Home
Apps

ஆப்பிள் சிறுவனத்தின் 'சிறி'யுடன் சப்போர்ட் செய்யும் முக்கிய ஆப்ஸ்கள்

By Siva

ஆப்பிள் நிறுவனத்தின் சிறி (Siri) குறித்து பலர் அறிந்திருப்பார்கள். இருப்பினும் தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு சிறு அறிமுகம். சிறி சாப்ட்வே என்பது ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பர்சனல் அசிஸ்டெண்ட் போன்றது.

ஆப்பிள் சிறுவனத்தின் 'சிறி'யுடன் சப்போர்ட் செய்யும் முக்கிய ஆப்ஸ்கள்

நாம் இடும் டெக்னாலஜி பணிகளை செய்யும் ஒரு சேவகன். நாம் குரலால் சொல்லும் ஒரு பணியை இந்த சாப்ட்வேர் நம்முடைய பர்சனல் கம்ப்யூட்டரில் செவ்வனே செய்து முடிக்கும். ஆனால் இந்த சாப்ட்வேர் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன், ஆப்பிள் வாட்ச், மேக் ஆகிய டிவைஸ்களில் மட்டுமே பொருந்தும். மேலும் இந்த சாப்ட்வேர் ஆப்பிள் நிறுவனத்தின் சாப்ட்வேர்களுக்கு மட்டும் ஒத்துழைப்பு தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

ஜியோ ரெடி.! ஏர்டெல் ரெடியா.?? இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவை.!

இந்நிலையில் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப சிறி தற்போது மேலும் ஒரு சில வெளிநிறுவனங்களின் ஆப்ஸ்களுக்கும் சப்போர் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் போட்டியுலகில் வளைந்து கொடுத்தால்தான் வாழ்க்கை என்பதை ஆப்பிள் நிறுவனமும் புரிந்து கொண்டது என்பதே இதன் மூலம் புரிந்து கொள்ளப்படுகிறது.

ஜியோ 4ஜி வாய்ஸ் வேலை செய்யவில்லையா..? இதோ எளிய தீர்வுகள்.!

தற்போது மிக பிரபலமான ஐந்து ஆப்ஸ்களில் சிறி எப்படி செயல்படும் என்பது குறித்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: (Whatsapp)

வாட்ஸ் அப்: (Whatsapp)

உலகில் மிக அதிக நபர்களால் உபயோகப்படுத்தப்படும் வாட்ஸ் அப்-இல் இந்த சிறி சாப்ட்வேர் இணைக்கப்படுவதால் நம்முடைய வேலைகள் மிக எளிதாக முடிந்து விடுகிறது. வாட்ஸ் அப் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலோ, வாய்ஸ் கால் செய்ய வேண்டும் என்றாலோ சிறியை கேட்டுக்கொண்டால் போதும். உடனே நம்முடைய பர்சனல் அசிஸ்டெண்ட் மாதிரியே அந்த வேலையை முடித்துவிடும். இந்த வசதி டிரைவிங் செய்யும்போது பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உபர்: (Uber)

உபர்: (Uber)

நீங்கள் அவசரமாக ரயில் நிலையம் போக வேண்டுமா? உடனே சிறி'யிடம் ரயில் நிலையம் செல்ல ஒரு வண்டி ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று ஆணையிட்டால் போதும். உடனே சிறி, உபர் ஆப்-ஐ தேர்வு செய்து நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ரயில் நிலையம் செல்ல வண்டி புக் செய்வதோடு, கார், டிரைவர் ஆகியவற்றை டிராக் செய்யவும் ஆரம்பித்துவிடும்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லிங்க்ட்-இன்: (Linked In)

லிங்க்ட்-இன்: (Linked In)

வாட்ஸ் அப் போலவே லிங்க்ட்-இன் சமூக வலைத்தளத்தில் ஒரு மெசேஜ் அனுப்பவேண்டும் என்றால் என்ன மெசேஜ் அனுப்ப வேண்டும் யாருக்கு அனுப்ப வேண்டும் என்று உங்கள் உதவியாளரான சிறி'யிடம் சொன்னால் போதும். சம்பந்தப்பட்ட லிங்க்ட்-இன் நண்பருக்கு அந்த மெசேஜ் உரிய நேரத்தில் போய் சேர்ந்துவிடும்

பிண்ட்ரெஸ்ட்: (Pinterest)

பிண்ட்ரெஸ்ட்: (Pinterest)

பிண்ட்ரெஸ்ட் என்ற புகைப்பட சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான புகைப்படங்களை தேட வேண்டும் என்றால் நாம் நம்முடைய அக்கவுண்டை ஓப்பன் செய்து சியர்ச் ஆப்சனில் சென்று அந்த வகை புகைப்படங்களை தேர்வு செய்வோம். இனிமேல் சிறியிடம் 'உணவு சம்பந்தமான புகைப்படங்களை தேடு' என்ற ஒரு ஆணையை பிறப்பித்தால் போதும். உடனே அதுவே நமக்கு தேவையான புகைபப்டங்களை கண்டுப்பிடித்து கொடுத்துவிடும்

ஸ்கைப்:

ஸ்கைப்:

மற்ற ஆப்ஸ்கள் மாதிரியேதான் இதிலும். நம்முடைய ஸ்கைப் காண்டாக்டில் உள்ள ஒரு ஒருவருக்கு டெக்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும் அல்லது வீடியோ கால் அழைக்க வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை சொன்னால் போது உடனே அந்த பணியை சிறி, சிறப்புடன் செய்து முடித்துவிடும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Apple opened up Siri for third-party apps with iOS 10. Here are the most frequently used apps on your iPhone that work seamlessly with Siri.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X