அப்டேட் பெறும் அமேசான் கிண்டில் ஃபயர் டேப்லெட்?

By Karthikeyan
|
அப்டேட் பெறும் அமேசான் கிண்டில் ஃபயர் டேப்லெட்?

அமேசான் தனது அமேசான் கிண்டில் பயர் டேப்லெட்டில் உள்ள சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய இருக்கிறது. இதன் மூலம் இந்த டேப்லெட்டின் தரம் மேலும் உயரும் என நம்பலாம். அதன் மூலம் இந்த டேப்லெட்டைப் பயன்படுத்துவோர் பெரிதும் பலனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த புதிய சாப்ட்வேர்களை பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்ய வாடிக்கையாளர்கள் மேனுவல் வழிமுறையையோ அல்லது வைபையையோ மூலமோ பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு முன்பாக டேப்லெட்டை முழு சார்ஜில் வைத்திருக்க வேண்டும்.

இந்த புதிய 6.3.1 வெர்சனை அப்டேட் செய்வதன் மூலம் கிண்டில் பயரைப் பயன்படுத்துவோர் ஏராளமான வசதிகளைப் பெறமுடியும். குறிப்பாக பேரண்டல் கண்ட்ரோல், புக் எக்ஸ்ட்ராஸ், அமேசான் சில்க் ப்ராவுசருக்கான ரீடிங் வியூவ், பிரிண்ட் ரிபிலிக்கா டெக்ஸ்புக்ஸ், தனிப்பட்ட டாக்குமென்டுகள் மற்றும் பிற வசதிகளையும் அனுபவிக்க முடியும்.

இந்த 6.3.1 வெர்சன் சாப்ட்வேரை அப்டேட் செய்வதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் சாப்ட்வேர் வெர்சனை முடிவு செய்து கொள்ள வேண்டும். பின் குயிக் செட்டிங்சை ஐகனை கிளிக் செய்து மோர் ஆப்சனுக்குள் செல்ல வேண்டும். பின் அதில் உள்ள டிவைஸ் ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே அப்டேட் ஆகத் தொடங்கிவிடும். குறிப்பாக 6.3.1 வெர்சன் அப்டேட் ஆகத் தொடங்கிவிட்டால் வாடிக்கையாளர்கள் உண்மையாகவே அதிர்ஷ்டசாலிகள்தான். அதன் மூலம் அவர்கள் புதிய நவீன் சாப்ட்வேரைப் பெறுவார்கள்.

அவ்வாறு 6.3.1 சாப்ட்வேர் அப்டேட் ஆகவில்லையானால் அவர்கள் அமேசான் வெப் பேஜில் உள்ள டவுன்லோட் சாப்ட்வேர் அப்டேட் 6.3.1 லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சாப்ட்வேர் அப்டேட் பைல் கணினியில் உள்ள டெஸ்க்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்படும்.

பின் கிண்டில் பயர் டேப்லெட் டேப்லெட்டை ஆன் செய்து அதன் திரையை அன்லாக் செய்ய வேண்டும். பின் யுஎஸ்பி கேபிள் மூலம் டேப்லெட் கணினியில் இணைக்க வேண்டும். பின் கணினியின் டெஸ்க்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் அப்டேட்டை டேப்லெட்டுக்கு மாற்ற வேண்டும். சாப்ட்வேர் அப்டேட் டேப்லெட்டுக்கு மாறிய பின் யுஎஸ் கேபிளை அகற்ற வேண்டும்.

இப்போது வாடிக்கையாளர்கள் இந்த சாப்ட்வேரை அப்டேட் செய்யலாம். அதாவது டேப்லெட்டில் உள்ள குயிக் செட்டிங்ஸ் ஐகனை கிளிக் செய்து, பின் மோர் ஆப்சனை தெரிவு செய்து பின் அப்டேட் யுவர் கின்டில் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அப்போது அப்டேட் தொடங்கிவிடும். அப்டேட் ஆகிக் கொண்டிருக்கும் போது டேப்லெட் தானாகவே இரு முறை ரீஸ்டார்ட் ஆகும். அப்டேட் முழுமையடைந்தவுடன் கிண்டில் பயர் டேப்லெட்டின் டிஸ்ப்ளேயில் "கரண்ட் வெர்சன்: 6.3.1 என்று வரும். இப்போது வாடிக்கையாளர் இந்த அப்டேட்டை அனுபவிக்க முடியும்.

மேலும் வைபை மூலம் அப்டேட் செய்பவர்கள் முதலில் வைபையை ஆன் செய்ய வேண்டும். பின் குயிக் செட்டிங்ஸ் ஐகனை க்ளிக் செய்து அதைத் தொடர்ந்து சின்க் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது சாப்ட்வேர் பதிவிறக்கம் தொடங்கிவிடும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X