை செய்து வருகின்றன.

சீகேட் பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க் : விமர்சனம்.!


மூன்று பெரிய ஹார்ட் டிஸ்க் நிறுவனங்களில் ஒன்று சீகேட் என்பதும், அதிகளவு ஸ்டோரேஜ் தரும் ஹார்ட் டிஸ்குகளை தயாரிக்கும் நம்பகமான நிறுவனம் என்பதும் இந்த துறையில் உள்ளவர்கள் தெரிந்ததே. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 10டிபி அளவுக்கு ஸ்டோரேஜ் உள்ள பர்ராகுடா புரோ புரோ என்ற ஹார்ட் டிஸ்க்கை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் தற்போது இதே நிறுவனம் 12டிபி திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை தயாரித்துள்ளது. எனவே இந்த வகை அதிக ஸ்டோரேஜ் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை வாங்குவது நாம் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.38 ஆயிரம் என்ற விலையில் வெளிவந்துள்ள இந்த பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க், 7200 ஆர்.பிஎம் கொண்டது. இதன் மாடல் எண் ST12000DM0007 என்பது குறிப்பிடத்தக்கது.

சீகேட் பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க் : விமர்சனம்.!


செயல்திறன்:
பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டர் மிக வேகமாக இயங்கவும், வேகமாக வேலையை முடிக்கவும் அதிகளவில் உதவி செய்கிறது. 7200 ஆர்.பிஎம் மற்றும் SATAIII 8-பிளாட்டர் PMR கொண்ட இந்த ஹார்ட் டிஸ்க், கம்ப்யூட்டர்களுக்கு மிகச்சிறந்த செயல் திறனை கொடுக்கவல்லது. எஸ்.எஸ்.டி வேகத்தை ஒப்பிடும்போது இதன் வேகம் அளவில்லாதது. மேலும் இந்த ஹார்ட் டிஸ்குக்கு ஐந்து வருட வேரண்டியும், இரண்டு வருட டேட்டா ரெகவரியும் உண்டு. இந்த ஹார்ட் டிஸ்க் கிட்டத்தட்ட சந்தையில் விற்பனையாகும் அனைத்து வகை ஹார்ட் டிஸ்குகளை விடவும் ஹைகெப்பாசிட்டி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹார்ட் டிஸ்க்கின் ரைட் வேகம் 239.6 எம்பி/வினாடி என்பதும், ரீட் வேகம் 245.6 எம்பி/வினாடி என்பதையும் சோதனை செய்யப்பட்டு அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சிறந்த வேகம் ஆகும். மற்ற ஹார்ட் டிஸ்குகளின் அதிகபட்ச வேகம் 68.9 எம்பி/வினாடி ரைட் வேகமாகவும், 90.8 எம்பி/வினாடி ரீட் வேகமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற ஹார்ட் டிஸ்குகள் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யும் வேகத்தை விட இந்த ஹார்ட் டிஸ்க்கின் வேகத்தை ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் இந்த பர்ராகுடா புரோ ஹார்ட் டிஸ்க் சூடாவதும் இல்லை என்பது ஒரு சிறப்பு. அதிக நேரம் பயன்படுத்தினால் லேசாக வெதுவெதுப்பாக மட்டுமே உள்ளது என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் கம்ப்யூட்டர் அவ்வப்போது கருகும், எரியும் பிரச்சனை இந்த ஹார்ட் டிஸ்க் பயன்படுத்துபவர்களுக்கு வருவதில்லை.

சீகேட் பர்ராகுடா புரோ 12 டிபி ஹார்ட் டிஸ்க் : விமர்சனம்.!


நீங்கள் வாங்க போகிறீர்களா?
இந்த பர்ராகுடா புரோ ஹார்ட் டிஸ்க்கை நீங்கள் வாங்குவதற்கு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த அளவுக்கு ஹை கெப்பாசிட்டி ஹார்ட் டிரைவ், அதாவது வருடத்திற்கு 300டிபி இயங்கும் திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க் வேறு இல்லை. ரீட் மற்றும் ரைட் வேகத்தில் இணையில்லாமல் இருக்கும் இந்த ஹார்ட் டிஸ்க்கை வாங்குவது உண்மையில் புத்திசாலித்தனம் தான்

மேலும் இந்த பர்ராகுடா புரோ ஹார்ட் டிஸ்க், கேம்ஸ் விளையாடுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக காணப்படுகிறது. இதன் விலை ரூ.38000 என்றாலும் கொடுக்கும் விலைக்கு மதிப்புள்ள பொருள்தான் இது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்

Best Mobiles in India

English summary
Seagate Barracuda Pro 12TB review A speedy storage solution ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X