Home
How to

அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப்-ஐ பயன்படுத்துவது எப்படி?

ஸ்கைப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யாமலேயே வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தும் புதிய வசதி

By Siva

வீடியோ காலிங் பயன்படுத்த வேண்டும் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஸ்கைப் என்பது அனைவருக்கும் தெரியும். வாடிக்கையாளர்களின் வசதியை முன்னிட்டு ஸ்கைப், அவ்வப்போது புதுப்புது வசதிகளை ஏற்படுத்தி வருகிறது ஸ்கைப் நிர்வாகம். இந்நிலையில் ஸ்கைப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யாமலேயே வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தும் புதிய வசதியை ஸ்கைப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப்-ஐ பயன்படுத்துவது எப்படி?

இந்த வசதி வெப் ஸ்கப்பில் மட்டுமே உள்ளது. அதாவது ஸ்கைபில் ரிஜிஸ்தர் செய்த ஒருவர் தனது சேட் ரூமில் கெஸ்ட் ஆக அக்கவுண்ட் இல்லாத ஒருவரையும் அழைப்பு விடுக்கலாம். அவர்களுக்கு ஒரு லிங்க் செல்லும்.

தொலைந்த ஆண்ட்ராய்டை கூகுளின் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி.?

அந்த லிங்க்கை க்ளிக் செய்தால் போதும், அக்கவுண்ட் இல்லை என்றாலும் ஸ்கைபை பயன்படுத்தி வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தலாம். இந்த ஆப்சனை எப்படி பயன்படுத்துவது என்பதை தற்போது பார்ப்போம்

வெப் ஸ்கைப்-ஐ ஓப்பன் செய்யுங்கள்

வெப் ஸ்கைப்-ஐ ஓப்பன் செய்யுங்கள்

முதலில் நீங்கள் ஸ்கைப் இணையதளத்தில் உள்ள வெப் ஸ்கைப் சென்று சேட் ரூம் மற்றும் கெஸ்ட் லிங்க் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டும். நீங்கள் தான் அந்த பக்கத்தின் முதன்மையானாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உரையாடலை ஆரம்பியுங்கள்

உரையாடலை ஆரம்பியுங்கள்

ஸ்கைப் யூ.ஆர்.எல்-ஐ ஓப்பன் செய்தவுடன் உங்களுக்கு இரண்டுவிதமான ஆப்சன்கள் தோன்றும். ஸ்டார்ட் த கான்வர்செஷன் மற்றும் டவுன்லோடு ஸ்கைப் ஆகிய இரண்டு ஆப்சன்களில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய ஆப்சன் ஸ்டார்ட் த கான்வர்செஷன் என்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்

பெயரை பதிவு செய்யுங்கள்

பெயரை பதிவு செய்யுங்கள்

மேற்கண்ட இரண்டு ஸ்டெப்களுக்கு பின்னர் உங்களுடைய பெயரை நீங்கள் கேட்கப்பட்டுள்ள இடத்தில் பதிவு செய்ய வேண்டும். பெயரை பதிவு செய்தவுடன் ஸ்டார்ட் த கான்வர்செஷன் என்ற பட்டனை அழுத்துங்கள். பின்னர் நீங்கள் ஒருசில வினாடிகள் காத்திருக்க வேண்டும்

இன்வைட் லிங்க்-ஐ காப்பி செய்து ஷேர் செய்ய வேண்டும்

இன்வைட் லிங்க்-ஐ காப்பி செய்து ஷேர் செய்ய வேண்டும்

உங்கள் பெயரை பதிவு செய்த ஒருசில வினாடிகளில் உங்களுக்கு சேட் ரூமின் லிங்க் தோன்றும் இந்த லிங்க்-ஐ நீங்கள் காப்பி செய்து உங்களுடைய நண்பர்கள் யார் யாரிடம் வீடியோ மூலம் பேச வேண்டுமோ அவர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த லிங்க்-ஐ பெற்ற உங்களுடைய நண்பர்கள் அந்த லிங்க்கை க்ளிக் செய்து உங்களது வீடியோ உரையாடலில் கலந்து கொள்ளலாம். இதில் முக்கிய விஷயம் என்னவெனில் உங்கள் நண்பர்களுக்கு ஸ்கைப் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை

எத்தனை நண்பர்களுடன் ஒரே நேரத்தில் இணையலாம்

எத்தனை நண்பர்களுடன் ஒரே நேரத்தில் இணையலாம்

இந்த வசதியில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. அதாவது இந்த குரூப் உரையாடலில் நீங்கள் அதிகபட்சமாக 300 நண்பர்களுடன் மட்டுமே உரையாட முடியும். அதற்கு மேல் அந்த லிங்க் வேலை செய்யாது. அதேபோல் இந்த லிங்க் உருவான நேரத்தில் இருந்து 24 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

More from GizBot

Best Mobiles in India

English summary
Skype, without any doubt, is one of the most used video calling communication service on the planet right now. In recent times, there are a lot of features being added to the platform and one of them is that users can now chat with others without having an account in Skype.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X