பயர்பாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் புக்மார்க்களில் நோட்ஸ் சேர்ப்பது எப்படி?
புத்தகம் வாசிக்க புக்மார்க்கள் அவசியமான ஒன்றாக இருக்கிறது. பெரிய புத்தகங்களை இடைவெளி விட்டு வாசிக்கும் போது, புக்மார்க் வைத்துக் கொண்டால் பின் எளிமையாக வாசிக்கத் துவங்கலாம்.
புத்தகம் வாசிக்க புக்மார்க்கள் அவசியமான ஒன்றாக இருக்கிறது. பெரிய புத்தகங்களை இடைவெளி விட்டு வாசிக்கும் போது, புக்மார்க் வைத்துக் கொண்டால் பின் எளிமையாக வாசிக்கத் துவங்கலாம். இதேபோன்று பிரவுசர்களிலும் புக்மார்க் வசதி வழங்கப்படுகிறது.

புக்மார்க்
வருடக்கணக்கில் புக்மார்க் செய்து வைத்திருப்பவற்றை சிறு இடைவெளிக்கு பின் பார்க்க முயற்சிப்பது கடினமான காரியமாக இருக்கும். ஒவ்வொரு பக்கத்தையும் திறந்து அதில் இருப்பதை பார்ப்பது அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும்.
இதற்கான தீர்வு பயர்பாக்ஸ் பிரவுசரில் நோட்ஸ் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நோட்சை பயர்பாக்ஸ் புக்மார்க்கில் சேர்த்துக் கொள்ள முடியும். எனினும் இந்த அம்சத்தை நீக்கிவிட்டது. எனினும் க்ரோம் சேவையில் இந்த அம்சம் முதன்மையாக இருந்தது.

க்ரோம்
புக்மார்க் பெயரில் குறிப்பு எடுக்கலாம்:
- க்ரோம் பிரவுசர் பயன்படுத்தும் போது, நீங்கள் புக்மார்க் செய்ய விரும்பும் பக்கத்திற்கு சென்று அட்ரஸ் பாரில் உள்ள ஸ்டார் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- புக்மார்க்கின் பெயரை பதிவு செய்து அதற்கான பெயரை பதிவிட்டுக் கொள்ளலாம்.
- ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் புக்மார்க்கில் நோட் செய்து கொள்ள புக்மார்க்ஸ் பாரை ரைட் கிளிக் செய்து எடிட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் நீங்கள் சேர்க்க நினைக்கும் தகவல்களை பதிவிட்டு அதனை சேமிக்கக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இந்த அம்சம் பயன்படுத்தும் போது க்ரோமில் பெயர் படுகையில் 198 வார்த்தைகளுக்கு மேல் நீளும் பட்சத்தில் க்ரோம் அவற்றை (...) என்றே காண்பிக்கும்.

பயர்பாக்ஸ்
பயர்பாக்ஸ் பிரவுசரில் புக்மார்க் நோட் செய்வது சற்றே எளிமையான காரியம் தான் என்பதோடு, க்ரோமில் செய்ததை போன்றது தான் என கூறலாம்.
- நீங்கள் புக்மார்க் செய்ய விரும்பும் வலைத்தள பக்கத்திற்கு சென்று அட்ரஸ் பாரில் உள்ள ஸ்டார் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- புது புக்மார்க் பாப் அப் ஆப்ஷனில் நீங்கள் சேர்க்க வேண்டிய குறிப்புகளை பதிவு செய்ய வேண்டும்.
-பின் நீங்கள் பதிவு செய்தவற்றை சேமிக்கக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- க்ரோம் போன்று இல்லாமல் பயர்பாக்ஸ் சேவையில் அதிகபட்சம் 2000 வார்த்தைகள் வரை பிதிவிட முடியும். மவுஸ் புக்மார்க்கின் மீது படும் போது அவை ஸ்கிரால் ஆகும்.
- ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும் புக்மார்க்கிலும் குறிப்புக்களை சேர்க்க முடியும். இதற்கு குறிப்பிட்ட புக்மார்க்கை ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இனி நீங்கள் சேர்க்க விரும்பும் தகவல்களை பதிவிட்டு, பின் அவற்றை சேமிக்கலாம்.

கீவொர்ட்ஸ்:
பயர்பாக்சில் இவ்வாறு செய்ய மற்றொரு வசதியாக கீவொர்ட்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் புக்மார்க்களை மிக எளிமையாக கண்டறிய முடியும். அட்ரெஸ் பாரில் கீவொர்ட்களை டைப் செய்து புக்மார்க் செய்யப்பட்ட பக்கத்தில் என்டர் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
கீவொர்ட்ஸ் பதிவிட வேண்டிய பகுதியில் நோட்சை பதிவிடலாம். இதேபோன்று புக்மார்க்களில் டேக்களையும் பதிவிட முடியும். இவ்வாறு செய்ய நீங்கள் புக்மார்க் செய்ய விரும்பும் இடத்தில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டீஸ் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து குறிப்புகளை பதிவிட்டு அவற்றை சேமித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications