புதிய வகை செல்பீ - யூஸீ பற்றி உங்களுக்கு தெரியுமா, இது தான் இப்ப ட்ரென்டிங்

Written By:

சில காலமாக இணையத்தில் பல செல்பிக்களை பார்த்திருப்பீங்க, நீங்களும் நிறைய செல்பிக்களை போட்டிருப்பீங்க. கூட்டமாக எடுக்கப்பட்ட செல்பிக்களை பேஸ்புக்கில் பார்த்தீங்களா. இப்ப இந்த வகையான செல்பிக்கள் இணையத்தில் அதிகமாக உளவிட்டிருக்கு. இது ஒரு வகையில் செல்பிக்களின் அடுத்த பரிமானமான யூஸீயாகவும் இருக்கலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

புதிய வகை செல்பீ - யூஸீ பற்றி உங்களுக்கு தெரியுமா

யூஸீ என்றால் என்ன

நகர்ப்புற அகராதியில் யூஸீ என்றால் குழுவாக எடுக்கப்படும் புகைப்படம் ஆகும். இந்த குழுவில் எத்தனை பேர் வேண்டுமென்றாலும் இடம் பெறலாம். நம்மாளுங்க இந்த குரூப் செல்பிக்களை யூஸீ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த வகை செல்பிக்களை யார் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது.

ஆஸ்கர் நிகழ்ச்சியில் எளென் டி ஜெனரஸ் பல நட்சத்திரங்களை செல்பி எடுக்க அழைத்து எடுத்த குறிப்பிட்ட அந்த செல்பி ட்விட்டரில் 3 மில்லியன் முறை ரீ ட்வீட் செய்யப்பட்டதோடு ஓபாமாவின் முந்தைய ட்விட்டர் சாதனையையும் முறியடித்தது. இதே முறை பாலிவுட்டிலும் கடைப்பிடிக்கப்பட்டது. ஐஐஎப்ஏ விருது வழங்கும் விழாவில் இந்த முறை செல்பி எடுக்கப்பட்டது.

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் இந்த யூஸீ முறையும் பிரபலமடையும் என்பதோடு இது உளவியல் ரீதியாக ஏற்று கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
Ussie a group selfie becoming viral in social media
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot