Just In
Don't Miss
- News
திருச்சி டூ சிவகங்கை... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... நெகிழ்ந்து போன ப.சிதம்பரம்
- Movies
ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா?
- Sports
இவ்ளோ மோசமான பிட்ச்சா? போட்டியே வேண்டாம்.. புகழ்பெற்ற மைதானத்தில் நடந்த பரபர சம்பவம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழகத்தில் தெளிவாக தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணம்! எப்பொழுது தெரியுமா?
சந்திரன் பூமியின் பின்னால் நேரடியாக அதன் நிழலுக்குள் செல்லும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் சரியாக அல்லது மிக நெருக்கமாக (ஒத்திசைவில்), பூமியுடன் மற்ற இரண்டிற்கும் இடையில் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழும்.

நிலாவால் சூரியனை முழுமையாக மறைக்க இயலாது
அதேபோல் சூரிய கிரகணத்தின் போது, நிலவு சூரியனுக்கு முன்னால் நேரடியாக நகரும் இதனால் சூரியனை நிலவு மறைத்து கிரகணத்தை ஏற்படுத்தும். ஆனால் வருடாந்திர கிரகணத்தின் போது, நிலவு மிகவும் சிறியதாக இருக்கும் காரணத்தினால் நிலாவால் சூரியனை முழுமையாக மறைக்க இயலாது.

'ரிங் ஆப் ஃபயர்
இந்த காரணத்தினால் தற்பொழுது நிகழவிருக்கும் சூரிய கிரகணம் ரிங் போன்ற வடிவத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் 'ரிங் ஆப் ஃபயர்' (Ring Of Fire) என்று குறிப்பிடுகின்றனர். நிலவின் நிழலைச் சுற்றி சூரியனின் வெளிச்சம் நெருப்பு வட்டம் போல் காட்சி அளிக்கும் என்பதனால் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்!

டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்கிறது
இந்த ரிங் ஆப் ஃபயர் சூரிய கிரகணம் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த ஆண்டின் இறுதி சூடிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, சவுதியா அரேபியா, கத்தார், மலேசியா, ஓமான், சிங்கப்பூர், இலங்கை, மெரினா தீவுகள் மற்றும் போர்னியோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வைக் காண முடியும்.

ரிங் ஆப் ஃபயர் தோன்ற காரணம் என்ன?
இந்த ஆண்டின் இந்த நேரத்தில், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இதனால், வானத்தில் அதன் வெளிப்படையான அளவு சூரியனை முழுமையாக மறைக்கும் அளவுக்குப் பெரிதாக இல்லை. எனவே, இது ஒரு முழு சூரிய கிரகணத்திற்குப் பதிலாக 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது.

ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும் இடங்கள்
நிகழவிருக்கும் இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் மத்திய கிழக்கு, இந்தியப் பெருங்கடல், வடமேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உட்பட உலகின் பிற பகுதிகளிலும் ஒரு பகுதி சூரிய கிரகணமாகக் காணப்படும்.
டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் தெரியும் இந்த ஆண்டின் இறுதி முழு கிரகணம்
நாசாவின் வரைபடத்தின் அடிப்படையில் டிசம்பர் 26ம் தேதி நிகழும் கிரகணம் கோயம்புத்தூரில் முதலில் தெரியும். இந்த ரிங் ஆப் ஃபயர் கிரகணத்தைக் காணும் முதல் பெரிய நகரமாக கோயம்புத்தூர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதையில் உள்ள மற்ற நகரங்களும் "ரிங் ஆப் ஃபயர்" கிரகணத்தைக் காண முடியும்.

என்ன நேரத்தில் இந்த கிரகணத்தை பார்க்கலாம்
இந்த சூரிய கிரகணம் காலை 8:04 மணிக்குத் தொடங்கும், கிரகணத்தின் முதல் பாதி காலை 9:24 மணிக்கு தொடங்குகிறது, அதற்குப்பின் முழு கிரகணம் சந்திரன் சூரியனின் மையத்திற்கு மிக அருகில் இருக்கும்போது ரிங் ஆப் ஃபயர் கிரகணம் காலை 9:26 மணிக்குத் தொடங்கும். முழு கிரகணம் காலை 9:27 மணி வரை நீடிக்கும், பின் காலை 11:05 மணி அளவில் சந்திரன் சூரியனின் ஓரங்களை விட்டு விலகி அடுத்த பகுதி கிரகணத்தை முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் கண்களால் பார்க்க வேண்டாம்
டிசம்பர் 26ம் தேதி நிகழும் இந்த சூரிய கிரகணத்தை மக்கள் வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் சாதாரண சன்கிளாஸ்கள் அல்லது போலராய்டு கண்கண்ணாடிகளை பயன்படுத்தி சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்றும் அறிவுரைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாகச் சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090