நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..

|

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பல ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது என்ற தகவலை நிறுவனம் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, நிறுவனம் தெரிவித்துள்ளபடி இன்னும் 10 நாட்களுக்குள் குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் தடை செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான காரணம் மற்றும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என்று பார்க்கலாம்.

என்ன? நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் இந்த போன்களில் எல்லாம் செயல்படாதா?

என்ன? நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் இந்த போன்களில் எல்லாம் செயல்படாதா?

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயல்படாவிட்டால், உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களில் இருந்து நீங்கள், உங்களின் வாட்ஸ்அப் காண்டாக்ட் நண்பர்களுக்கு எந்தவித மெசேஜ்களையும் அனுப்ப முடியாது. அதேபோல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பவோ பார்க்கவோ முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களின் கவனத்திற்கு

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களின் கவனத்திற்கு

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் அறிவிப்பில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் இரண்டின் பழைய பதிப்புகள் இனி வாட்ஸ்அப் சேவையை ஆதரிக்காது என்று நிறுவனம் கூறியுள்ளது. இதன்படி, ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் உள்ளவர்கள் மட்டும் இனி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும். அதேபோல், ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனர்கள் மட்டுமே இனி வாட்ஸ்அப் மெசேஜிங் செயலியைப் பயன்படுத்த முடியும்.

ஆப்பிள் iPhone SE 3 தான் 'கடைசி'.. இதற்கு பின் 'இந்த' அம்சம் கிடைக்காது.. என்ன விஷயம் தெரியுமா?ஆப்பிள் iPhone SE 3 தான் 'கடைசி'.. இதற்கு பின் 'இந்த' அம்சம் கிடைக்காது.. என்ன விஷயம் தெரியுமா?

உங்கள் ஸ்மார்ட்போன் எந்த ஓஎஸ் பதிப்பில் இயங்குகிறது?

உங்கள் ஸ்மார்ட்போன் எந்த ஓஎஸ் பதிப்பில் இயங்குகிறது?

மேலே குறிப்பிட்டுள்ள ஓஎஸ் பாதிப்புகளை விட குறைந்த பதிப்புகளில் செயல்படும் எந்த ஸ்மார்ட்போனிலும் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போன் எந்த வெர்ஷன் ஓஎஸ் உடன் இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ள, உங்கள் மொபைல் செட்டிங்ஸ் இல் உள்ள சாப்ட்வேர் அப்டேட் விருப்பத்தை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். இத்துடன் நிறுவனம், நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போனின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

இந்த போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது.. பட்டியலை செக் பண்ணுங்க..

இந்த போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது.. பட்டியலை செக் பண்ணுங்க..

நவம்பர் 1 ஆம் தேதி முதல் அந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்ற ஸ்மார்ட்போன்களின் முழுமையான பட்டியல் இதோ.

ஆப்பிள்

 • ஐபோன் 6 எஸ் (iPhone 6S)
 • ஐபோன் 6 எஸ் பிளஸ் (iPhone 6S Plus)
 • ஆப்பிள் ஐபோன் எஸ்இ SE (Apple iPhone SE)
 • பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

  சாம்சங்

  சாம்சங்

  • சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் லைட் (Samsung Galaxy Trend Lite)
  • கேலக்ஸி SII (Galaxy SII)
  • கேலக்ஸி ட்ரெண்ட் II (Galaxy Trend II)
  • கேலக்ஸி எஸ் 3 மினி (Galaxy S3 mini)
  • கேலக்ஸி கோர் (Galaxy Core)
  • கேலக்ஸி எக்ஸ் கவர் 2 (Galaxy Xcover 2)
  • கேலக்ஸி ஏஸ் 2 (Galaxy Ace 2)
  • எல்ஜி

   எல்ஜி

   • எல்ஜி லூசிட் 2 (LG Lucid 2)
   • ஆப்டிமஸ் எல் 5 டூயல் (Optimus L5 Dual)
   • ஆப்டிமஸ் L4 II டூயல் (Optimus L4 II Dual)
   • ஆப்டிமஸ் F3Q (Optimus F3Q)
   • ஆப்டிமஸ் F7 (Optimus F7)
   • ஆப்டிமஸ் F5 (Optimus F5)
   • ஆப்டிமஸ் L3 II Dual (Optimus L3 II Dual)
   • ஆப்டிமஸ் F5 (Optimus F5)
   • ஆப்டிமஸ் L5 (Optimus L5)
   • ஆப்டிமஸ் L5 II (Optimus L5 II)
   • ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..

    எல்ஜி இல் இத்தனை போன்களா?

    எல்ஜி இல் இத்தனை போன்களா?

    • ஆப்டிமஸ் L3 II (Optimus L3 II)
    • ஆப்டிமஸ் L7 (Optimus L7)
    • ஆப்டிமஸ் L7 II Dual (Optimus L7 II Dual)
    • ஆப்டிமஸ் L7 II (Optimus L7 II)
    • ஆப்டிமஸ் F6 (Optimus F6)
    • எனக்ட் (Enact)
    • ஆப்டிமஸ் F3 (Optimus F3)
    • ஆப்டிமஸ் L4 II (Optimus L4 II)
    • ஆப்டிமஸ் L2 II (Optimus L2 I)
    • ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி மற்றும் 4 எக்ஸ் எச்டி (Optimus Nitro HD and 4X HD)
    • ZTE போன்கள்

     ZTE போன்கள்

     • ZTE கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் (ZTE Grand S Flex)
     • கிராண்ட் எக்ஸ் குவாட் வி 987 (Grand X Quad V987)
     • ZTE V956 (ZTE V956)
     • கிராண்ட் மெமோ (Grand Memo)
     • வளர்ந்து வரும் வாட்ஸ்அப் பேமெண்ட்- அப்டேட் ஆவோமா: வாட்ஸ்அப்-ல் பணம் அனுப்புவது எப்படி?- ஒரே கிளிக் போதும்!வளர்ந்து வரும் வாட்ஸ்அப் பேமெண்ட்- அப்டேட் ஆவோமா: வாட்ஸ்அப்-ல் பணம் அனுப்புவது எப்படி?- ஒரே கிளிக் போதும்!

      ஹுவாய் போன்கள்

      ஹுவாய் போன்கள்

      • ஹுவாய் அஸெண்ட் ஜி740 (Huawei Ascend G740)
      • அஸெண்ட் டி குவாட் எக்ஸ்எல் (Ascend D Quad XL)
      • அஸெண்ட் மேட் (Ascend Mate)
      • அஸெண்ட் P1 S (Ascend P1 S)
      • அஸெண்ட் D2 (Ascend D2)
      • அஸெண்ட் டி 1 குவாட் எக்ஸ்எல் (Ascend D1 Quad XL)
      • இதற்கான தீர்வு அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா?

       இதற்கான தீர்வு அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா?

       இந்த ஸ்மார்ட்போன்களை வைத்துள்ள பயனர்களுக்கு இனி நவம்பர் 1 ஆம் தேதி முதல் முற்றிலுமாக வாட்ஸ்அப் இயங்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியைக் கேட்கும் நபர்களுக்கு, நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து புதிய போனை மாற்றுவது மட்டும் தான் ஒரே வெளியாக இருக்கும், ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் iOS அப்டேட் இனி கிடைக்காது என்பதனால் வாட்ஸ்அப் பயனர்கள் அவர்களின் சேவையை தொடரமுடியாது.

Best Mobiles in India

English summary
WhatsApp Will Stop Working On These Phones From November 1st Check The Full List Here : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X