வீடியோ காலில் இனி உங்கள் வீட்டு அறையை மட்டும் மறைத்துக்கொள்ள புதிய வசதி! ஸ்கைப் செய்த மேஜிக்!

|

மைக்ரோசாப்டின் ஸ்கைப் பயன்பாட்டில் ஒரு அற்புதமான அம்சம் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாகப் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து அலுவலக தொடர்பான வீடியோ அழைப்புகளைப் பேசும் பொழுது நமக்குப் பின்னணியில் உள்ள வீட்டின் அறையின் மோசமான நிலையை மறைத்துக்கொள்ள இப்பொழுது இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கைப் புதிய அம்சம்

ஸ்கைப் புதிய அம்சம்

தற்பொழுது இந்த புதிய அம்சம் ஸ்கைப் பயன்பாட்டின் iOS வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களில் சிறப்பிக்கச் செயல்படுகிறது. நீங்கள் அடுத்த முறை வீடியோ அழைப்பில் இருக்கும்பொழுது உங்கள் பின்னணியில் உள்ள பேக்கிரௌண்டை மழுங்கடிக்கக் கூடிய அம்சத்திற்கான பேக்கிரௌண்ட் ப்ளர் ஆப்ஷனை பயன்படுத்துங்கள்.

புதிய எனபில் பேக்கிரௌண்ட் ப்ளர்

புதிய எனபில் பேக்கிரௌண்ட் ப்ளர்

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ள புதிய அப்டேட் மூலம் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்தலாம். வீடோ அழைப்பின் பொது உங்கள் பின்னணியில் உள்ள ஒழுங்கற்ற அறையைப் பற்றிய கவலை வேண்டாம். இந்த புதிய அம்சம் விரைவில் டெஸ்க்டாப் தளத்திலும் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எனபில் பேக்கிரௌண்ட் ப்ளர் (Enable Background Blur) அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!

ஸ்கைப்பில் பேக்கிரௌண்ட் ப்ளர் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

ஸ்கைப்பில் பேக்கிரௌண்ட் ப்ளர் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?

 • உங்கள் ஐபோன் அல்லது ஐபாடில் உள்ள ஆப் ஸ்டோரிலிருந்து ஸ்கைப்பின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.
 • உங்களுடைய ஸ்கைப் அக்கௌன்ட் இல் இருந்து புதிய வீடியோ அழைப்பைத் தொடங்கவும்.
 • நீங்கள் அழைப்பில் கலந்து கொள்ளும்போது (...) மோர் என்ற மெனுவைத் கிளிக் செய்யவும்.
 • அதில் காணப்படும் 'ப்ளர் மை பேக்கிரவுண்டு' விருப்பத்தை ஒரு முறை கிளிக் செய்யவும்.
 • இப்பொழுது உங்கள் பின்னணியில் உள்ள இடங்கள் மட்டும் மங்கலாக மாற்றப்படும்.
 • உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

   on அல்லது off செய்துகொள்ளலாம்

  on அல்லது off செய்துகொள்ளலாம்

  நீங்கள் வீடியோ அழைப்பில் இருக்கும் பொழுது உங்களுடைய பின்னணியை மட்டுமே இந்த அம்சம் மங்கலாக்குகிறது. ஸ்கைப் வீடியோவில் மட்டுமே இந்த அம்சம் இப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்களை மட்டுமே மையமாக வைத்து பின்னணியை மங்கலாக்கும் இந்த அம்சத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் on அல்லது off செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Microsoft Brings New Skype Background Blur Feature To Video Calls : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X