'ஆட்டோ டெபிட்' விதிமுறையில் தொடரும் சிக்கல்கள்.. மக்களின் நிலை என்ன?

|

மாதாந்திர சந்தா புதுப்பித்தல் பரிவர்த்தனைகளை உங்களால் மேற்கொள்ள முடியாவிட்டால், இணையம் மற்றும் தொழில்நுட்பம் பொறுப்பாகாது என எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) -க்கு இணங்க இன்னும் பல "உயர் வங்கிகள்" அதன் ஆட்டோ டெபிட் முறையில் மாற்றங்களை மேற்கொள்ளாத காரணமாக நீங்கள் சில சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஆட்டோ டெபிட் விதி முறையில் ஏற்படும் சிக்கல்

ஆட்டோ டெபிட் விதி முறையில் ஏற்படும் சிக்கல்

ரிசர்வ் வங்கியின் ஆட்டோ டெபிட் விதிமுறைகள் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆர்பிஐயின் ஆட்டோ டெபிட் விதி முறையில், புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து, அது நடைமுறைக்கு வந்து விட்ட போதிலும், இன்னும் சில வங்கிகள் அதை முறையாகச் செயல்படுத்தாமல் உள்ளது என்று ஏராளமானோர் புகார் அளித்து வருகின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எழும் சில சிக்கல்கள்

வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எழும் சில சிக்கல்கள்

மக்களுக்குச் சேவை மற்றும் பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான கட்டணத்தை ஆட்டோ டெபிட் முறையில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து வந்தது. இந்த செயல்முறையில் வாடிக்கையாளர்களுக்கு சில சிக்கல்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி, ஆட்டோ டேவிட் முறையில் சில விதிமுறை மாற்றங்களை அறிவித்து அமல்படுத்தியுள்ளது. இதன் படி, அமேசான் இந்தியாவில் அதன் பிரைம் சந்தா சேவைக்கான இலவச சோதனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..

ரிசர்வ் வங்கியின் புதிய விதி என்ன சொல்கிறது?

ரிசர்வ் வங்கியின் புதிய விதி என்ன சொல்கிறது?

அமேசான் எடுத்த இந்த முடிவிற்கு "ஆட்டோ பணம் செலுத்தும் செயல்பாட்டில் காணப்பட்ட உராய்வுகள்" தான் காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், சமீபத்திய அறிக்கையின்படி, நெட்ஃபிக்ஸ் நிறுவனமும் கூட அதன் கட்டண முறையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளின்படி, வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் தொகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

ரூ. 5,000 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு

ரூ. 5,000 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு

வாடிக்கையாளரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, காண்டாக்ட்லெஸ் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வரம்பு, கார்டுகள் மூலம் பணம் செலுத்துவது மற்றும் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்துவது அல்லது தானாக மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கான வரம்பை ரூ. 2,000 -திலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றது.

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை.. இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை.. இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?

ஒரு முறை கடவுச்சொல் இனி கட்டாயமா?

ஒரு முறை கடவுச்சொல் இனி கட்டாயமா?

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ரூ. 5,000 மேல் பணம் செலுத்துவதற்கு, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்ப வேண்டும். புதிய ஆர்பிஐ விதிகள் பரஸ்பர நிதி, எஸ்ஐபி, சமமான மாதாந்திர தவணைகளுக்கான வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட எந்த நிலையான அறிவுறுத்தல்களையும் பாதிக்காது. IANS அறிக்கையின்படி, புகார் வணிகர்களுக்குப் பணம் செலுத்துவதையும் இது பாதிக்காது.

இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க மக்களே

இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க மக்களே

ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, வாடிக்கையாளர்கள் ஒரு முறை பதிவு செய்யும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும், மேலும் கூடுதல் காரணி அங்கீகாரம் இல்லாமல் அடுத்தடுத்த பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துவிட்டது, இருப்பினும் கூட, இன்னும் வணிகங்கள் மற்றும் வங்கிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து நடைமுறை சிக்கல்கள் எழுந்துகொண்டு இருப்பதனால் மக்கள் இன்னும் சிக்கலைச் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
Facing Trouble During Renewal Subscription Transactions Then Auto Debit Rule Might Be The Reason : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X