Subscribe to Gizbot

சொன்னா நம்பவா போறீங்க, நீங்களே பாத்துக்கோங்க..!

Posted By:

கேக்குறவன் கேனை பையலா இருந்தா... "ஷங்கர் படத்தோட பட்ஜெட் 2 கோடி"னு சொல்லுவானாம்...! அப்படியாக சிலவற்றை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆகா பார்த்தே தெரிஞ்சுக் கோங்க மக்களே..!

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

சொல்லப்போனால் நாமலாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க..! தியேட்டர்ல, ஜம்னு சீட்ல உக்காந்து, படம் பாக்குறோம்..! அந்த காலத்துலலாம் அப்படி இல்ல மக்களே, மண் தரை தான்..! அதுவும் கொஞ்சம் உயரமான ஆள் முன்னாடி உக்காந்து இருந்தா.. உடனே மண் மேடு ஒன்னு உருவாக்கி, அது மேல ஏறி உக்காந்து தான் படம் பாக்கணும். அது மட்டும் இல்லங்க... ஆண்கள், பெண்கள் என பிரிச்சுடுவாங்களாம்..!

நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க பாஸ்..!

இப்போ சொல்லுங்க ப்ளூ-ரே பிரிண்ட், அதிநவீன சவுண்ட் சிஸ்டம், 3டி தொழில்நுட்பம், பிரம்மாண்டமான தியேட்டர்கள் என நாமெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க, அப்படிதானே..! ஆனால் உண்மை என்னவென்றால்.. நம்மள விட 'கொடுத்து வச்சவங்க' இருக்காங்க, அதாவது நம்மள விட அதிகமான, அட்டகாசமான, பிரம்மாண்டமான முறையில் தொழில்நுட்ப வசதிகள் படைத்த தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள்தான் - 'அவர்கள்'..!

"அப்படி என்னப்பா பெரிய தியேட்டர்..?" என்று கொந்தளிப்பவர்கள் பின் வரும் ஸ்லைடர்களை பார்க்கவும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒலிம்பியா மியூசிக் ஹால், ப்ரான்ஸ்..!
  

படுத்துக்கிட்டே படம் பார்க்கலாம்..!

 சை - ஃபை, டைன் தியேட்டர், டிஸ்னி'ஸ் ஹாலிவுட் ஸ்டுடியோஸ்..!
  

காரில் உக்காந்துக்கிட்டே படம் பார்க்கலாம்..!

சை - ஃபை டைன் தியேட்டர், டிஸ்னி'ஸ் ஹாலிவுட் ஸ்டுடியோஸ்..!
  

கார் பந்தய படங்கள் பார்க்க அருமையான தியேட்டர்..!

யூரனியா நேஷ்னல் ப்லிம் தியேட்டர், புடாபெஸ்ட், ஹங்கேரி..!
  

அரண்மனையா..? தியேட்டரா..!?

குர்ஷூம்லி அன் இன் ஸ்கோப்ஜி, மெஸ்டோனியா..!
  

கிரியேட்டிவ் ஆவணப்பட திருவிழாவிற்காக உருவாக்கப்பட்டதாம்..!

ஃபாக்ஸ் தியேட்டர், டெட்ரியோயிட் மீ..!
  

இதுக்குள்ள போனா படம் பார்க்க தோனுமா..? இல்ல தியேட்டரை பாக்க தோணுமா..?

புஸ்கின் ஆர்ட் சினிமா, புடபெஸ்ட், ஹங்கேரி..!
  

கலா ரசிகர்கள் போல..!

அரேனா, புலா, க்ரோடியா..!
  

வரலாற்று சிறப்புமிக்க தியேட்டர் போல..!

 மூவி தியேட்டர், பாரீஸ்..!
  

மிதந்து கொண்டே பார்க்கலாம்..!

மூவி தியேட்டர், பாரீஸ்..!
  

லைஃப் ஆஃப் பை படம் பார்க்கணும்னா, இப்படிதான் பார்க்கணும்..!

எலெக்ட்ரிக் சினிமா, நாட்டிங் ஹால்..!
  

ராஜகவனிப்புனு சொல்லுவாங்களே... அது இது தான்..!

ரிவர்பேட் சினிமா, கோஸோவா..!
  

இது தியேட்டர் இல்ல, ஒரு காதல் கவிதை..!

அனிபர் லேக் சினிமா, பேஜா, கோஸோவா..!
  

குளத்தில் மீன் பிடித்துக் கொண்டே படம் பார்க்கலாமோ.?!!

ஹாட் ட்யூப் சினிமா, லண்டன்..!
  

ஆமாம்.. ஆமாம்... ரொம்பவே ஹாட் தான்..!

தி பிஜொவ் தியேட்டர், ப்ரிட்ஜ்போர்ட்..!
  

பசித்தால் பக்கத்துல இருக்குற டேபிள்க்கு போய் சாப்பிட்டுக்கலாம்..!!

சினிடிகா டி எல் மாட்டாடிரோ, ஸ்பெயின்..!
  

சினிமா தியேட்டர்களின் சொர்கம் என்றால் அது இது தான்.!

 டாக்கு ஃபேஸ்ட், கோஸோவோ..!
  

'உயர்ந்த' சினிமா தியேட்டர் இதுதான் போல..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here some Most Beautiful cinemas around the world.
Please Wait while comments are loading...

Social Counting

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot