Subscribe to Gizbot

திகைக்க வைக்கும் மொஸில்லாவின் வளர்ச்சி...!

Posted By:

இன்று இணையம் பயன்படுத்தும் நம் அனைவரும் அறிந்தது தான் மொஸில்லாவின் வளர்ச்சி பற்றி.

இது நாம் அனைவரும் கண்டு, அனுபவித்து வரும் உண்மையே. புதிய தொழில் நுட்பம், திறவூற்று டிஜிட்டல் வளர்ச்சி, புதிய தளங்களில் செயல்பாடு, ஒவ்வொரு நாளும் புதிய பயனாளர்களைப் பெறுதல் என மொஸில்லாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளதை, யாரும் மறுக்க முடியாது.

மொஸில்லாவின் வளர்ச்சியைக் கீழே தரப்பட்டுள்ள அதன் வரலாற்றுச் சாதனைகள், உறுதி செய்வதாக அமைந்துள்ளன.

1998 ஆம் ஆண்டு மார்ச் 31ல் மொஸில்லா திட்டம் உருவானது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குப் புதுமையையும், அவர்கள் விரும்புவதனையும் தரவேண்டும் என்பதனை இலக்குகளாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது.

இலாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட இந்த திட்டம், இணையப் பயனாளர்கள் கைகளில், விருப்பப்பட்டவற்றைத் தருவதற்காக, பயர்பாக்ஸ் பிரவுசரை உருவாக்கியது.

2004 ஆம் ஆண்டில், பயர்பாக்ஸ் பதிப்பு 1 வெளியானபோது, நியூ யார்க் டைம்ஸ் இதழில் அறிவிக்கப்பட்ட ஒரு பக்க விளம்பரத்தினைப் பார்த்த, 10 ஆயிரம் பேர், அந்த விளம்பரத்திற்கான நிதியைக் கொடுத்து, தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர்.

இன்று, அனைத்து நாடுகளிலிருந்தும், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், நிதி உதவி செய்து வருகின்றனர். அன்டார்ட்டிகா கண்டத்திலிருந்தும் இதற்கு உதவி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு இணையம் பயன்படுத்துபவர்களில், 80 சதவீதம் பேர், பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.

பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் தொகுப்புகள், இணைய அனுபவத்தினை, அவரவர் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள இடம் அளித்து வருகின்றன. இந்த தொகுப்புகள் இதுவரை 300 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இணையத்தில் உலா வருபவர்களின் தனி நபர் தகவல்களை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதை, பயர்பாக்ஸ் பிரவுசர் தான் முதலில் எடுத்துச் சென்றது. இந்த வகையில் பிரைவேட் பிரவுசிங் போன்ற வழிகளைப் பயனாளர்களுக்குத் தந்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களின் தனி நபர் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

சந்தையை கலக்கும் பிரிண்டரை பார்க்க

திகைக்க வைக்கும் மொஸில்லாவின் வளர்ச்சி...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

உலகளாவிய அளவில், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள் ஒரு சமுதாயமாக இணைக்கும் பணியினை மொஸில்லா மேற்கொண்டுள்ளது. இவர்கள், பயர்பாக்ஸ் பிரவுசரை உலகின் 89 மொழிகளில் மொழி பெயர்த்து அமைத்துள்ளனர். இதன் மூலம், உலகின் ஜனத்தொகையில் 95 சதவீதம் பேர் தங்கள் மொழிகளில், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்த முடிகிறது.

2008 ஆம் ஆண்டில், 80,02,530 பேர் ஒரே நாளில் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தரவிறக்கம் செய்தனர். இதன் மூலம் 24 மணி நேரத்தில் அதிகமான பேர்களால், தரவிறக்கம் செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ற கின்னஸ் உலக சாதனையை பயர்பாக்ஸ் பிரவுசர் மேற்கொண்டது.

மொஸில்லா திருவிழா என ஆண்டு தோறும் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான இணைய வல்லுநர்கள் இதில் இணைந்து தங்கள் திறமையின் நிகழ்வுகளை மொஸில்லாவிற்கு அளிக்கின்றனர். இதன் மூலம், இணையத்தின் முழுத் திறனை மக்கள் அனுபவிக்க முடிகிறது.

மொஸில்லா வெப் மேக்கர் (Mozilla Webmaker) மூலம், இணையம் கற்ற ஓர் உலகத்தை அமைக்க முடிகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் இணையத்தை வடிவமைக்கத் தேவையான சாதனங்களை, சாப்ட்வேர் தொகுப்புகளாக அளிக்கிறது.

இதே போல Mozilla WebFWD program என்பது, ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று வகையிலான புரோகிராமர்கள் மற்றும் புதியன கண்டுபிடிப்பாளர்களைப் புதியனவற்றை வடிவமைத்துத் தர உற்சாகப்படுத்தும் புரோகிராம் ஆகும். இதன் மூலம் இணைய பயன்பாடு இன்னும் மேன்மையடைகிறது.

Mozilla Developer Network என்பது மொஸில்லா சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களால் அமைக்கப்பட்ட ஒரு இணைய வெளி சமுதாயம். இச்சமுதாய உறுப்பினர்கள், மிகச் சிறந்த இணையச் செயல்பாட்டு விளக்கங்கள், சாதனங்கள் மற்றும் உரைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இவை ஏறத்தாழ 20 லட்சம் வாடிக்கையாளர்களை அடைகின்றன.

இந்த 2013 ஆம் ஆண்டில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. இதன் மூலம், ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் சிறப்புகளை முழுமையாக அடையலாம்.

இதன் மூலம், ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை நாடும் மக்களுக்கு, அதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தனிப்பட்ட முறையில் அதன் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும் என மொஸில்லா இலக்கு நிர்ணயித்துள்ளது.

மொஸில்லாவின் இந்தப் பணி ஒரு சமுதாயப் பணியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கானவர் செய்திடும் நிதி உதவியும், தன்னார்வ வல்லுநர்கள் வழங்கிடும் தொழில் நுட்ப உதவியும் இதனை ஈடேற்ற உதவுகின்றன.

இணையம் என்பது எல்லாருக்கும் எந்த நேரமும் பயன்படுத்தும் ஒரு வெளியாக இருக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்களா! உடனே மொஸில்லாவின் இணைய சமுதாயத்தில் இணையுங்கள்.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot