ஸ்கைப் வேலை செய்யவில்லையா? இதோ இந்த 7 செட்டிங்கை முயற்சி பாருங்கள்.!

ஸ்கைப் பெரும்பாலான நேரங்களில் சரியாக வேலை செய்தாலும் ஒருசில நேரங்களில் ஒரு சில பிரச்சனைகள்

|

உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் ஸ்கைப் நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒருவரை நேர்முகத்தேர்வு செய்யவோ, நமது அன்புக்குரியவர்களிடம் பேசவோ, ஸ்கைப் நமக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஸ்கைப் பெரும்பாலான நேரங்களில் சரியாக வேலை செய்தாலும் ஒருசில நேரங்களில் ஒரு சில பிரச்சனைகள் எழுவதை இதனை பயன்படுத்தியவர்கள் அறிவார்கள்.

ஸ்கைப் வேலை செய்யவில்லையா? இதோ இந்த 7 செட்டிங்கை முயற்சி பாருங்கள்.!

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக கீழே ஒருசில வழிமுறைகளை நாம் தெரிவித்துள்ளோம். இதன்படி நடந்தால் ஸ்கைப்பில் தோன்றும் சில பொதுவான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஸ்கைப்பில் பேசும்போது உங்கள் மைக்ரோபோன் பிரச்சனை செய்தாலோ அல்லது உங்களுடன் பேசுபவர்களின் குரல் அல்லது வீடியோ சரியாக கேட்கவில்லை என்றாலோ நிச்சயம் தீர்வு ஏற்படும்

ஹார்ட்பீட்டை சோதனை செய்யுங்கள்:

ஹார்ட்பீட்டை சோதனை செய்யுங்கள்:

ஸ்கைப் ஹார்ட்பீட் பக்கத்தில் ஸ்கைப் குறித்த சில முக்கிய விபரங்கள் தரப்பட்டிருக்கும். இதில் ஸ்கைப்பில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளும் அதற்கான தீர்வூகளூம் இருக்கும். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் இதில் தரப்பட்டிருக்கும். இதில் உள்ள எந்த பிரச்சனைகளும் இல்லாமல் உங்களுக்கு வேறு மாதிரியான பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கு நிச்சயம் மைக்ரோசாப்ட் உதவும்

ஸ்கைப் ஆடியோ செட்டிங்ஸ்:

ஸ்கைப் ஆடியோ செட்டிங்ஸ்:

ஸ்கைப்பில் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனடியாக உங்கள் ஸ்பிக்கரையோ அல்லது மைக்ரோபோனையோ சோதனை செய்யுங்கள். இதற்கு டூல்ஸ் கிளிக் செய்து அதில் ஆப்சன்ஸ் என்பதை தேர்வு செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் ஏதாவது பேசி சோதனை செய்யுங்கள். நீங்கள் பேசுவது எதிராளிக்கு சரியாக கேட்கும் என்றால் மைக்ரோபோனில் உள்ள பச்சை லைட் ஆன் ஆகும். ஒருவேளை இது வேலை செய்யவில்லை என்பது தெரிந்தால் உடனடியாக மெனுவை க்ளிக் செய்து அதில் வேறு டிவைஸை செலக்ட் செய்யவும். விண்டோஸ் 10 சிலசமயம் மைக்ரோபோனை பிளாக் செய்திருக்கும். இதனை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் பின்னர் பிரைவைஸி சென்று இடதுபுறம் உள்ள மைக்ரோபோனை செலக்ட் செய்து செயலிகளை எனேபிள் செய்யவும்

ஆடியோ ஹார்ட்வேர்:

ஆடியோ ஹார்ட்வேர்:

ஒருசில பிரச்சனைகள் ஆடியோ ஹார்ட்வேர்டால் தோன்றலாம். எனவே அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது ஆடியோ ஹார்ட்வேரை சோதனை செய்ய வேண்டும். மேலும் சில மைக்ரோபோன் அல்லது ஹெட்செட்டில் வால்யூம் மியூட் செய்யப்பட்டிருக்கும். இதனையும் பரிசோதித்து கொள்ளுங்கள்

வீடியோ செட்டிங்கை எடிட் செய்யுங்கள்:

வீடியோ செட்டிங்கை எடிட் செய்யுங்கள்:

உங்களது வெப் கேமிராவில் உள்ள வீடியோ செட்டிங் சரியாக இருப்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை நீங்கள் விண்டோ ஆப்சனில் போய் தெரிந்து கொள்ளலாம். வீடியோ தெரியவில்லை என்றால் அதற்கான டிரைவரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு விண்டோஸ் 10 பிரைவைஸி செட்டிங்கில் உள்ளவற்றை படித்து தெரிந்து கொள்ளலாம்

ஸ்கைப் சோதனை அழைப்பை பயன்படுத்துங்கள்:

ஸ்கைப் சோதனை அழைப்பை பயன்படுத்துங்கள்:

ஆடியோ செட்டிங்கில் உள்ள விண்டோவை ஓப்பன் செய்து இலவச சோதனை அழைப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக ஒரு டம்மியான யூசர் நேமை நீங்கள் உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட்டில் கூடுதலாக பதிவு செய்து கொண்டு அதன் பின்னர் சோதனை அழைப்பை அழைத்து கொள்ளலாம்

டபுள் செக் பேண்ட்வித்:

டபுள் செக் பேண்ட்வித்:

அனைத்தும் சரியாக இருந்தும் உங்களுக்கு வீடியோ தெரிவதில் பிரச்சனை இருந்தால் நம்மிடம் பேசுபவர் பெரிய ஃபைல்களையோ அல்லது 4K வீடியோவையோ டவுன்லோடு செய்து கொண்டிருக்கலாம். இம்மாதிரியான சமயத்தில் ஸ்கைப்பில் ஒரு சிகப்பு ஐகான் நமக்கு தெரியும்

ஸ்கைப் குரூப் அழைப்பு:

ஸ்கைப் குரூப் அழைப்பு:

ஒரு ஸ்கைப் பயனாளி ஒரு குரூப் அழைப்பை அழைக்கும்போது மேற்கண்ட பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றோ அதற்கும் மேற்பட்டோ வரலாம். குரூப்பில் உள்ள அனைவருக்கும் இதுபோன்ற ஒருசில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சனைகளுக்கு நாம் கூறிய மேற்கூறிய வழிகளை பின்பற்றினால் நல்லது.

Best Mobiles in India

English summary
7 settings to check if Skype isn't working: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X