கொரோனா காரணமாக ஊழியர்களை கொத்தாக வீட்டுக்கு அனுப்பிய மொஸில்லா நிறுவனம்.!

|

இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

வைரஸ் தொற்று இருப்பவர்களுடன்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுசீரமைப்பை

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் சூழ்நிலையில் பிரபலமான பிரௌசரான மொஸில்லா நிறுவனமும் மறுசீரமைப்பை அறிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக சுமார் 250ஊழியர்கள் வரை வேலையிழக்க நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்திற்கு பின் ஜம்மு காஷ்மீரில் 4 ஜி சேவை: மத்திய அரசு!சுதந்திர தினத்திற்கு பின் ஜம்மு காஷ்மீரில் 4 ஜி சேவை: மத்திய அரசு!

துவகத்தில் 70பேரை பணிநீக்கம் செயத்

இந்தாண்டு துவகத்தில் 70பேரை பணிநீக்கம் செயத் நிலையில், 2018 ஆண்டில் இருந்து இதுவரை 1000-க்கம் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொற்றுக்கு முன்பாக

இந்த கொரோனா தொற்றுக்கு முன்பாக இந்தாண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து சிறந்த மாற்றங்கள் மற்றும் புதுமையான திட்டங்களை உருவாக்க நினைந்திருந்தோம்,ஆனால் இந்த கொரோனா தொற்று காரணமாக மாறிவிட்டது. இதனால் 250 ஊழியர்களை பணீநீக்கம் செய்து பணியாளர்களின் அளவைக் குறைத்து எண்களின் வளர்ச்சிக்கு திட்டங்களை முடிவு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணீநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்

மேலும் பணீநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அவர்களின் முழு அடிப்படையில் ஊதியத்திற்கு சமமான பிரிவினைகளைப் பெறுவார்கள் என்றும், இந்த ஆண்டில் முதல் பாதியில் அவர்களின் தனிப்பட்ட செயல்திறன் போனஸையும்,அத்துடன் தங்கள் நிறுவனத்தின் போனஸ் மற்றும் நிலையான கோப்ரா சுகாதார காப்பீட்டையும் பெறுவார்கள் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா காரணமாக ஊழியர்களை பணீநீக்கம்

பல்வேறு நிறுவனங்கள் கொரோனா காரணமாக ஊழியர்களை பணீநீக்கம் செய்து வரும் நிலையில் காக்னிசன்ட் தனது ஊழியர்களுக்கு வழங்க இருக்கும் ப்ரோமோஸன்களை துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி நிறுவனத்தின் கொள்கைப்படி வருடத்தில் 2முறை சிறந்த ஊழியர்களுக்கு ப்ரோமோஷன் வழங்கப்படும். ஆனால் கடந்த மார்ச் மாதம் செய்திருக்கவேண்டிய ப்ரோமோஷன்கள் இந்த கொரோனாவால் தடைபட்டதால் வரும் அக்டோபர் மாதம் கூடுதலாக ப்ரோமோஷன்களை வழங்கப்போவதாக காக்னிசன்ட் அறிவித்துள்ளது.

லாண்மை,புதுமைகளை

மேலும் வரும் அக்டோபர் 1-ம் தேதி துவங்கும் ப்ரோமோஷன் பணிகள், ஊழியர்களின் வேலைத்திறன்,டீம் மேலாண்மை,புதுமைகளை முன்னெடுத்தல்,நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு பங்களித்தல் போன்ற அளவீடுகளை கொண்ட நிர்ணயிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Mozilla cuts 25% of workforce after pandemic hits revenue: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X