சுதந்திர தினத்திற்கு பின் ஜம்மு காஷ்மீரில் 4 ஜி சேவை: மத்திய அரசு!

|

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

370-வது பிரிவு ரத்து

370-வது பிரிவு ரத்து

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் 370 பிரிவை ரத்து செய்து ஓராண்டு நிறைவடைந்தது. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஓராண்டு காலத்தில் பயங்கரவாத செயல்கள் பெருமளவு குறைந்திருக்கின்றன என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அதிவேக இணைய சேவை

அதிவேக இணைய சேவை

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து அதிவேக இணைய சேவைக்கு தற்போதுவரை அங்கு தடை நீடித்து வந்தது. இதையடுத்து 4ஜி சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு 4 ஜி சேவை

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு 4 ஜி சேவை

ஜம்மு காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு 4 ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சர்வதேச எல்லைகளை இணைக்கும் பகுதிகள் மற்றும் எல்லைக் கோட்டு பகுதிகளில் இந்த தளர்வகுள் வழங்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் தொடங்கப்படும்

சோதனை அடிப்படையில் தொடங்கப்படும்

சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் இரண்டு மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஜம்முவிலும் இரண்டாவது மாவட்டம் காஷ்மீரிலும் 4 ஜி சேவை சோதனை அடிப்படையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா: விண்வெளி வீரர் பகிர்ந்த கலபகோஸ் தீவு.! வைரல்.! என்ன சிறப்பு?நாசா: விண்வெளி வீரர் பகிர்ந்த கலபகோஸ் தீவு.! வைரல்.! என்ன சிறப்பு?

பாதுகாப்பான பகுதிகளில் மட்டும்

பாதுகாப்பான பகுதிகளில் மட்டும்

4ஜி சேவையானது சில பாதுகாப்பான பகுதிகளிலும், தீவிரவாத செயல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே செயல்முறைக்கு வரும் எனவும் உள்ளூர் ஏஜென்சிகளிடம் இதுகுறித்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கை

இதில் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கோ, ஆன்லைன் கல்வி உள்ளிட்டவைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15-க்கு பிறகு சோதனை அடிப்படையில்

ஆகஸ்ட் 15-க்கு பிறகு சோதனை அடிப்படையில்

பயங்கரவாத நடவடிக்கை குறைவாக உள்ள பகுதிகளில் 4ஜி சேவை ஆகஸ்ட் 15-க்கு பிறகு சோதனை அடிப்படையில் தொடங்கப்படும். முதற்கட்டமாக ஜம்முவில் ஒரு மாவட்டத்திலும் காஷ்மீரின் ஒரு மாவட்டத்திலும் இந்த சோதனை தொடங்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
4G internet Service Going to Start Trial Basis In Jammu Kashmir From After August 15: Central Government

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X