வேறொரு கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது 'சிங்க்' (Sync) வசதியை பெறுவது எப்படி?

By Siva
|

இன்றைக்கு இயங்கி வரும் பெரும்பாலான பிரெளசர்களில் சின்சிங்(Syncing) என்று கூறப்படும் ஒத்து போகும் வசதி உள்ளது. அதாவது ஒரு கம்ப்யூட்டரில் செய்து வைக்கப்பட்டுள்ள புக்மார்க், ஹிஸ்ட்ரி, பாஸ்வேர்ட் உள்பட பல விஷயங்களை வேறொரு கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போதும் பெற்று கொள்ளும் வசதிக்கு பெயர் தான் சின்சிங் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது விரிவாக பார்ப்போம்

கூகுள் குரோம்

கூகுள் குரோம்

உலகின் நம்பர் ஒன் பிரெளசர் என்று கூறப்படும் குரோம் பிரெளசரில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சின்சிங் வசதி காணப்படுகிறது. ஒரு கம்ப்யுட்டரில் நீங்கள் மெயில் ஐடியை ஓப்பன் செய்தாலே போது ஆட்டோமெட்டிக்காக நீங்கள் வேறொரு கம்ப்யூட்டரில் பயன்படுத்திய புக்மார்க், பாஸ்வேர்ட், ஹிஸ்ட்ரி உள்பட சேமித்த அனைத்த தகவல்களையும் பெறலாம்.

அதுமட்டுமின்றி நீங்கள் பயன்படுத்திய செயலிகள், எக்ஸ்டென்ஷன்கள், ஃபார்ம்கள், செட்டிங்ஸ், தீம்ஸ் ஆகியவைகளையும் எளிதில் பெறலாம். மேலும் இந்த வசதி வேறொரு கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யும்போது தேவையில்லை என்றாலும் அதற்கும் ஆப்சன்கள் உண்டு

இந்த வசதியை நீங்கள் பெற வேண்டுமானால் கூகுள் குரோமை ஓப்பன் செய்தவுடன் வலது ஓரத்தில் உள்ள மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்,. அதில் செட்டிங் செலக்ட் செய்து, ஆப்சன் சென்று அதில் உள்ள சிங்க் ஆப்சனை கிளிக் செய்தால் போதும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வசதியான ஆப், ஆட்டோபில் டேட்டா, புக்மார்க், எக்ஸ்டென்ஷன்கள், பிரெளசர் ஹிஸ்ட்ரி, பாஸ்வேர்ட், மற்றும் இதர செட்டிங் உள்பட இவற்றில் ஏதாவது சிலவற்றையோ அல்லது மொத்த வசதியையோ நீங்கள் உங்கள் விருப்பப்படி பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவேளை மேற்கண்ட எதுவும் தேவையில்லை என்றால் டர்ன் ஆஃப் செய்துவிட்டால் போதும்

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்

குரோமில் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் கிடைக்கும். ஆனால் ஒன்றே ஒன்று வித்தியாசம். நீங்கள் புதிய கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் அக்கவுண்டில் லாக்-இன் செய்திருக்க வேண்டும். அதன் பின்னர் விண்டோஸ் பட்டனை கிளிக் செய்து அதில் உள்ள சிங்க் செலக்ட் செய்து 'சிங்க் யுவர் செட்டிங் செலக்ட் செய்து டர்ன் ஆன் செய்துவிட்டால் போதும்

மொசில்லா பயர்பாகஸ்

மொசில்லா பயர்பாகஸ்

இதுவும் கூகுள் குரோமில் பெறும் சிங்க் வசதிகள் அனைத்தும் கிடைக்கும் ஒரு பிரெளசர் ஆகும். வலது ஓரத்தில் உள்ள செட்டிங் பட்டனை கிளிக் செய்து அதன் பின்னர் சிங்கில் லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்த பின்னர் உங்களுக்கு சிங்க் வசதி கிடைக்கும். அதன் பின்னர் 'சேவ் செட்டிங்ஸ்; செய்துவிட்டால் போதும்

Best Mobiles in India

English summary
These days, most of the browsers come with Syncing capabilities in order to help the users. Generally, Syncing lets you share your data and preferences including bookmarks, history, passwords, and much more across all your devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X